லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

திறமைகளை வளர்த்துக்கொள்ள சரியான நேரம்!

சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
News
சரண்யா

அனுபவம் புதுமை

கொரோனா லாக் டெளன் நமக்கு பலவிதமான பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது. பொறுமை, சூழ்நிலையைக் கையாளுதல், சமையல், கிராஃப்ட் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம். சரி, பிரபலங்கள் அப்படி என்ன கற்றுக்கொண்டார்கள்... அவர்களிடமே கேட்போம்.

ஆண்ட்ரியா, திரைப்பட நடிகை

லாக் டெளனுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு காபி மட்டும்தான் போட தெரியும். இப்போ அப்படி கிடையாது. ஆரம்பத்தில் வேற வழி இல்லாம சமைக்க ஆரம்பிச்சேன். அதுக்குப் பிறகு, சமைக்கிறதை என்ஜாய் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

திறமைகளை வளர்த்துக்கொள்ள சரியான நேரம்!

எங்க வீட்ல, அம்மா பாட்டி ரொம்ப ஈஸியா கேக் செய்கிறதைப் பார்த்திருக்கேன். அதையே நானும் செய்யலாம்னு முயற்சி செய்தேன். நமக்கே நமக்கானதை நாமே செய்து பார்க்கிறது செம சந்தோஷமா இருக்கு... புதுவித உணர்வையும் தருது. எனக்குப் பிடிச்ச கேக், பாவ் பாஜி போன்றவற்றை வீட்டிலேயே செய்து பார்த்தேன். உண்மையைச் சொல்லணும்னா சமையல்ல இப்போ மாஸ்டர் செஃப்னு சொல்லிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டேன்.

இது தவிர, சோஷியல் மீடியால இப்ப டிரெண்டிங்ல இருக்கே விர்ச்சுவல் போட்டோஸ்... அதெல்லாம் எப்படி எடுக்கணும்னு கத்துக்கிட்டேன்.

திருப்தி!

ஷெரின், திரைப்பட நடிகை

லாக் டெளனால வீட்டுக் குள்ளேயே இருக்கிறது ரொம்ப போர் அடிக்குது. `பிக் பாஸ்' வீட்டுக்குள்ள இருந்தபோது சமையல், டான்ஸ், ஆக்டிவிட்டீஸ்னு நேரம்போனதே தெரியலை.

திறமைகளை வளர்த்துக்கொள்ள சரியான நேரம்!

பிக் பாஸ் வீட்டுல கிடைச்ச ஒரு என்டர்டெயின்மென்ட்கூட இப்போ கிடைக்க மாட்டேங்குது. குறிப்பா, வீட்டுல சண்டை போடுற துக்கு யாருமில்லை. அதனால, புதுப்புது டிஷ்களை நானே சமைச்சுப் பார்த்து, வீடியோ எடுத்து என் சோஷியல் மீடியா பக்கத்துல போட்டுட்டு இருக்கேன். சமையல் வீடியோவை எடிட் பண்றது மாதிரியான புது விஷயங்களையும் கத்துக்கிட்டேன். இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசு. ஆனா, சிறப்பா பண்ணிட்டு இருக்கேன்.

மகிழ்ச்சி!

சரண்யா, சின்னத்திரை நடிகை

ரு நாவல் எழுதிட்டு இருக்கேன். தோட்டப் பராமரிப்பு ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டுல சித்த வைத்தியம், ஆயுர்வேதம் மாதிரியான இயற்கை சார்ந்த விஷயங்கள் மீது அதிக நம்பிக்கை இருக்கு. ஏற்கெனவே வீட்டுல சந்தனமல்லி, மூங்கில், மருதாணி, நெல்லி, செம்பருத்தி, கறிவேப்பிலை, வாழை, முருங்கை, கொய்யா, தூதுவளைனு செடிகளும் மரங்களும் நிறைய இருக்கு. வயிற்றுவலி, தலைவலி, அலர்ஜின்னு எதுவா இருந்தாலும் மிளகு, நல்லெண்ணெய், அதிமதுரம் போன்ற பொருள்களை வெச்சே உடம்பைச் சரி பண்ணிக்கலாம்னு அம்மா அப்பா நினைப்பாங்க.

திறமைகளை வளர்த்துக்கொள்ள சரியான நேரம்!

அப்புறம் ராத்திரியானாலே, அம்மா, அப்பா, நான், என் செல்லக்குட்டி மோமோ எல்லாரும் மொட்டை மாடிக்குப் போயிடுவோம். அப்பா விசில் மூலமா பாட்டு பாடறதுல எக்ஸ்பர்ட். உண்மையைச் சொல்லணும்னா, லாக் டெளன்ல வாழ்க்கை ரொம்பவே அழகா இருக்கு.

சிறப்பு!

நட்சத்திரா, டி.வி தொகுப்பாளர்

திறமைகளை வளர்த்துக்கொள்ள சரியான நேரம்!

ம்ம திறமைகளை வளர்த்துக்கறதுக்கான சரியான நேரம் இதுதான். மேக்கப், சமையல், புத்தகங்கள், ஆன்லைன் கோர்ஸ்னு எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. லாக் டெளன் புண்ணியத்துல துணி துவைக்க கத்துக்கிட்டேன். கேட்க கொஞ்சம் சிரிப்பா இருந்தாலும் அதுதான் உண்மை. சமைக்கிறது, துவைக்கறது... இந்த மாதிரியான அடிப்படை விஷயங்கள்தானே சர்வைவலுக்கு அவசியம். அப்புறம் யூடியூப் பார்த்து சைன் லாங்குவேஜ் கத்துக்கிட்டேன். நாம கத்துக்கிட்டதை மத்தவங்களுக்கு சொல்லித்தரும்போதுதான் அதுக்கான அர்த்தம் முழுமையா இருக்கும். அதனால, நான் கத்துக்கிட்ட விஷயங்களை வீடியோ வாக்கி சோஷியல் மீடியால பகிர்ந்துட்டு வர்றேன்.

அருமை!

‘அறந்தாங்கி’ நிஷா, சின்னத்திரை நடிகை

திறமைகளை வளர்த்துக்கொள்ள சரியான நேரம்!

சேமிப்புங்கிறது எவ்வளவு அத்தியா வசியமான ஒண்ணுங்கிறதை எனக்கு லாக் டெளன் உணர வைச்சிருக்கு. நான் நிகழ்ச்சிகள்ல பங்கேற்க முடியாததுனால, இப்போதைக்கு என் கணவரோட சம்பாத்தியத்துல சமாளிச்சுட்டு இருக்கோம். அதை அவரு அடிக்கடி கிண்டல் பண்ணுவாரு. ‘என் காசுலதான் இப்போ சாப்பிடற. நான் நில்லுன்னா நிக்கணும். உட்காருன்னா உட்காரணும்’ என்பார். இதைத்தவிர ஒரு புது விஷயம் நான் கத்துகிட்டது என்னன்னா... நாங்களும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில வேலை பார்க்கிறோம். அட... என்ன ஆச்சர்யமா இருக்கா... யெஸ். வீட்டுல இருந்தே வீடியோஸ் மூலம் காமெடி, ரகளை பண்ணி அனுப்பிட்டு இருக்கேன். அதெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப புது அனுபவமா இருக்கு.

புதுமை!