சார்லீஸ் ஏஞ்சல்ஸ் டிரெய்லர்
ஹாலிவுட் 90ஸ் கிட்ஸின் அபிமான படங்களின் ரீபூட்(மறுஆக்கம்) மற்றும் சீக்குவல்களைச் செய்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் `அலாதின்', `ஜுமாஞ்சி', `டாய் ஸ்டோரி 4' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. இந்த வரிசையில் 2000ம் ஆண்டு கேமரூன் டயஸ், லுஸி லியு, ட்ரூ பேரிமோர் ஆகியோர் நடித்து வெளிவந்த `சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' இந்த வருடம் ரீபூட் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.
நடிகை எலிஸபெத் பேங்க்ஸ் இப்படத்தை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். பிரபல பாப் இசை பாடகிகள் அரியானா கிராண்டே, மைலி சிரஸ் மற்றும் லாணா டெல் ரே ஆகியோர் இந்தப் படத்துக்காக இணைந்து பிரத்யேகப் பாடல் ஒன்றை இயற்றியுள்ளனர்.