
அந்த 18 ரகசியங்கள்!


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்த’ படத்தை முடித்தபிறகு மேலும் ஒரு படத்தில் நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் ரஜினி. அந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என்கிறார்கள்.

கமல்ஹாசனுக்கு அவரின் படங்களில் பயன்படுத்தப்படும் பொருள்கள் மிகவும் பிடித்துவிட்டால், படப்பிடிப்பு முடிந்ததும் அதைத் தனது வீட்டிற்குக் கொண்டு வந்து பத்திரமாக வைத்திருப்பாராம். அப்படி அவர் பத்திரமாக வைத்திருக்கும் ஒரு பொருள், ‘ஹேராம்’ படத்தில் அவர் பயன்படுத்திய புல்லட்.

தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படப் பிடிப்பு நடந்தால் ரொம்பவே குஷியாகி விடுவாராம், விஜய். ஷூட்டிங் முடிந்ததும் சாலைகளில் வாக்கிங் செல்வதையும், ஷாப்பிங் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இரவு முழுவதும் விழித்திருந்து பகலில் தூங்குவதுதான் சிம்புவின் பழக்கமாக இருந்து வந்தது. ஆனால், உடம்பைக் குறைக்க வேண்டும் என முடிவு எடுத்தபின் இரவு சீக்கிரம் தூங்கி காலை 4 மணிக்கே எழுந்துவிடுகிறாராம். தினமும் குறைந்தது 4 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கியிருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் வந்த ‘அது இது எது’ நிகழ்ச்சியின் ‘சிரிச்சா போச்சு’ எபிசோடுகளுக்கு, தனுஷ் மிகப்பெரிய ரசிகர். தனது லேப்டாப்பில் ‘சிரிச்சா போச்சு’ என்று ஒரு போல்டரில் பல வீடியோக்களைச் சேகரித்து வைத்திருக்கிறாராம். அப்செட்டாக இருக்கும் நேரங்களிலெல்லாம் அந்த போல்டரைத்தான் க்ளிக் செய்வாராம்.

ஹாலிவுட் படங்கள் என்றால் அஜித்திற்குக் கொள்ளைப்பிரியம். டாம் க்ரூஸ், வில் ஸ்மித் படம் என்றால் மிஸ் செய்யாமல் பார்த்துவிடுவாராம்.

`தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் தன்னை ஹீரோவாக்கிய இயக்குநர் சீனு ராமசாமியின் மீது எப்போதும் அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறாராம், விஜய் சேதுபதி. சீனு ராமசாமியின் பிறந்தநாளின் போது எங்கு இருந்தாலும் அவரைச் சந்தித்து, மாலை அணிவித்து மரியாதை செய்வதை வழக்கமாகவும் வைத்திருக்கிறாராம் விஜய் சேதுபதி.

ஷங்கருக்கு ப்ரீ டைம் கிடைக்கும் போதெல்லாம் 1950 மற்றும் 60-களில் வெளியான படங்களைப் பார்ப்பார். அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குநர்களின் படங்கள் அனைத்தும் ஷங்கரின் கலெக்ஷனில் இருக்கிறதாம்.

ஓய்வு நாள்கள் என்றால் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதுதான் சிவகார்த்திகேயனின் பொழுதுபோக்கு. ஆனால், சமீப காலமாக கிரிக்கெட்டில் இருந்து புட் பாலுக்கு மாறியிருக்கிறாராம்

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று முறையாவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வது த்ரிஷாவின் வழக்கம். நண்பர்களைப் பார்ப்பதற் காகவும், தனது பிறந்த நாளைக் கொண்டாடு வதற்காகவும் வெளிநாட்டுக்குச் செல்லும் த்ரிஷா, இந்த ஆண்டு கொரோனா காரணமாக எங்குமே செல்லாமல் இருக்கிறார்.

நயன்தாரா ஆன்மிகத்திலும் ஜோதிடத்திலும் அதிக நம்பிக்கையுடையவர். அதற்காகத்தான் அடிக்கடி வெவ்வேறு ஊர்களில் இருக்கும் கோயிலுக்குச் செல்கிறார் என்கிறார்கள்.

பேஷன் டிசைனிங் முடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனக்கான காஸ்ட்யூம்களை அவரே வடிவமைத்துக் கொள்வது வழக்கம்.

ஒரு டென்டுக்குள் பீன் பேக் போட்டு அமர்ந்துகொண்டு மானிட்டர் பார்ப்பது இயக்குநர் பாலாவின் வழக்கம். இவரைத் தவிர அந்த மானிட்டர் பக்கம் யாருக்கும் அனுமதி கிடையாது.

இசையைத் தாண்டி கார்கள்மீது அதீத காதல் கொண்டவர் இசையமைப் பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். புதுப்புது கார்கள் வந்தால் உடனே வாங்கி எப்படியி ருக்கிறது எனப் பார்த்து விடுவாராம். வீட்டிலேயும் கார் பொம்மைகள் அதிகம் வைத்திருக்கிறாராம்.

எஸ்.பி.பி-யின் பாடல் பதிவின் போது ரஹ்மான் ரொம்பவே எனர்ஜியாக இருப்பாராம். எஸ்.பி.பி-யிடம் அதிகமாக டேக்ஸ் வாங்குவதும், ‘ஒவ்வொரு டேக்கின் போதும் நீங்க ஒவ்வொரு மேஜிக்கைச் சேர்த்துக்கொண்டே போறீங்க சார். அதுனாலதான் நிறைய டேக் கேட்கிறேன் என்பதை அதற்கு காரணமாகவும் சொல்லுவாராம்.

இயக்குநர் மணிரத்னம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதாவது அழகாகத் தெரிந்தால் உடனே தன்னுடைய மொபைலில் போட்டோ எடுத்து வைத்துக் கொள்வாராம். அங்கு வேலை செய்யும் யாராக இருந்தாலும் நல்ல புகைப்படத்துக்கான அம்சம் இருந்தால் அவர்களையும் போட்டோ எடுத்து பிறகு அவர்களுக்குக் காட்டுவாராம்.

40 வருடங்களுக்கு மேலாக பிரசாத் லேப்பில் இருந்த ஸ்டூடியோவில் இசைய மைத்துக் கொண்டிருந்த இளையராஜா, அங்கு ஏற்பட்ட பிரச்னைக்குப் பின் கோடம்பாக்கத்தில் தனக்கெனத் தனி ஸ்டூடி யோவை அமைத்திருக் கிறார்.

ஷூட்டிங் இல்லாத வீக் எண்ட் என்றால் சூர்யாவும் ஜோதிகாவும் குழந்தைகளை காரில் அழைத்துக்கொண்டு ஈ.சி.ஆருக்குச் சென்றுவிடுவார்களாம்.