சினிமா
தொடர்கள்
Published:Updated:

“‘பீஸ்ட்’ வேற டைரக்டர் பண்றதா இருந்தது!”

மனோஜ் பரமஹம்சா
பிரீமியம் ஸ்டோரி
News
மனோஜ் பரமஹம்சா

கௌதம்மேனன் சார்னாலே மியூசிக்தான். இசைக்கு அவ்ளோ முக்கியத்துவம் கொடுப்பார். அவர் இயக்கறதா இருந்த ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ல தான் நாங்க நட்பானோம்.

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்', விஜய்யின் ‘பீஸ்ட்' என டாப் ஹீரோக்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக கவனம் ஈர்க்கும் மனோஜ் பரமஹம்சாவிடம் பேசினேன்.

“பார்வையாளர்களைத் தியேட்டருக்குக் கொண்டு வர்றது என்பது ஹாலிவுட்காரங்களுக்கே சிரமமா இருக்கு. சினிமா ஒரு விஷுவல் மீடியம். எல்லாரையும் தியேட்டருக்கு அழைச்சிட்டு வரணும்னா, விஷுவல்ஸ் கவரணும். அதை எல்லாம் மனசுல வச்சுத்தான் இப்போ விஷுவல்களுக்கு செலவு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ‘பீஸ்ட்' படத்துக்கு என்னைக் கேட்டபோது நான் தெலுங்கில் பிஸியா இருந்தேன். அப்ப இந்தப் படத்தை வேறொரு இயக்குநர் பண்றதா இருந்தது. வேற ஒரு கதை அது. ஆரம்பத்துல விஜய் சாரும், நானும்தான் இந்த புராஜெக்ட்ல இருந்தோம். அப்புறமாத்தான் நெல்சன் சார் இந்தப் படத்துக்குள் வந்தார். விஜய் சார்தான் டைரக்டர்கிட்டேயே என்னை அறிமுகப்படுத்தி வச்சார். என்னோட தெலுங்கு ஒர்க்குகளை விஜய் சார் கவனிச்சிட்டு இருந்ததால, இங்கே என்னை அழைச்சிட்டு வந்தார்...''

“‘பீஸ்ட்’ வேற டைரக்டர் பண்றதா இருந்தது!”

``ஒரு படம் சரியா போகாமல், அதில் ஒளிப்பதிவு மட்டும் பேசப்படுறதை எப்படி எடுத்துப்பீங்க?’’

‘‘நான் பண்ற ஒர்க் எப்பவுமே கதையோட பொருந்திப்போகணும்.தனியா துருத்திக்கிட்டு நிற்கக்கூடாதுன்னு விரும்புவேன். ஆனா சில படங்களுக்குப் பேச வரும்போதே, ‘விஷுவல்ஸ் அழகா இருக்கணும்’னு கேட்பாங்க. ‘ராதே ஷ்யாம்’ டிஸ்கஷன் போதே, ஒவ்வொரு பிரேமும் அழகா வேணும்னு கேட்டாங்க. அதை நானும் சிரத்தை எடுத்துப் பண்ணிக்கொடுத்தேன். படம் சரியாப் போச்சா, இல்லை யாங்கிறதைத் தாண்டி ஒளிப்பதிவை நிறைய பேர் பாராட்டினாங்க. அதிலும் ஓ.டி.டி-யில் வந்தபிறகு பாராட்டுகள் இருமடங்காச்சு.''

“‘பீஸ்ட்’ வேற டைரக்டர் பண்றதா இருந்தது!”
“‘பீஸ்ட்’ வேற டைரக்டர் பண்றதா இருந்தது!”

`` ‘விண்ணைத் தாண்டி வருவாயா'வில் இருந்து தொடர்ந்து கௌதம்மேனனுடன் பயணிக்கிறீங்க. அந்த அனுபவத்தைச் சொல்லுங்க...’’

‘‘கௌதம்மேனன் சார்னாலே மியூசிக்தான். இசைக்கு அவ்ளோ முக்கியத்துவம் கொடுப்பார். அவர் இயக்கறதா இருந்த ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ல தான் நாங்க நட்பானோம். அது வரல. அப்புறம் ‘வி.டி.வி’யில் இணைந்தோம். அவரோட ஸ்கிரிப்ட் படிக்கும் போது ஒவ்வொண்ணுக்கும் அவர் விவரிச்சு எழுதியிருக்கறதே பிரமிக்க வைக்கும். இங்கிலீஷில்தான் எழுதியிருப்பார். சில வார்த்தைகள் புரியாதுன்னு அகராதியைப் புரட்டினால், ஒவ்வொரு வார்த்தைக்கும் ரெண்டு மூணு அர்த்தங்கள் இருக்கும். இதுல எந்த அர்த்தத்தை எடுத்துக்கறதுன்னு யோசிக்க வச்சிடுவார். விஷுவல் நல்லா வரணும்னு ஒரு இயக்குநர் நினைச்சா மட்டும்தான், ஒரு ஒளிப்பதிவாளரால அதைக் கொடுக்கமுடியும். ‘எழுத்துல கவனம் செலுத்துறது மட்டும்தான் என் வேலை. அதைச் சிறப்பா காட்சிப்படுத்துறது ஒரு கேமராமேனோட வேலை’ன்னு கௌதம் நினைப்பார்.”

“‘பீஸ்ட்’ வேற டைரக்டர் பண்றதா இருந்தது!”
“‘பீஸ்ட்’ வேற டைரக்டர் பண்றதா இருந்தது!”
“‘பீஸ்ட்’ வேற டைரக்டர் பண்றதா இருந்தது!”

``தெலுங்கில் ரவிதேஜா, பிரபாஸ், பவன்கல்யாண்... மலையாளத்தில் மோகன்லால் படங்கள்னு பெரிய பட்ஜெட் படங்கள் பண்றீங்க. நம்ம டெக்னீஷியன்கள் நிறைய பேர் அங்கே போக என்ன காரணம்?’’

‘‘நம்ம டெக்னீஷியன்களை அவங்க ரொம்பவே விரும்பி அழைக்கிறாங்க. தமிழ்ல இருந்து ஒருத்தர் அங்கே வந்திருக்கார்னா அவ்ளோ மரியாதை கொடுக்கறாங்க. மேலும் மலையாளத்துக்கும் நமக்குமே அவ்ளோ பெரிய வித்தியாசம் இருக்காது. ரெண்டு பேருக்குமே கொடுக்கல் -வாங்கல் உறவுதான். மலையாளத்திலும் இப்ப பெரிய பட்ஜெட் படங்கள் வர ஆரம்பிச்சிடுச்சு. அவங்களும் படங்களுக்காக செட்கள் நிறைய போடுறாங்க. அதிலும் ஓ.டி.டி வந்த பிறகு அங்கே உள்ள படங்களைப் பார்க்கறப்ப, இளம் ஒளிப்பதிவாளர்கள் கதையை அவ்ளோ அழகா உள்வாங்கிப் பண்றாங்க. இதெல்லாம்தான் காரணங்கள்.''