சினிமா
தொடர்கள்
Published:Updated:

காபி வித் காதல் - சினிமா விமர்சனம்

காபி வித் காதல் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
காபி வித் காதல் - சினிமா விமர்சனம்

‘காபி வித் காதல்' எனக் கவிதையாகத் தலைப்பைப் பிடித்த இயக்குநர் சுந்தர்.சி ஒரு ரொமான்டிக் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.

மூன்று சகோதரர்களின் படு குழப்பமான காதல் கதைகளை சுவாரஸ்யம் குறைவாகச் சொன்னால் அதுதான் ‘காபி வித் காதல்.'

ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் மூவரும் சகோதரர்கள். இவர்களின் சகோதரி திவ்யதர்ஷினி ஜீவாவுடன் இரட்டையராகப் பிறந்தவர். இசை ஆசிரியரான ஸ்ரீகாந்துக்கு இல்வாழ்க்கை கசந்துவிட ரைசாவுடன் நெருக்கமாகிறார். ஸ்டார்ட் அப் நிறுவன முதலாளியான ஜீவா, ஐஸ்வர்யாவுடனான காதல் தோல்வியால் சொந்த ஊர் திரும்புகிறார். பொறுப்பில்லாமல் சுற்றும் ஜெய் மீது அவரின் தோழியான அமிர்தாவுக்குக் காதல். ஆனால், சொத்துக்காக ஜெய், மாளவிகா சர்மாவைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார். மாளவிகாவைக் காதலிக்கும் ஜீவா, குடும்பத்துக்காக ரைசாவைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதிக்கிறார். இந்தத் திருமணத்தை எப்படியேனும் நிறுத்த ஸ்ரீகாந்த் சதி செய்கிறார்... என்ன, குழப்பமாக இருக்கிறதா? இப்படியான குழப்பங்கள் கடந்து யார், யாருடன் இணைந்தார்கள் என்பதே குழப்... ஸாரி, கதை.

காபி வித் காதல் - சினிமா விமர்சனம்

‘காபி வித் காதல்' எனக் கவிதையாகத் தலைப்பைப் பிடித்த இயக்குநர் சுந்தர்.சி ஒரு ரொமான்டிக் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்கள் தவிர (மறைந்த நடிகர்) பிரதாப் போத்தன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சம்யுக்தா, இது போதாதென கெஸ்ட் ரோலில் ஆர்யா, விடிவி கணேஷ் என அடிஷனல் ஷீட் கேட்கும் அளவுக்கு ஆட்களை இறக்கியவர், திரைக்கதை வந்த பார்சலை மட்டும் டெலிவரி எடுக்காமல் விட்டுவிட்டார் போல! ஜீவா, திவ்யதர்ஷினி, அமிர்தா மட்டுமே தங்களின் கதாபாத்திரங்களுக்கான நியாயத்தைச் சேர்த்திரு க்கின்றனர்.

ஊட்டிதான் லொக்கேஷன். பணக்காரத் திருமணங்கள்தான் கதை என்பதாலோ என்னவோ, காஸ்ட்யூம், கலை வடிவமைப்பு ஏரியாக்களில் ஸ்கோர் செய்கிறது படம். வழக்கமான ஊட்டியில் இ.கிருஷ்ணசாமியின் வழக்கமான ஒளிப்பதிவு. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஆறுதல் அளிக்கிறார், பாடல்களில் அல்ல!

காபி வித் காதல் - சினிமா விமர்சனம்

டிடி மற்றும் பிரதாப் போத்தன் பேசும் சில வசனங்கள் மட்டுமே ஈர்க்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அறிமுகக் காட்சிகள் வைக்கும்போதே அவர்களின் முடிவு எப்படியிருக்கப்போகிறது என்பதுவரை சுலபமாக யூகித்துவிட முடிகிறது. போகிற போக்கில் வரும் சில ட்விஸ்ட்கள்கூட க்ளைமாக்ஸில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

காமெடியும் இல்லை, காதலும் இல்லை என்பதால் காபி ரொம்பவே ஆறியிருக்கிறது.