"என்னுடைய கனவு ஃபைட் மாஸ்டர் ஆகணும் என்பதுதான்! எதிர்பாராமல் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டேன்னுதான் சொல்லணும்" என்றவாறு பேசத் தொடங்கினார், நடிகர் முத்துக்காளை.

"கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி வரை ரொம்ப குடிப்பேன். வடிவேலு அண்ணன் கிண்டலா குடிச்சு, குடிச்சே சாகப்போறீங்க பாருங்கடான்னு சொல்லுவார். அந்த அளவுக்கு குடிச்சிட்டு இருந்த நான் குடியை விட்டு இப்போ என் குடும்பத்தோட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கேன். குடியினால் பல இடங்களில் அவமானங்களைச் சந்திச்சிருக்கேன்" என்றவர் அவரிடம் இருக்கும் பொக்கிஷப் புகைப்படங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
"2005-ல் என்னுடைய திருமணம் நடந்துச்சு. திருமண வரவேற்பிற்கு பெரிய நடிகர்கள் பலர் வந்திருந்தாங்க. என்னோட ரிசப்ஷனில் நாங்க எடுத்த ஒரு புகைப்படம் மட்டும் ரொம்பவே ஸ்பெஷல். வடிவேல் சாரும், விவேக் சாரும் சேர்ந்து ஒன்றாக ஒரே நிகழ்வுக்குப் போக மாட்டாங்களாம். அப்படியே போனாலும் தனித்தனியா போய்ட்டு வருவாங்களாம். என் வரவேற்பில் வடிவேலு சாரும், விவேக் சாரும் ஒண்ணா சேர்ந்து எங்க கூட ஃபோட்டோ எடுப்பாங்க. அதுமட்டுமில்லாமல், வடிவேலு சாருடன் சேர்ந்து நடிக்கிற நடிகர்களும், விவேக் சாருடன் சேர்ந்து நடிக்கிற நடிகர்களும் அந்த போட்டோவில் இருப்பாங்க. அந்த மாதிரியான ஒரு புகைப்படம் நிச்சயம் யாருக்கும் கிடைச்சிருக்காது... இனி கிடைக்கவும் வாய்ப்பில்லை!" என்றார்.

முத்துக்காளை அவருடைய நடிப்பு பயணம் குறித்து பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவற்றை காண இங்கே கிளிக் செய்யவும்!