அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 22

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

வாழற வரைக்கும் கட்டுப்பாடா இருந்துட்டம்னா கஷ்ட நஷ்டம் நமக்கு இல்ல...

சுபத்திரிக்குப் போயிருந்தேம்ணே!

அதென்னமோ ஃபுல்பாடி செக்கப்பாம்ல... வண்டிய சர்வீஸுக்கு வுட்டு ஓவராயிலிங் பாக்குறாப்ல ஒடம்பையும் வருஷத்துக்கொரு தடவ செக்கப்பு பண்ணணும்னு டாக்டரு சொன்னாரு. சரி, கழுத அதையுந்தேன் பண்ணிப் பாத்துருவோம்னு ஆசுபத்திரிக்குப் போனம்ணே!

ஊருக்குச் சண்டியர் னாலும் நாவிதரு கத்திரிக்கு பணியணும்பாய்ங்கள்ல, அப்பிடி ஆகிப் போச் சுண்ணே நம்ம நெலம். ஆத்தீ... ஒர்த்தரு எங் கையில ஒரு மெஷினக் கட்டி புஷ்ஷு புஷ்ஷுனு அடிக்கிறாரு. ஊசியில சுருக்குனு குத்தி ரத்தம் எடுக்கறாய்ங்க, எக்ஸ்ரே எடுக்கறம்னு நட்டுக் குத்தா படுக்கப் போட்டு பயமுறுத்தறாய்ங்க. ஹார்ட்டு நல்லாயிருக்கானு பாக்க ஓடிக்கேயிருக்கற ஒரு இரும்புத் தட்டு மேல ஏறி ஓடச் சொல்றாக. ஓடுன ஓட்டத்துல எனக்கெல்லாம் சும்மா கிஸ்ஸு கிஸ்ஸுனு வாங்கிருச்சு. அப்பறம் முட்டூனு சுத்தியலு வெச்சி அங்கங்க தட்டிப் பாக்குறாக.

வயசுல போலியோ மருந்து குடுக்க வந்தவய்ங்களப் பாத்தே பொடனியில குதிகாலு இடிக்க ஓடுன நானு. ஆசுபத்திரின்னா அம்புட்டு பயம்!

Vadivelu
Vadivelu

ஒடம்புக்கு ஒரு நோவுன்னா ஆத்தா மணித்தக்காளி சூப்பு வெச்சித் தந்து, அய்யனாரு கோயிலு விபூதிய அள்ளிப் பூசிவுடும். அம்புட்டு தேன் வைத்தியம். இங்கன பாத்தா செக்கப்புலயே ஆள பொரட்டிப் போடறாகளேப்பு! நல்லவேளையா ஆத்தா மீனாச்சி புண்ணியத்துல ஒடம்புல ஒரு கொறயும் இல்ல. ஆனா, இது இதெல்லாம் சாப்புடக் கூடாதுனு மளிகக்கட லிஸ்ட்டு கெணக்கா ஒரு லிஸ்ட்ட நீட்டுனாய்ங்க. ஊறுகா, அப்பளம், வத்தலு, மொளவானு நம்ம அயிட்டம் எதயும் தொடக் கூடாதுன்னுட்டாய்ங்க.

' ஆயில் இருந்தா ஆயுள் கொறயும்'னு நம்ம விஜய டி.ஆரு கெணக்கா சொல்லி வெறுப்பேத்துறாரு டாக்டரு. ' என்னா இது சின்ன புள்ளத்தனமா இருக்கு. இதயெல்லாஞ் சாப்புடாம நாங்க என்னா பாலைவனத்துலயா வாழ்றது? ' னு கேட்டா, ' ஏற்கெனவே ஒங்க பாடியில வைட்டமின் கம்மியா இருக்கு. இதுல ஓவர் பேச்சு வேறயா? ' னு சொல்லி படுக்கப் போட்டு, ஒரு குளுக்கோஸு பாட்டிலத் தொங்கவுட்டு, கையில ஊசியப் போட்டு ஏத்தி விட்டாய்ங்க. அப்பிடியே விட்டத்த பாத்த வாக்குல, அரை மணி நேரம் ஆடாம அசையாம கெடந்தம்ணே. ' சிங்கத்த சாச்சிப்புட்டாய்ங்களேடா'னு பேசாமக் கெடக்கேன். அப்பதாம்ணே மொத தடவயா இந்த ஒடம்பப் பத்தி கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேன்.

காக்கிலோ கருங்கல்லு தின்னாக் கூட செரிக்கிற ஒடம்புண்ணே இது. ஒரு மூட்டை காராச்சேவைக் கொட்டி வெச்சாலும் மொச்சுமொச்சுனு தின்னு தீத்துப்புடுவோம். மொச்சப் பயறு, சட்டிச் சோறு, பாட்டிலு, ஊறுகா, கறி, மீனு, முட்டைனு எதயும் விட்டதில்லியே! ஆனா, வௌஞ்சி நின்னதும் பொழப்பு தளப்பப் பாக்க ஆரம்பிக்கிறோம்ல.. அதோட முடியுது கத! அதும் பொண்டாட்டி, புள்ள குட்டினு பொறுப்பு சேர்ந்ததும் எல்லாத்தயும் கரை சேக்கணுமேனு கவலயும் சேந்துக்கும். அப்புறம் தின்னா சோறு எறங்காது, படுத்தா ஒறக்கம் வராது. நல்லாயிருக்கும் போது ஒடம்பயெல்லாம் பாக்காம ஓடி ஓடிச் சம்பாரிக்கறது... அப்பறம் நோவு வந்து, சம்பாதிச்ச காசையெல்லாம் ஒடம்புக்கே செலவு பண்றது... இதேன் மனுஷப் பய வாழ்க்!

உண்மையில ஒடம்புதாம்ணே மொதக் கோயிலு. கோயிலுக் குள்ளதா நாம இருக்கோம். இத யாரும் உணர்றதில்ல. என்னையுஞ் சேத்துதேன் சொல்றேன். இருக்கும் போது கண்டதக் கடியத வளைச்சி வளைச்சி திம்பாய்ங்க. திடுதிப்புனு ருன் னு டாய்ங்கன்னா கோதும ரொட்டி, அவுச்ச கீர, சீனியில்லாம காபினு பத்தியம் இருக்க ஆரம்பிப்பாய்ங்க. கொலக்குத்தம் பண்ற ரேஞ்சுக்கு ஆருக்கும் தெரியாம போயி சிக்கன் பிரியாணி வாங்கித் தின்னுப்புட்டு, நாலு நாளைக்கு குற்றவுணர்ச்சியிலயே அலைவாய்ங்க. இன்னுஞ் செல பேரு இருக்காய்ங்க. எந்நேரமும் முசுமுசுனு கோவமாத் திரிவாய்ங்க. எம்புட்டு பெரிய சோக்கு அடிச்சாலும், மூஞ்சில சிரிப்பே இல்லாம மூஞ்சூரு கெணக்கா நிப்பாய்ங்க. ஒரு நா டாக்டரு கூப்பிட்டு ' ஒனக்கு பிரஷருப்பா, கோவப்படக் கூடாது'னு சொல்லிட்டாருன்னா, கோவப்படக்கூட முடியாம அப்பிடியே கொந்தளிச்சி போயித் திரிவாய்ங்க. இந்தா... இந்த மெரீனா பீச்சு பக்கம் காலங் காத்தால போனா, காந்தி செல பக்கத்துல ரவுண்டு கட்டி நின்னு சிரிக்கறாய்ங்கண்ணே. போறவன் வர்றவனெல்லாம் அட லூஸுப் பயலுவளா'னு பாக்கற மாதிரி கே.... கே..... கோ... கோனு சிரிக்கிறாக. அதுஒரு வைத்தியமாம்ணே. அப்பிடிப் பாத்தா கோடிக் கணக்கான சனங்கள கும்மியடிச்சுச் சிரிக்க வைக்கிற நாங்கள்லாம் எம்.பி.பி.எஸ். படிக்காத டாக்டருதாண்ணே!

விஞ்ஞானம் வளர வளர, வியாதியும் வளந்து போச்சுண்ணே. சாதா காச்சல்லயிருந்து எய்ட்ஸ் வரைக்கும் எம்புட்டு வெரைட்டியில நோயிங்கள மனுஷப்பய அனுபவிக்கிறான். ' ரவைக்கு நல்லாத்தேன் இருந்தாரு. டி.வி - யெல்லாம் பாத்துப் பேசி சிரிச்சுக் கிருந்தாரு. திடுதிப்புனு நெஞ்சு வலிக்குதுன்னாரு. டொப்புனு போயிச் சேந்துட்டாரு'னு எம்புட்டு எடத்துல கேள்விப் படறோம். இருக்கற வரைக்கும் ஒடம்புல நோவு, தாவு இல்லாம நல்லா இருந்தா, அதேன் சந்தோஷம்!

நானெல்லாம் ஒரு நாளைக்கு நாலு பாக்கெட்டு சீரெட்டு கொளுத்தித் தீத்த பய. தம்மப் போட்டாதேன் மூள வேல செய்யுதுனு, பொகய ஊதிக்கிட்டு நடமாடும் கொசு வண்டியா அலைஞ் சவய்ங்க. ஒரு நா அதாவே ஓவராகிப் போயி, ஒடம்பு சரியில்லாம போயி இருமலு ஜாஸ்தியாயிருச்சு. ரவைக்கெல்லாம் தூங்காம கொள்ளாம இருமிக்கேயிருக்கேன். வூட்டுல என் பொண்டாட்டி புள்ளைகனு அம்புட்டும் தூங்கல.

சின கண்ணுல தண்ணியோட மும் எந்திரிச்சி உக்காந்துருக்காக. என்னங்க..... என்ன பண்ணுது னு வீட்டுக்காரம்மா கஷாயம் வெச்சித் தந்து, எங் கையப் புடிச்சிக்கிட்டே உக்காந்திருக்கு. ' அப்பா, என்னப்பா செய்யுது? ' னு புள்ளைக எம் மொகத் தையே பாக்குதுக. அப்பிடியே மூணு நாளைக்கு கிருந்தம்ணே. மூணு நாளும் வூட்டுல ஆரும் தூங்கல. அப்பவே முடிவு பண்ணிட்டேன்..

Vadivelu
Vadivelu

மேல இம்புட்டுப் பாசம் வெச்சிருக்கவுகளுக்காக இந்த சீரெட்டக்கூட வுடலன்னா அப்பறம் என்னா மனுஷன் நானு? அன்னிலேருந்து அந்தப் பழக்கத்த ஒழிச்சிப்புட்டம்ணே. அண்ணே... என்னிக்கிருந்தாலும் ஒரு நா இல்லீன்னா ஒரு நா டாக்டரு சொல்லி, சீரெட்ட நிறுத்தித்தான் ஆகணும். அத இன்னிக்கே நிறுத்திட்டா, ஒனக்கும் நல்லது..... வீட்டுக்கும் நல்லது. அட, ரஜினி அண்ணனே இப்ப சீரெட்டு புடிக்கறதில்ல தெரிஞ்சுக்கோ, ஆமா!

அதே மாதிரிதேன் குடி! குடி குடியைக் கெடுக்கும்ங்கறது கரெக்டான பேச்சு. நம்மாளுக பல பேரு வானம் பூமி தெரியாம குடிச்சுப்புட்டு அப்பிடியே ரோட்ட அளக்கிற மாதிரி நடப்பாய்ங்க. பல எண்ணெயில் பொரியற நடிச்சாதான் கோழி, மொளவாத் ல நிலைக்க தூக்கலா முட்ட அந்த நடிகை பரோட்டானு ஒரு காட்டு ருக்கிறது காட்டிப்புட்டு குப்புற ட்டுது? ” பாட ' மூடா ' அடிச்சிக் கொறட்ட வுட்டா போதும்னு கயை! " இருக்காய்ங்க... திடுதிப்புனுகுமார் ஒரு நா ஒடம்பு வேலயக் காட்டும்ல. கனவுல சித்திரகுப்தன் வந்து சீட்டெழுதித் தார மாதிரியே பயந்து போயித் திரிவாய்ங்க. காலையில பாத்தா மதுரைக்கும் மெட்ராஸுக்குமா வாக்கிங் போவாய்ங்க. அலோபதி, அம்பிகாபதினு அம்புட்டு பதிகளையுந் தேடி ஓடுவாய்ங்க. பஞ்சராகிப் போன காலத்துல அக்குபஞ்சர் தேடி அலைவாய்ங்க. எதுக்கு இந்த செரமம்ணே? வாழற வரைக்கும் கட்டுப்பாடா இருந்துட்டம்னா கஷ்ட நஷ்டம் இல்ல. நானும் அப்பிடி இப்பிடி இருந்த பயதேன்! அதனால இதெல்லாம் அட்வைஸு அனுபவம். டம்பே கோயில்னு அப்பிடின்னா அத எம்புட்டுச் சுத்தமா வெச்சிருக்கணும். ஒடம்பு கோயில்னா, பூசாரி யாரு? நாமதேன்!

- வருவேன்

(03.04.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)