அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 37

வடிவேலு
பிரீமியம் ஸ்டோரி
News
வடிவேலு

“வந்தாரை வாழவைக்கிற தமிழன்னு சும்மாவா சொன்னாக....”

போன வாரம் ஆபீஸுக்கு ஒர்த்தர அழைச்சிட்டு வந்தாய்ங்க. ஒட்டகம் மார்க் சீயக்கானு எழுதுன உள் பனியன் போட்டு அது ஊருக்கே தெரியற மாதிரி மெல்லிசா ஒரு ஜிப்பா போட்டுட்டு வந்தாரு. வாய் செவக்க வெத்தல, நெத்தியில நாமம், கக்கத்துல கைப்பைனு ஆளு பாக்கவே ஒரு மார்க்கமாத்தேன் இருந்தாரு.

'அண்ணே! பேரு மாத்தறதுல இவரு கில்லாடி'ன்னாய்ங்க பசங்க.

'பேரு மாத்தறதுலயா..? ' னு நா கொழம்புனா, ' ஆமாண்ணே... பேர வெச்சே நிகழ்காலம், எதிர்காலம், கஷ்டகாலம், நஷ்டகாலம்னு அம்புட்டையும் சொல்லிப் புடுவாரு'ன்னாய்ங்க.

ஆத்தீ.... அதையுந்தேன் பாத்துப் புடுவோம்னு உக்காந்தேன். ஒரு வெள்ளத் தாள்ல எம் பேர எழுதச் சொல்லி வாங்கி நல்லா உத்துப் பாத்தாரு. அப்பறம் எம் மூஞ்சிய குறுகுறுனு பாத்தாரு. அப்புறம் ரெண்டையும் மாத்தி மாத்தி பாக்க ஆரம்பிச்சாரு. எனக்கா திகிலாயிருச்சு. அப்பிடியே பாத்துக்கிருந்தவர் மொகம் லேசா மாறுது. கையால காத்துலக் கணக்கு போட்டுட்டே விட்டத்த பாத்தாரு.

வடிவேலு
வடிவேலு

'என்னா.... என்னா இருந்தாலும் சபையில சவுண்டா சொல்லிப்புடுங்க. நாங்கள்லாம் இரும்பு மனசுக் காரய்ங்க'னு சொன்னேன். ' எல்லாம் நல்ல விஷயந்தான்'னு மர்மச் சிரிப்பு சிரிச்சிட்டு, ' ஒரு குறில் நெடிலானா குன்று மலையாவும், ஓச கூடினா ஒசரம் கூடும்'னு எலக்கண ரவுசோட பேச ஆரம்பிச்சாரு. ஆனா ' புரியலங்கே... நேராவே சொல்லிப் புடுங்க'ன்னேன். ' இப்ப உம்பேரு வடிவேலு. கொறையொண்ணும் இல்ல வரவு இன்னும் இருக்குங்கறேன். உம் பேருல மூணு குறில் ஒரு நெடில் இருக்கு. இதுல இன்னொரு எழுத்தும் நெடிலானா அது ஒனக்கு அடுத்தபடியாவும். அதாவது இன்னிலேருந்து உம் பேரு வடீ வேலுனு மாத்துனா... சீக்கிரமே நீ ஹீரோவாயிருவ போட்டாரே ஒரு போடு.

' ஆஹா... இதான் பேரு மாத்தற யாவாராமா? ' ஹெர்ர்னு ஜெர்க்காகி ' அப்பறம்'னேன் ' அப்பிடியே கௌம்பி துண்டு சீட்டுல புதுப் பேர முக்கா முக்கா மூணு தடவ எழுதி, வடபழனி முருகன் கோயில்ல போட்டு எடுத்து ஒரு அர்ச்சனையப் பண்ணிப்புடுவோம். நான் ஸ்பெஷலா ஒரு பேர் பூஜ நடத்திர்றேன். என்னா.... அதுக்கு ஒரு பத்து ரூவா செலவாகும். பத்தாயிரந்தேன்'னாருல்ல. நா எந்திரிச்சிட்டேன். ' பேரெல்லாம் மாத்தற மாதிரி இல்ல'னு ஒரு அம்பது ரூவாய அவரு கையில குடுத்து அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சிண்ணே. பாத்தீகளா... ஒரு டியன்னாவ சுழிச்சிவுட்டு என்னைய ஹீரோவாக்கி காலி பண்ணப் பாததானேண்ணே! அப்பறம் வெசாரிச்சா, இப்ப இப்பிடியெல்லாம் ஒரு குரூப்பு கௌம்பியிருக்குனு சொன்னாய்ங்க. என்னமோ நாட்டுக்குள்ள அவுகளுக்கு இப்ப நல்ல மவுசாமே..!

புதுசா என்ன சொல்லிட்டு ஆரு வந்தாலும் வாய்பூரா பல்லோட அவிங்கள வைக்கறது நம்மாளுகதேன். எங்கூர்ல பீம புஷ்டி அல்வாம்பாய்ங்க. அதாவது அந்த அல்வாவ தட்டுல பரப்பி சருவத் தாள்ல மூடி, ஒரு உருட்டுக் கட்டை யாலயே ஓங்கி ஓங்கி அடிப்பாய்ங்க. கட்டதான் எவ்வி எவ்வி வருமே தவிர, அல்வா அப்பிடியே லப்பருக் கெணக்கா இருக்கும்ணே. 'பாத்தீங்களா.... இத்தாத்தண்டி கட்டைக்கே உருக்குலையாத அல்வா இது. இத சாப்பிட்டீங்கன்னா... அது எம்புட்டுப் பயக வந்தாலும் ஒத்த ஆளா நின்னு சுத்தவுட்டு சுண்ணாம்பு அடிக்கலாம்னு பேசியே அத வித்துருவாய்ங்க. நம்மாளு ஒரு அம்பது கிராம் அல்வாவ வாங்கி சாப்புட்டு அப்பிடியே கைய முறுக்கி முறுக்கி புஜபலம் பாப்பாய்ங்க. பீம புஷ்டி அல்வா சாப்புட்ட கொஞ்ச நேரத்துக்கு அந்த பீமங் கெணக்காவே அலைவாய்ங்க. இதவிடுங்க... உறுமா எண்ணெனு ஒண்ண ரோட்டுல போட்டு விப்பாய்ங்க. முதல்ல வேற ஒரு எண்ணெய ஒரு வௌக்கமாத்து குச்சியில் நெருப்புல தடவி எண்ணய காட்டு வாய்ங்க. அந்தக் குச்சி அப்பிடியே வளைஞ்சி சுருட்டிக் கும்ணே. அப்பறம் உறுமா எண்ணைய தடவி நெருப்புல காட்டுவாய்ங்க. வளஞ்ச குச்சி படக்குனு நிமிந்துக் கும்ணே. பார்றா என்ன ஆச்சர்யம் டா! ' னு அவனவனும் வாயப் பொளந்து பாக்கையிலேயே ' இதேன் உறுமா எண்ணெ யோட சக்தி. இத வாங்கி ஒடம்புல தடவுனா நரம்பெல்லாம் முறுக்கி வாலிப முறுக்கு கூடும். மூட்டுவலி பறக்கும், மூடு செறக்கும், வயசு மறக்கும்'னு அடுக்கு மொழியில பேசி கிடுக்கிப் பிடி போட்டு, அம்புட்டு எண்ணெயையும் வித்துருவாய்ங்க. அந்த வாங்கித் தடவிக்கிட்டு அவனவனும் முறுக்கு வரவேயில்லை யேடா! ' னு டென்ஷனா படுத்துக்கிருப்பாய்ங்க. இப்பிடியும் நடக்குது.

நம்மாளுக கொணம் என்னன்னா... ரோட்டுல திடுதிப்புனு வந்து எறங்கற ஒரு குருப்பு ' கீரியும் பாம்பும் சண்டை போடுகிற அரியக் காட்சி. வாரீர் வாரீர்... வந்து பாரீர்'னு கூப்பாடு போடுவாய்ங்க. அங்கிட்டு போற வார அம்புட்டுப் பேரும் வட்டங்கட்டி கூடிருவாய்ங்க. அவிங்க என்ன பண்ணுவாய்ங்கன்னா இத்துப்போன பாம்பு ஒண்ண கூடைக்குள்ளயே வெச்சி மெயின்டெய்ன் பண்ணிக்கிருப்பாய்ங்கண்ணே. வுட்டா ஓடிப்போயி சாஞ்சித் தூங்கற ஒரு வயசான கீரிய மூஞ்சில துணி போட்டு மூடி நிக்க விட்டிப்பாய்ங்க. பாம்பு பாட்டுக்கு ஒரு பக்கம் புஸ்சு புஸ்ஸுனுக்கிட்டு இருக்கும். இங்கிட்டுக் கீரி தள்ளாடிக்கிருக்கும். ' இதோ மோதப் போகின்றன. சண்டை தொடங்க இன்னும் சில மணித் துளிகளே உள்ளன'னு இவிங்க மல்யுத்த மோதலையே காட்டப்போறக் கணக்கா ஓயாம கத்தி கூட்டத்தக் கூட்டி காச வசூல் பண்ண ஆரம்பிச்சிரு வாய்ங்க.

வடிவேலு
வடிவேலு

அந்தி சாஞ்சி இருட்டற வரைக்கும் இப்பிடியே இழுத்து புடிச்ச கூட்டம் லேசா ஆரம்பிச்சிரும். கலைய அப்பிடியே மொள்ளமா அ பொட்டியக் கட்டிருவாய்ங்க. கடைசி வரைக்கும் கீரியும் பாம்பும் சண்ட போட்றது மட்டும் நடக்கவே நடக்காது. ஆனா, அங்கிட்டு நின்னுட்டு வாறவன் நாலு பேர்கிட்டப் போயி, ' சண்ட சூப்பரா இருந்துச் சுல்ல. கீரி என்னமா பொரண்டு பொரண்டு சண்ட போடுதுங்க சும்மா பெருமையா அடிச்சி விடுவாய்ங்க வெட்டிப் பயலுக மீ சைல மண்ணு ஒட்டலேன்ற கதை.

இங் கி ட் டு பட்டணத்துலயும் இது மாதிரி பல கூத்துங்க நடக்குதுதேன். எங்கிட்டாவது பெரிய ஓட்டல்கள்ல ஏ.சி ரூமப் போட்டு ஏலம் நடத்து வாய்ங்க. ' இதேன் சார்லி சாப்ளின் பயன்படுத்துன தொப்பி, இது ராணி மங்கம்மா ஏத்துன வௌக்கு, இது ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இருந்த எழுத்தாணீனு எக்குத் தப்பா வெல வெச்சி ஏலம் வுடுவாய்ங்க. அத வாங்கிட்டுப் போயி கூடத்துல மாட்டி ' எப்புடி? ' னு வாறவய்ங்க போறவய்ங்ககிட்ட காட்டி சந்தோஷப் படறதுல நம்மாளுகளுக்கு ஒரு பெரும.

இது ஒரு பக்கம்னா இப்பல்லாம் எதெதுக்குதேன் எலவசம் குடுக்கற துனு இல்லாம நெலகெட்டு போய்க்கிருக்கு. ஒண்ணு வாங்குனா ஒண்ணு எலவசம்னு ஆரம்பிச்சிது. இப்ப அது வாங்கினா இது எலவசம். அது வாங்குனா இது எலவசம்னு அது பாட்டு போயிருக் கிருக்கு ஆனா, எங்கிட்டு எது போட்டு வித் தாலும், கூட்டங்கூடி கொண்டாடி, அத வாங்கிப் பாத்துருவாக நம்மாளுக. வந்தாரை வாழவைக்கிற தமிழன்னு சும்மாவா சொன்னாக....

( வருவேன் )

(17.07.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)