ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

“மணி சார் படங்கள்ல வொர்க் பண்ணும்போது உலகமே அழகாயிடும்!”

காஸ்டியூம் டிசைனர் ஏகா லகானி
பிரீமியம் ஸ்டோரி
News
காஸ்டியூம் டிசைனர் ஏகா லகானி

- ‘பொன்னியின் செல்வன்’ காஸ்டியூம் டிசைனர் ஏகா லகானி

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர விருக்கும் ‘பொன்னியின் செல்வன்’. கதைக்களம், மாபெரும் நட்சத்திரக் கூட்டம் என எதிர்பார்ப்புகளுக்கு காரணங்கள் பல. முக்கியமான இன்னோர் எதிர்பார்ப்பு நட்சத்திரங் களின் உடைகள். சரித்திர நாவல் திரைப்படமாகும்போது இயல்பாக எழுகிற இந்த எதிர்பார்ப்பை சவா லாகச் செய்து முடித்திருக்கிறார் ஏகா லகானி. ‘ராவணன்’, ‘கடல்’, ‘ஓகே கண்மணி’, ‘காற்றுவெளியிடை’ என மணிரத்னம் படங்களின் ஃபேவரைட் காஸ்டியூம் டிசைனர்.

‘`நான் டிசைனர் ஆவேன்னு நினைக் கலை. மணிசார் படங்கள்ல வொர்க் பண்ணுவேன்னு நினைக்கலை. ‘பொன்னியின் செல்வன்’ மாதிரி மெகா புராஜெக்ட் பண்ணுவேன்னு நினைக் கலை. ஆனா, எல்லாமே நடந்திருக்கு...’’ மணிரத்னம் ஸ்டைல் வசனத்துடன் ஆரம்பிக்கிற ஏகா, மும்பைவாசி.

மணிரத்னத்துடன்
மணிரத்னத்துடன்

‘`எங்கப்பா டெக்ஸ்டைல் டிசைனர். மும்பையில பிளாக் பிரின்ட்டிங் யூனிட் வெச்சிருந்தார். ஃபேப்ரிக் சூழ வளர்ந்த வள் நான். காஸ்டியூம் டிசைனிங்குக் கான விதை அப்படித்தான் எனக்குள்ள விழுந்திருக்கணும். அப்பாவுக்கு நானும் அவருடைய பிசினஸ்ல இருக்கணும்னு ஆசை. அப்பா சொன்னதுக்காக அரை மனசோடு சம்மதிச்சேன். ஃபேமிலி பிசினஸ் பின்னணியே போதும்னு நான் நினைக்கலை. முறைப்படி ஃபேஷன் டிசைனிங் படிச்சா என்னால இன்னும் பெட்டரா பண்ண முடியும்னு நினைச் சுப் படிச்சேன்.

என்னுடைய ஸ்டைலிங் திறமைகளை இம்ப்ரூவ் பண்ணிக்க நியூயார்க் போயிருந்தேன். அங்கிருந்து வந்ததும் ஒரு ஃபேஷன் பத்திரிகையில வேலைக்குச் சேர்வேன்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா நடந்தது வேற... மணிரத்னத்தோட ‘ராவணன்’ படத்துல பிரபல ஃபேஷன் டிசைனர், சப்யாசாச்சி முகர்ஜி வொர்க் பண்ணார். அப்ப தனக்கு அசிஸ் டன்ட் தேடிட்டிருந்தார். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், விக்ரம்னு பெரிய நடிகர்கள் நடிக்கிறாங்கனு தெரிஞ்சது. காஸ்டியூம் அசிஸ்டன்ட் குழுவுல சேர்ந்து வொர்க் பண்ற வாய்ப்பு எனக்கு வந்ததும் யோசிக்காம ‘யெஸ்’ சொல்லிட்டேன்.

அந்தப் படம் எனக்கு இன்னொரு முறை காலேஜ் போன மாதிரி இருந்தது. காஸ்டியூம் டிசைனிங்னா என்ன, சினிமாவுக்கு எப்படி வொர்க் பண்ணணும்னு பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அப்ப ஆரம் பிச்ச காஸ்டியூம் டிசைனிங் லவ், இன்னும் கன்டினியூ ஆயிட்டிருக்கு...’’ கலர்ஃபுல் இன்ட்ரோ சொல்லும் ஏகா, அடுத்து சந்தோஷ்சிவனுடன் ‘உருமி’, மீண்டும் மணிரத்னத்துடன் ‘கடல்’, ‘ஓகே கண்மணி’, ‘காற்று வெளியிடை’... இதோ ‘பொன்னியின் செல்வன்’ வரை வளர்ந்திருக்கிறார்.

“மணி சார் படங்கள்ல வொர்க் பண்ணும்போது உலகமே அழகாயிடும்!”

‘`மணி சார் படங்கள்ல வொர்க் பண்ணும்போது உலகமே அழகாயிட்ட உணர்வு வரும். அவர் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே கொடுக்க ரொம் பவே முனைப்பு காட்டுவோம். என் வொர்க் பிர மாதமா வந்திருக்கிறதா நினைச்சு எடுத்துட்டுப் போய் மணி சார்கிட்ட காட்டுவேன். ‘வாவ்.... நல்லா வந்திருக்கு... இது நல்ல ஆரம்பம்... இதைத் தாண்டி நம்மால பண்ண முடியுமே...’னு புஷ் பண்ணுவார். அதை நோக்கி ஓடுவோம். அதுதான் மணி சார் மேஜிக். தன் பட யூனிட்ல உள்ளவங்ககிட்ட நிறைய பேசுவார். தான் கற்பனை பண்ணிவெச்சிருக்கிற, தான் எதிர்பார்க்குற உலகத்துக்குள்ள நம்மையும் கூட்டிட்டுப் போயிடுவார்’’ - சிலிர்ப்பவருக்கு, ‘பொன்னியின் செல்வன்’ வாய்ப்பு செம டஃப் கொடுத்திருக்கிறது.

‘` ‘பொன்னியின் செல்வன்’ புராஜெக்ட், மணி சாரோட பலவருடக் கனவுனு கேள்விப்பட்டிருக் கேன். அந்தப் படத்துக்கான ஆரம்பகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தபோது, அதுல வொர்க் பண்ற வாய்ப்பு எனக்கு வந்தா நல்லாருக்குமேனு ஆவலோட எதிர்பார்த்திட்டிருந்தேன். ஒரு வழியா அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. அந்த மொமென்ட் சந்தோஷத்தோட உச்சகட்டமா இருந்தாலும் அவ்வளவு பெரிய புராஜெக்ட்டை ஒழுங்கா பண்ணணுமேங்கிற பயமும் இருந்தது. லட்சக்கணக்கான மக்களால வாசிக்கப்பட்ட நாவல் ‘பொன்னியின் செல்வன்’. கல்கியோட எழுத்தும் மணியம் சாரோட ஓவியங்களையும் யாரும் மறந்திருக்க மாட்டாங்க. அப்படிப்பட்ட ஒரு நாவல் மணிரத்னம் மாதிரியான லெஜெண் டால படமா எடுக்கப்படறபோது எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. படத்துல என்னை கமிட் பண்ணதுமே மணி சார், ‘பொன்னியின் செல்வன்’ நாவலோட அத்தனை பாகங்களையும் எனக்கு அனுப்பி படிக்கச் சொன்னார்.

என்னை தஞ்சாவூருக்கு அனுப்பி அங்குள்ள கோயில்கள், சிற்பங்களை எல்லாம் ஸ்டடி பண்ணச் சொன்னார். நிறைய ரிசர்ச் பண் ணிட்டு வரச் சொன்னார். அந்த பீரியட்ல இருந்த வணிக கலாசாரம், அந்தக் காலத்து மக்கள் என்ன மாதிரி உடுத்தினாங்க, எதை யெல்லாம் தவிர்த்தாங்கனு தகவல்களைச் சேகரிச்சேன். இந்தியா முழுக்க உள்ள பெஸ்ட் நெசவாளர்கள்கிட்டருந்து துணிகளையும் தேடித்தேடி நகைகளையும் வாங்கினேன். காஸ் டியூம்ஸ்ல நேச்சுரல் டைதான் யூஸ் பண்ணி யிருக்கோம். நானும் என் டீமும் இந்த புரா ஜெக்ட்டுக்காக கடுமையா உழைச்சிருக்கோம். நிறைய சவால்கள் இருந்தாலும் ரசிச்சு ரசிச்சு வொர்க் பண்ண படம் இது...’’ சாதித்த பெருமிதம் ஏகாவின் பேச்சில்.

“மணி சார் படங்கள்ல வொர்க் பண்ணும்போது உலகமே அழகாயிடும்!”
“மணி சார் படங்கள்ல வொர்க் பண்ணும்போது உலகமே அழகாயிடும்!”

ஃபேஷன் டிசைனர், காஸ்டியூம் டிசைனர், ஸ்டைலிஸ்ட்... இவர்களில் ஏகா யார்?

‘`ஃபேஷன் டிசைனர், காஸ்டியூம் டிசைனர், ஸ்டைலிஸ்ட்... இவங்க எல்லாரும் ஒண்ணுதானாங்கிற கேள்வி பலருக்கும் இருக்கு. ஃபேஷன் டிசைனர்னா காஸ்டியூம் டிசைனிங்கும் பண்ணுவாங்க, காஸ்டியூம் டிசைனர்னா ஃபேஷன் டிசைனிங்கும் பண்ணுவாங்கன்னு நினைக்கிறாங்க. ஃபேஷன் டிசைனர் தன்னுடைய சொந்த டிசைன்களை உருவாக்கறவங்க. அப்படி உருவாக்கிற டிசைன்ஸ் முழுக்க முழுக்க அவங்களுடைய கற்பனை... ஆனா காஸ்டியூம் டிசைனர், படத்துக்காக, புராஜெக்ட்டுக்காக வொர்க் பண்றவங்க. ஒரு கேரக்டருக்கு என்ன மாதிரியான உடைகள் பொருந்தும்னு முடிவு பண்றவங்க அல்லது அந்த கேரக்டருக்கான உடைகளை டிசைன் பண்றவங்க.

அவங்க அந்த கேரக்டரை கிளாமராவோ, அழகாவோ, பிரமாண்டமாவோ காட்டத் தேவையில்லை. கதைக்கு என்ன தேவையோ அதுக்கேத்தபடி டிசைன் பண்றதுதான் அவங்க வேலை. ஸ்டைலிஸ்ட்டுங்கிறவங்க ஒரு நடிகர், நடிகையோட தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு அவங்களுடைய விருப்பத்துக் கேத்தபடி டிரஸ் டிசைன் பண்ணிக் கொடுக்கிறவங்க. இப்போ நான் யார்னு புரியுதா...’’ தெளிவான விளக்கம் சொல்பவர், அடுத்து கரன் ஜோஹருடன் ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி’, ராஜ்குமார் ஹிரானியுடன் ‘டங்கி’ என இரண்டு படங்க ளில் பிசி.

‘பி.எஸ்-2’-வுக்கான அழைப்புக்காகவும் மேடம் வெயிட்டிங்!