மதராசப்பட்டினம், தலைவா, லக்ஷ்மி, தேவி போன்ற படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவர் தற்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கும் முயற்சியில் உள்ளார். இதில் படத்தின் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கயிருக்கிறார்.

நடிகை அமலா பாலுடன் காதல் திருமணம் செய்துகொண்ட விஜய், பின் பல காரணங்களால் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து வாங்கினர். இதையடுத்து ஏ.எல். விஜய்க்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஐஸ்வர்யாவை மணம் முடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார் ஏ.எல்.விஜய்.
திருமணம் குறித்து விஜய் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர்,``என் குடும்பத்தினர் என் வாழ்க்கை துணைவியாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துள்ளனர். டாக்டர் ஆர்.ஐஸ்வர்யாவுடன் எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஜூலை 2019ல் முற்றிலும் ஒரு குடும்ப விழாவாக இந்தத் திருமணம் நிகழ்வு நடக்கவிருக்கிறது. உங்கள் முழு அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுடன் எனது வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன். '' என்று குறிப்பிட்டுள்ளார். '' இவரது திருமணத்துக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.