சினிமா
Published:Updated:

லவ் ஃப்ரம் லண்டன்!

ஆனந்த் ஷங்கர் - திவ்யங்கா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த் ஷங்கர் - திவ்யங்கா

என் உலகம் வீடுதான். வீடு, சந்தோஷம் தனி; பணம் சம்பாதிக்கறதுக்காக ஒரு வேலை... அது தனின்னு நான் இருக்கறது அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.

“அவங்களுக்குப் பூங்கொத்துன்னா ரொம்ப இஷ்டம். சென்னையோட சிறந்த கேக் ஷாப்ல ஒரு கேக் வாங்கிக் கொடுத்தாலே சந்தோஷத்துல பூரிச்சிடுவாங்க. கேக் தவிர, மாங்கா அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். தங்கம், வெள்ளி வாங்கிக் கொடுக்கறப்ப வரும் சந்தோஷத்தைவிட மாங்கா வாங்கிக் கொடுக்கும்போது அவங்க முகம் அப்படி மலரும். முதன்முதலா அவங்கள எங்கே பார்த்தேன், எங்களுக்குள் லவ் எப்படி ஏற்பட்டுச்சுன்னு சினிமா மாதிரி சொன்னாலே... ‘அட இது ரொம்ப பழைய சீனா இருக்கே’ன்னு நீங்களே சிரிக்க ஆரம்பிச்சிடுவீங்க...’’ நகைச்சுவையும் வெட்கப் புன்னகையுமாகப் பேச ஆரம்பிக்கிறார் ஆனந்த் ஷங்கர். ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’, ‘எனிமி’ என ஸ்டைலிஷ் படங்களைக் கொடுத்த இயக்குநர். இவரின் காதல் மனைவி திவ்யங்கா, ஐ.டி வேலையில் இருந்தவர். இப்போது ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தின் கோ-ரைட்டர்.

லவ் ஃப்ரம் லண்டன்!
லவ் ஃப்ரம் லண்டன்!
லவ் ஃப்ரம் லண்டன்!
லவ் ஃப்ரம் லண்டன்!

‘‘திவ்யங்கா பூர்வீகம் கரூர் பக்கம்னாலும் முன்னாடி சென்னையிலதான் அவங்க வீடு இருந்துச்சு. இங்கிருந்துதான் அவங்க லண்டன் போனாங்க. அங்கேயே படிச்சு, ஐ.டி வேலை பார்த்தாங்க. லண்டன்ல விடுமுறைனா சென்னைக்குப் பறந்து வந்திடுவாங்க. அப்படித்தான் 2015-ல சென்னை வெள்ளம் வந்தபோது பெசன்ட் நகர்ல உள்ள மக்களுக்கு ஒரு தன்னார்வத் தொண்டரா டிரஸ், உணவுன்னு கொடுத்துட்டிருந்தாங்க. என் நண்பரோட நண்பர்னால அங்கேதான் அவங்கள சந்திச்சேன். நண்பர்களானோம். மூணு வருஷ நட்பில், ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டோம். மறுபடியும் லண்டன் போயிட்டாங்க. அப்புறம் 2018-ல சென்னை வந்தாங்க. நட்பு இன்னும் ஸ்ட்ராங்க் ஆக... ஒரு கட்டத்துல அவங்க என்னை விரும்புறாங்கன்னு தெரிஞ்சதும் லவ்வைச் சொல்லிட்டேன். அந்த நேரத்துல நான் இயக்குநராகவும் பெயரெடுத்துட்டேன். ‘நோட்டா’ படம் போயிட்டிருந்தது. அதனால அவங்க வீட்லேயும் எளிதா சம்மதம் கிடைச்சிடுச்சு...’’ மகிழும் ஆனந்த், தொடர்கிறார்.

லவ் ஃப்ரம் லண்டன்!
லவ் ஃப்ரம் லண்டன்!
லவ் ஃப்ரம் லண்டன்!
லவ் ஃப்ரம் லண்டன்!

‘‘கல்யாணத்துக்குப் பிறகு சென்னையில ஒர்க் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. எங்க அப்பா- அம்மாகிட்ட இருக்கற சுயநலமில்லாத அன்பை, திவ்யங்காகிட்டேயும் பார்த்து பிரமிச்சிருக்கேன். என் உலகம் வீடுதான். வீடு, சந்தோஷம் தனி; பணம் சம்பாதிக்கறதுக்காக ஒரு வேலை... அது தனின்னு நான் இருக்கறது அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். எங்க வீடு, செல்ல நாய்க்குட்டி, என் மகள்னு நான் அதிக நேரம் செலவழிக்கறது திவ்யங்காவுக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு படைப்பாளிக்கு மனம் சந்தோஷமா இருக்கறது ரொம்ப அவசியம். நல்ல மனைவி, அன்பான சூழல் இருந்தாலே நாம குடும்ப வாழ்க்கையிலும் ஜெயிக்கலாம்னு உணர வச்சிருக்காங்க. நாளுக்கு நாள் அவங்களோட அன்பும் அக்கறையும் அதிகமாகிட்டே இருக்கு. எங்க குழந்தைக்கு ‘கியரா’ன்னு பெயர் வச்சிருக்கோம். ‘இளவரசி’ன்னு அர்த்தம். எங்க வீட்டுக்குச் செல்ல இளவரசியா கியரா வந்த பிறகு வாழ்க்கை இன்னும் அழகா, அர்த்தமுள்ளதா மாறியிருக்கு’’ - ஆனந்தமாகிறார் ஆனந்த் ஷங்கர்.