சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“காருக்குள் ஒரு கதை!”

ரியோ, ரம்யா நம்பீசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரியோ, ரம்யா நம்பீசன்

“ரியோவை வெச்சு படம் பண்றேன்னு வீட்ல சொன்னப்போ, என் பொண்ணு ரொம்ப எக்சைட் ஆகிட்டா.

“இந்தக் கதையில எல்லாமே சரியா ப்ளான் பண்ணிப் பண்றவங்க, எந்த ப்ளானும் இல்லாமல் இருக்கிறவங்கன்னு ரெண்டு வகையான ஆட்களும் இருக்காங்க. ஆனா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இலக்கு இருக்கும். அதை அடைஞ்சாங்களா இல்லையாங்கிறதுதான் படம்.

 “காருக்குள் ஒரு கதை!”
“காருக்குள் ஒரு கதை!”

தியேட்டருக்குள்ள வந்ததிலிருந்து தியேட்டரை விட்டுப் போகிறவரைக்கும் மக்களைச் சிரிக்க வைக்கணும்னு ப்ளான் பண்ணிப் பண்ணுனதுதான் ‘ப்ளான் பண்ணிப் பண்ணணும்’ ’’ எனப் பேசத் தொடங்குகிறார் ‘பாணா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘ப்ளான் பண்ணிப் பண்ணணும்’ படத்தை ப்ளான் செய்து இயக்கி முடித்திருக்கும் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

“ரியோவை வெச்சு படம் பண்றேன்னு வீட்ல சொன்னப்போ, என் பொண்ணு ரொம்ப எக்சைட் ஆகிட்டா. அப்போவே என் முடிவு சரின்னு நினைச்சேன். டிவியில இருந்து வந்த சிவகார்த்திகேயன் இன்னிக்கு ரொம்பப் பெரிய இடத்துல இருக்கார். அவர் டிவியில இருந்து ஒருத்தரைக் கைக்காட்டி அவரை வெச்சுப் படம் தயாரிச்சதை வெச்சே ரியோ பத்தித் தெரிஞ்சுக்கலாம். இந்தப் படத்துல ஹீரோயினுக்கு ரொம்பப் பெரிய கேரக்டர். ஹீரோவுக்கு எவ்ளோ சீன் இருக்கோ அதே அளவுக்கு ஹீரோயினுக்கும் இருக்கும். அதனால தமிழ் பேசத் தெரிஞ்ச ஹீரோயினா வேணும்னு ரொம்ப கவனமா இருந்தேன். அப்படித்தான் ரம்யா நம்பீசன் படத்துக்குள்ள வந்தாங்க.

படத்தின் முதல் பாதி முழுக்க காருக்குள் நடக்கும் கதை. ரோபோ சங்கர், பால சரவணன், தங்கதுரை இவங்கதான் படத்துல முக்கியமான கேரக்டர்கள். எனக்கு ரொம்பப் பிடிச்ச படம், சந்தானபாரதி சார் இயக்கின ‘குணா.’ போன படத்துலயே அவர் நடிக்கவேண்டியது. மிஸ் ஆகிடுச்சு. அதனால இந்தப் படத்துல அவரை கமிட் பண்ணி முதல் ஷாட்டே சந்தானபாரதி சாருக்குத்தான். எம்.எஸ்.பாஸ்கர் சாருடைய பெரிய ரசிகன் நான். அவரும் படத்துல இருக்கார். ரேகா, முனீஷ்காந்த், ‘ஆடுகளம்’ நரேன்னு மொத்தம் 18 நடிகர்கள் இருக்காங்க.

யுவன் இந்தப் படத்துக்காக குறைவான நேரத்துல ஐந்து பாடல்கள் கம்போஸ் பண்ணிக் கொடுத்திருக்கார். கருணாமூர்த்தி நெருங்கிய நண்பர். நான் தேசிய விருது வாங்கின ‘விடியலை நோக்கி’ குறும்படத்தில் எனக்கு அசிஸ்டென்ட் டைரக்டர். அதுக்குப் பிறகு, நான் பண்ணுன பல ரியாலிட்டி ஷோக்களுக்கு அசோஸியேட் டைரக்டரா இருந்தவர். சில வருஷத்துக்கு முன்னாடி அவர் என்கிட்ட எதார்த்தமா சொன்ன கதை இது. அப்போவே இதை நான் இயக்குறேன்னு துண்டு போட்டு வெச்சுட்டேன். திரைக்கதை, இயக்கம்தான் நான் பண்ணினேன்.

என்னோடு 15 வருஷமா பயணிச்சுட்டு வர்ற ரைட்டர் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்துலேயும் வொர்க் பண்ணியிருக்கார். ராஜசேகர் ஒளிப்பதிவு பண்றார். அவருக்கு நான் இன்ஸ்டிட்யூட்ல வாத்தியார். ரொம்ப அழகா பண்ணியிருக்கார். ‘செம போத ஆகாத’ படத்துல அசிஸ்டென்ட் எடிட்டரா வொர்க் பண்ணின சாம் இதுல எடிட்டராகவும், அசிஸ்டென்ட் ஆர்ட் டைரக்டரா இருந்த சரவணன் இதுல ஆர்ட் டைரக்டராகவும் வொர்க் பண்ணியிருக்காங்க. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் என் நண்பர்தான். எனக்கு கம்ஃபர்ட் ஜோன் இல்லைனா நான் பண்ணமாட்டேன்.” என நம்பிக்கையோடு முடிக்கிறார் பத்ரி.