தொடர்கள்
சினிமா
Published:Updated:

புழுதியில் புரண்டு மோதும் ‘கட்டா குஸ்தி’!

கட்டா குஸ்தி படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
கட்டா குஸ்தி படத்தில்...

குஸ்தின்னாலே, மல்யுத்த விளையாட்டுதான். கேரளாவுல ரொம்பப் பழைமையான குஸ்தி விளையாட்டுகள்ல கட்டா குஸ்தியும் ஒண்ணு

``தெலுங்கின் ‘மாஸ் மகராஜா' ரவிதேஜா சாரும், விஷ்ணு விஷால் சாரும் நல்ல நண்பர்கள். பல வருஷமாவே அவங்க நட்பு தொடருது. அவங்க ரெண்டு பேருமே சேர்ந்து ‘கட்டா குஸ்தி'யைத் தயாரிச்சிருக்கறது, ஓர் இயக்குநரா எனக்கு சந்தோஷமா இருக்கு. விஷ்ணு சார் ‘எஃப்.ஐ.ஆர்.' படத்தை முடித்துவிட்டு, ஒருநாள் ரவிதேஜா சாரை சந்திச்சிருக்கார். அப்போது அவர், ‘அடுத்து என்ன படம் பண்றீங்க விஷ்ணு’ன்னு கேட்டிருக்கார். இவரும் ‘கட்டா குஸ்தி' பத்திச் சொல்லியிருக்கார். அப்போதே ரவிதேஜா சார், கதையைக் கேட்க விரும்பினார்.

நானும் அவரைச் சந்தித்துக் கதை சொன்னேன். ரவி சாருக்குக் கதை பிடித்ததோடு, இதை விஷ்ணு சாரோடு சேர்ந்து தயாரிக்கவும் முன்வந்துட்டார். இப்ப இதைத் தெலுங்கிலும் கொண்டு வர்றோம். இங்கே ‘கட்டா குஸ்தி' போல, அங்கே ‘மட்டி குஸ்தி'ன்னு டைட்டில் வச்சிருக்கோம்'' - மகிழ்ச்சியில் பூரிக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு. இதற்கு முன் விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தை இயக்கியவர், மீண்டும் ‘கட்டா குஸ்தி'க்காக விஷ்ணுவோடு கைகோத்திருக்கிறார்.

விஷ்ணு விஷால் - செல்லா அய்யாவு
விஷ்ணு விஷால் - செல்லா அய்யாவு
புழுதியில் புரண்டு மோதும் ‘கட்டா குஸ்தி’!

செல்லா அய்யாவு``ரவிதேஜாவும் இம்ப்ரஸ் ஆகி தயாரிப்பாளர் ஆகுற அளவுக்கு அப்படி என்ன ஸ்பெஷல் வச்சிருக்கீங்க?’’

‘‘குஸ்தின்னாலே, மல்யுத்த விளையாட்டுதான். கேரளாவுல ரொம்பப் பழைமையான குஸ்தி விளையாட்டுகள்ல கட்டா குஸ்தியும் ஒண்ணு. அதோட சிறப்பே, வீர தீரமா புழுதியில புரண்டு மோதி குஸ்தி போடுறதுதான். அது இப்ப மல்யுத்தமா மாறினப்ப மண்ணுல யாரும் மோதிக்கறதில்ல. மேட் விரிச்சு விளையாடுறாங்க. ஆனா, முன்னாடி கட்டா குஸ்தியை மண்ணுல விளையாடியிருக்காங்க. அதுக்கும் இந்தக் கதைக்கும் தொடர்பு இருக்கு. எதுக்காக அந்த விளையாட்டை ஹீரோ கையிலெடுக்கிறார் என்பதே கதை. என் முந்தைய படத்துல காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பேன். இது ஃபேமிலி என்டர்டெயினர் என்பதால, காமெடியோடு கமர்ஷியலும் இருக்கும்.

இதுல கிராமத்து இளைஞனா விஷ்ணுவும், பாலக்காட்டுப் பொண்ணா ஐஸ்வர்யா லட்சுமியும் கணவன் மனைவியா நடிச்சிருக்காங்க. பொதுவா கணவன் மனைவின்னாலே பிரச்னைகள் வரும். அந்தப் பிரச்னைகளுக்கு வேற வேற வடிவத்துல தீர்வுகளும் இருக்கும். இந்தக் கணவன் மனைவி பிரச்னையில் அதுக்கான தீர்வாக விஷ்ணு ஒரு ஸ்போர்ட்ஸைக் கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் வருது. துறுதுறுன்னு ஒரு கிராமத்து இளைஞனா அவரை இதுல பார்க்கலாம். படத்துல கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லின்னு நிறைய பேர் இருக்காங்க. கருணாஸ் சார் முக்கியமான கேரக்டர்ல வர்றார். டெக்னிக்கல் டீமும் பக்கா. ‘மாநாடு' ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ஜஸ்டின் பிரபாகரன் இசைமைச்சிருக்கார். ஸ்டன்ட்ஸ் அன்பறிவ். ரெண்டு பேருமே ‘கே.ஜி.எஃப்-2', ‘விக்ரம்' படப்பிடிப்புகளில் பிஸியா இருந்தாங்க. தேதி கிடைக்கல. கதையைக் கேட்டுட்டு உங்க பதிலைச் சொல்லுங்கன்னு சொல்லி, கதை சொன்னேன். அடுத்த நொடியே ‘நாங்க பண்றோம்'னு வந்தாங்க. இப்படி நல்ல டீம் அமைஞ்சிருக்கு.''

புழுதியில் புரண்டு மோதும் ‘கட்டா குஸ்தி’!
புழுதியில் புரண்டு மோதும் ‘கட்டா குஸ்தி’!
புழுதியில் புரண்டு மோதும் ‘கட்டா குஸ்தி’!
புழுதியில் புரண்டு மோதும் ‘கட்டா குஸ்தி’!

`` ‘பொன்னியின் செல்வன்' பூங்குழலி இந்தப் படத்துல எப்படி வந்தார்?’’

‘‘ஐஸ்வர்யா லட்சுமியை நாங்க கமிட் பண்றப்பவே அவர் ‘பொன்னியின் செல்வன்' படத்தை முடிந்திருந்தார். பாலக்காட்டுப் பொண்ணு முகச்சாயல் கொண்ட ஹீரோயினைத் தேடிக்கிட்டிருந்தோம். ஐஸ்வர்யா லட்சுமி கதைக்குப் பொருத்தமா இருந்தார்.''

புழுதியில் புரண்டு மோதும் ‘கட்டா குஸ்தி’!
புழுதியில் புரண்டு மோதும் ‘கட்டா குஸ்தி’!
புழுதியில் புரண்டு மோதும் ‘கட்டா குஸ்தி’!
புழுதியில் புரண்டு மோதும் ‘கட்டா குஸ்தி’!

``இரண்டாவது முறையா விஷ்ணு விஷாலோட கூட்டணி...’’

‘‘விஷ்ணு சார்கூட எத்தனை படம் வேணாலும் ஒர்க் பண்ணலாம். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்'ல நான் கதை எழுதியதோடு, இணை இயக்குநராகவும் வேலை செய்திருக்கேன். அந்த நட்பில்தான் அவரோடு ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்' பண்ணினேன். அந்தப் படம் முடிந்ததும் விஷ்ணு சாரே என்னைக் கூப்பிட்டு, ‘அடுத்தும் நாம ஒரு படம் பண்ணுவோம்'னு சொன்னார். அப்படி உருவானதுதான் ‘கட்டா குஸ்தி.' கொரோனா லாக்டௌனுக்குப் பிறகே ஷூட்டிங் கிளம்பினோம். தென்காசி, பொள்ளாச்சி, பாலக்காடு, ஆலப்புழா, சென்னைன்னு பல இடங்கள்ல ஷூட்டிங் நடத்தினோம்.

படத்தோட க்ளைமாக்ஸ்ல ஒரு பெரிய டோர்னமென்ட் இருக்கு. செலவுகள் கருதி ஆரம்பத்துல சின்னதாகத்தான் செட் போட்டு எடுக்க நினைத்தோம். ஆனா, விஷ்ணு சாரே தயாரிக்கறதால, ‘செட்டை பிரமாண்டமா பண்ணினாதான் க்ளைமாக்ஸ் சூப்பரா அமையும்'னார். ஹீரோவே தயாரிப்பாளரா இருக்கறப்ப இப்படி ப்ளஸ்கள் ஒரு இயக்குநருக்கு பலம். ரவிதேஜா சார் கதை கேட்ட அழகே தனி. நான் தமிழ்லதான் கதையைச் சொன்னேன். ரொம்பப் பொறுமையா, தன்மையா கதையைக் கேட்டு ரசித்தார். முழுப்படமும் ரெடியாகிடுச்சு, விஷ்ணு சார் படத்தைப் பார்த்துட்டு சந்தோஷமா பாராட்டினார். அப்படிப் பாராட்டு உங்ககிட்ட இருந்தும் கிடைக்கும்னு நம்புறேன்.''