சினிமா
Published:Updated:

``ரஜினிக்காக கதைகள் வச்சிருக்கேன்!'' - ‘`விஜய் படத்துக்காக ரெடியா இருக்கேன்!’’

கெளதம் மேனன்
பிரீமியம் ஸ்டோரி
News
கெளதம் மேனன்

‘`கமலுக்கு ‘வேட்டையாடு விளையாடு 2’ இருக்கு!’’ - ``சிம்புவுக்கு நான்தான் வில்லன்!'' - ‘`விஜய்சேதுபதி கூட வேலை பார்க்கணும்!’’

சினிமாவுக்கு வந்து 20 வருஷம் ஆச்சு. இருந்தும் என் தேடல் அப்படியே இருக்கு. எழுத்து, பயணம், இசைன்னு போயிட்டுதான் இருக்கேன். ‘இன்னைக்கு ஷூட்டிங் போகணுமா’ன்னு எப்பவும் யோசிச்சதில்ல. 50 சதவிகிதம் ஸ்க்ரிப்ட் ரெடியாயிருந்தா உடனே ஷூட்டிங் கிளம்பிடுவேன். என் பிரச்னையும் இதுதான். ஏன்னா, இதனால சிலர் என்கூட படம் பண்ணாமலும் இருந்திருக்காங்க’’ - இப்போதும் ஓர் அறிமுக இயக்குநரின் வேகத்தோடு பேசுகிறார் கெளதம் மேனன்.

``ரஜினிக்காக கதைகள் வச்சிருக்கேன்!'' - ‘`விஜய் படத்துக்காக ரெடியா இருக்கேன்!’’

``ரஜினி ‘காக்க காக்க’ பார்த்துட்டு உங்ககூட படம் பண்ணணும்னு கூப்பிட்டுப் பேசியிருக்கார். அவருக்கு என்ன கதை வெச்சிருந்தீங்க?’’

“அவருக்காக நிறைய கதைகள் பண்ணி வெச்சிருக்கேன். என்னைக்காவது ஒரு நாள் அது நடக்கும்னு நம்புறேன். `காக்க காக்க’ சமயத்தில் நடக்காமல் போன மாதிரி, `கபாலி’ சமயத்திலும் ரஜினி சாரைப் பார்த்து `துருவ நட்சத்திரம்’ படத்தோட கதையைச் சொன்னேன். அவருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. காலையில கதை சொல்லி, மதியம் படம் பண்றது உறுதின்னு சொன்னாங்க. எங்க அம்மாக்கு மட்டும் போன் பண்ணி, `ரஜினி சார் படம் பண்ணப்போறேன்; பாசிட்டிவான பதில்தான் வந்திருக்கு’ன்னு சொன்னேன். ஆனால், சாயங்காலம் அது மாறிடுச்சு. தாணு சார் போன் பண்ணி, `அடுத்த படத்தில் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாருப்பா’ன்னு சொன்னார். நான் ஏன், எதுக்குன்னு காரணம் கேட்டுக்கலை. இப்போவரைக்கும் அந்த முயற்சி போயிட்டிருக்கு.

ரஜினி சாருக்கும் எனக்கும் படம் பண்றதைப் பற்றிய உரையாடலைத் தாண்டி, படங்களைப் பற்றிய உரையாடல் அதிகமா இருக்கும். என் படங்களைப் பார்த்துட்டு போன் பண்ணிப் பேசுவார். `விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை அவருக்கு தனியாக ஸ்க்ரீன் பண்ணினோம். அதைப் பார்த்துட்டு ப்ரீவியூ தியேட்டரிலேயே ரொம்ப நேரம் பேசிட்டிருந்தார். சீக்கிரமே அவருக்குப் படம் பண்ணுவேன்னு நம்புறேன்.”

``ரஜினிக்காக கதைகள் வச்சிருக்கேன்!'' - ‘`விஜய் படத்துக்காக ரெடியா இருக்கேன்!’’

``படத்தோட க்ளைமாக்ஸை எழுதாமல் ஷூட்டிங் போறதுதான் உங்க பேட்டர்னா?’’

‘`இதுதான் என் பேட்டர்ன்னு சொல்லிட்டால் நிறைய ஹீரோக்கள் என்கிட்ட வரமாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா, ‘காக்க காக்க’ படத்தின் கதையை க்ளைமாக்ஸ் இல்லாமல் சொன்னதால்தான், விஜய் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டார். ஆனால், அதுதான் என் பேட்டர்ன். ஏன்னா, ஒரு படத்தோட 90 சதவிகித ஸ்கிரிப்ட் வேலைகளையும் ஷூட்டிங்கையும் முடிச்சிட்டு, அந்தக் கதையும், அந்தக் கதைக்காக ஹீரோ பண்ணின விஷயங்களையும், ஒரு இயக்குநராக நான் பண்ணின விஷயங்களையும் வெச்சு க்ளைமாக்ஸை முடிவு பண்ணுவேன். ஆனா, சில பேருக்கு இந்த பேட்டர்ன் பிடிக்காது; புரியாது. என்னை நம்பி அவங்க வந்தால் அந்த மேஜிக் நடக்கும்னு நம்புறேன்.”

``நீங்களும் விஜய்யும் சேர வாய்ப்பு இருக்கா?’’

‘`கண்டிப்பா நடக்கும். கடந்த ஒரு வாரமா இதுக்கான சில அறிகுறிகள் தெரியுது. காத்துவாக்குல சில விஷயங்கள் வருது. ‘கதை ரெடி பண்ணுறீங்களா, பேசலாம்னு’ விஜய்கூட இருக்குறவங்க கேட்டுட்டு இருக்காங்க. இது விஜய் சார்க்குத் தெரியுமான்னு தெரியல. நானும் ரெடியாயிருக்கேன். எனக்கு இருக்குற சில படங்களை முடிச்சிட்டு இந்த வருஷத்தோட கடைசில விஜய்யை சந்திக்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்குறேன்.’’

``ரஜினிக்காக கதைகள் வச்சிருக்கேன்!'' - ‘`விஜய் படத்துக்காக ரெடியா இருக்கேன்!’’

``கமல், அஜித், சூர்யா மற்றும் சிம்பு வரிசையில அடுத்த போலீஸ் கதை யாருக்கு?’’

‘`விக்ரமை வெச்சு ஒரு போலீஸ் படம் பண்ணணும்னு ஆசை. திரும்பவும் கமல் சாரை வெச்சு ‘வேட்டையாடு விளையாடு 2’ பண்றதுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி வெச்சிருக்கேன். இந்த பாகத்திலும் அதே நடிகர், நடிகைகள்தான் இருப்பாங்க. கமல் சாருக்கும் பிடிக்கும்னு நம்புறேன்.”

``இயக்குநரா சிம்புகூட வேலை பார்த்திருக்கீங்க, இப்போ ‘பத்து தல’ படத்துல சேர்ந்து நடிக்கப்போறீங்களே?’’

‘`சிம்புகூட சேர்ந்து நடிக்க பயப்படணும். என் அசோசியேட் டைரக்டரா இருந்த கிருஷ்ணாதான் இயக்குநர். கதை மற்றும் கேரக்டர் பற்றிச் சொன்னான். ‘என்னால சிம்புகூட சேர்ந்து நடிக்க முடியாதுடா’ன்னேன். ‘இல்ல சார், நீங்கதான் வில்லன். படத்தோட க்ளைமாக்ஸ்ல கண்டிப்பா ரெண்டு பேருக்கும் காம்பினேஷன் சீன்ஸ் இருக்கும்’னு சொன்னான். சிம்புகிட்டயும், ‘ப்ரதர்! உங்ககூட காம்பினேஷன்னு சொல்றான். உங்ககூட என்னால நடிக்க முடியாதுன்னு மறுத்துட்டேன்’னு சொன்னேன். ‘அட, வாங்க ப்ரதர். நாம வொர்க் பண்ணலாம்’னு சிம்பு சொல்லியிருக்கார். பார்ப்போம்.’’

``ரஜினிக்காக கதைகள் வச்சிருக்கேன்!'' - ‘`விஜய் படத்துக்காக ரெடியா இருக்கேன்!’’

``உங்க படங்களில் பாடல்கள் எல்லாமே ஆல்பமா ஹிட்டாகும். அதோட ரகசியம் என்ன?’’

‘`நான் இதுவரைக்கும் வொர்க் பண்ணின எல்லா இசையமைப்பாளர்கிட்டேயும், அந்தப் பாட்டுக்கான சூழல், எனக்குத் தேவையான விஷயங்கள், அந்தப் பாடலை எப்படிப் படமாக்கப் போறேன்ங்கிற ப்ளான்... இப்படி எல்லாத்தையும் சொல்லிடுவேன். அதையெல்லாம் அவங்க உள்வாங்கிட்டு கொடுக்கிற முதல் ட்யூனை ஓகே பண்ணிடுவேன். அவங்களே, `நான் இன்னும் ட்ரை பண்ணி வேற ட்யூன் தரேன்’னு சொன்னாலும், `வேணாம்’னு சொல்லிடுவேன். ஏன்னா, எப்போதுமே முதலில் வர்ற அவுட்புட் ஹிட்டாகும்கிறது என் நம்பிக்கை. ரஹ்மான் சாரோடு முதன்முதலா `விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் வொர்க் பண்ணினப்போ, `இந்த ட்யூன் ஓகேவா? ஆப்ஷனுக்கு வேற தர்றேன்’னு சொன்னார். இளையராஜா சார்கூட வொர்க் பண்ணும்போது, ஒரு பாட்டுக்காகக் கிட்டத்தட்ட 30 ட்யூன்களை அடுத்தடுத்து போட்டுக்கிட்டே இருந்தார். ‘முதல் ட்யூனே ஓகே சார்’னு சொன்னேன். ‘உங்களுக்கு எத்தனை ட்யூன் வேணும்னாலும் போட்டுக் காட்டுறேன். என்ன தேவையோ எடுத்துக்கோங்க’ன்னு சொன்னார். ஆனால், நான் எப்போதுமே செலக்ட் பண்றது, முதல் ட்யூனைத்தான். அதுதான் அந்த ரகசியம்னு நினைக்கிறேன்.”

``ரஜினிக்காக கதைகள் வச்சிருக்கேன்!'' - ‘`விஜய் படத்துக்காக ரெடியா இருக்கேன்!’’

``இயக்குநரா உற்சாகம், உத்வேகத்தோட இருக்குற கெளதம், தயாரிப்புன்னு வர்றப்போ அதெல்லாம் உடையுதோன்னு வருத்தப்பட்டது உண்டா?’’

‘`வருத்தப்பட்டதில்லை. ஏன்னா, எல்லாத்தையும் கத்துக்கிட்டு வர்றேன். இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம். ‘ஒரு டீம் இருக்காங்க, அவங்க பாத்துப்பாங்க’ன்னு விட்டிருக்கக் கூடாது. இப்போ, இதையெல்லாம் சரி பண்றதுக்கு ஒரு படம் பண்ணியாகணும்னு இருக்கு. ‘ஒரு நல்ல ஸ்க்ரிப்ட் இருக்கு, படம் பண்ணுவோம்’ங்கிற நிலைமை போய், பிரச்னையை தீர்க்குறதுக்காக படம் பண்ண வேண்டியதா இருக்கு. 90 சதவிகித பிரச்னையில இருந்து வெளியே வந்துட்டேன். தயாரிப்பாளரா இருந்ததுக்காக வருத்தப்படலை. இன்னும் பல படங்களைத் தயாரிக்க விரும்புறேன். எல்லாருக்கும் பிரச்னைகள் இருக்கு. மத்தவங்க யாரும் அதையெல்லாம் பத்தி பேசலை. நான் பேசுறேன். இதை வேற மாதிரியும் சொல்லலாம்... மத்தவங்க பிரச்னைகளை பத்தி வெளியே யாரும் பேசுறதில்ல; என்னோட பிரச்னை பத்தி பெருசா பேசுறாங்க. அதுதான் உண்மை.’’

``ஓ.டி.டி-க்காக எடுக்குற படங்களை அப்படியே ரசிகர்களுக்குக் கொடுக்க முடியுதா? கொடுக்குறதை ஆடியன்ஸ் சரியா புரிஞ்சிக்கிட்டாங்கன்னு நினைக்கிறீங்களா?’’

‘`தியேட்டர்ல ரிலீஸாகுற படங்கள்லகூட சொல்ல வந்த விஷயம் நூறு சதவிகிதம் போய்ச் சேராது. நாம சொல்றதைத் தாண்டி, பார்க்கிறவங்க வேற மாதிரி எடுத்துக்கிறாங்க. ஓ.டி.டி-ல அந்தப் பிரச்னை இல்லை.

‘பாவக்கதைகள்’ல நிறைய சீக்வென்ஸ் இருந்தது. ஹீரோ சத்யசீலனுடைய கேரக்டரை டீச்சரா வடிவமைச்சு நிறைய காட்சிகளை எடுத்திருந்தேன். சிம்ரனுக்கும் நிறைய காட்சிகள் இருந்தது. ஆனா, இதையெல்லாம் எடிட் பண்ணிட்டோம். எனக்குக் கொடுத்திருந்த முப்பது நிமிஷத்துல இதையெல்லாம் ஆடியன்ஸுக்குக் கொடுக்க முடியலை. ‘பாவக் கதைகள்’ல வெற்றி மாறன் கதைக்கான தொடர்பை என் கதையில வெச்சிருந்தேன். வெற்றிக்கும் தெரியும். ஆனா, ஆர்டர் மாறினதுல ஸ்பாய்லராகிடுச்சு.’’

``ரஜினிக்காக கதைகள் வச்சிருக்கேன்!'' - ‘`விஜய் படத்துக்காக ரெடியா இருக்கேன்!’’

`` ‘குயின்’ வெப்சீரிஸ் பார்த்துட்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவங்க யாராவது பேசினாங்களா?’’

‘`சிலர் சந்திச்சுப் பேசினாங்க. ‘ரொம்ப நல்லாருக்கு’ன்னு சொன்னவங்களும் இருக்காங்க. ‘என்ன இருந்தாலும் தலைவரை இப்படித் தப்பா காட்டியிருக்கக்கூடாது’ன்னு சொன்னவங்களும் இருக்காங்க. என் பக்கத்துல இருந்த விஷயங்களைச் சொன்னேன். ‘குயின் ஒரு ஃபிக்‌ஷன்தான். ஏன்னா, நிஜ வாழ்க்கையில எப்படி இருந்தாங்க, பேசினாங்கன்னு நமக்குத் தெரியாது. ஓப்பனிங்ல ‘இதை ஒரு டிராமா சீரிஸ்’னு குறிப்பிட்டிருந்தேன். ஆனா, உண்மைக் கதைகளைத் தழுவி எடுத்ததுதான்.’’

``இந்த இருபது வருடப் பயணத்துல யாருக்கு நன்றி சொல்ல விரும்புவீங்க?’’

‘`மணிரத்னம் சாருக்குத்தான். இதுவரைக்கும் அவர்கூட வேலை பார்த்ததே இல்ல. ஆனா, என்னோட தினசரி வேலையை வரையறை பண்றது அவர்தான். வீட்டுல அரை மணி நேரம் கிடைச்சாக்கூட ‘நாயகன்’, ‘குரு’, ‘ஆயுத எழுத்து’ன்னு அவர் படங்கள்தான் பார்த்துட்டு இருப்பேன். அதிலிருந்து ஒரு எனர்ஜி கிடைக்கும். ‘நாயகன்’ படம்தான் என்னை டைரக்டராக்கியிருக்கு. ஒவ்வொரு முறையும் படம் பார்க்கிறப்போ கமல், பி.சி.ராம், இளையராஜாகூட வேலை பார்க்கணும்னு நினைச்சிருக்கேன். அதெல்லாம் இப்போ நடந்திடுச்சு.

இந்த லாக்டெளன் காலத்துல நடந்த நல்ல விஷயமா, மணி சார்கூட தொடர்ந்து பேச வாய்ப்பு கிடைச்சது. இடையில சந்திச்சுப் பேசினேன். ரொம்ப அழகான நினைவுகளா மனசுல இருக்கு. அவருக்குள்ள இருக்குற ஹியூமர் சென்ஸ் மற்றும் குழந்தைத்தனத்தை இன்னும் ரசிச்சுக்கிட்டு இருக்கேன்.’’

``ரஜினிக்காக கதைகள் வச்சிருக்கேன்!'' - ‘`விஜய் படத்துக்காக ரெடியா இருக்கேன்!’’

``இன்னும் எந்த நடிகர்கூட வேலை பார்க்க ஆசைப்படுறீங்க?’’

‘`அமிதாப் சார்கூட வேலை பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை. ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்குக்கூட அவரைக் கேட்டோம். நிறைய டிராவல் பண்ணணும்ங்கிறதனால பண்ண முடியாமப்போயிடுச்சு. விஜய்சேதுபதி கூட கண்டிப்பா வேலை பார்க்கணும்னு விரும்புறேன். நிறைய பேசிக்கிட்டிருக்கேன். இவர்கூட படம் பண்ணுவேன்னு தோணுது. அப்புறம் விஜய்கூட படம் பண்ணணும்.’’

``இரண்டு பெரிய ஹீரோக்களை ஒரு படத்துல இணைக்குறது கஷ்டம்னு நினைக்குறீங்களா?’’

‘`ஸ்க்ரிப்ட் நல்லாருந்துச்சுனா, டைரக்டர் விஷன் சரியாயிருக்கும்னு தெரிஞ்சா ஒண்ணும் பிரச்னையில்லை, விஜய்சேதுபதி மட்டும்தான் இதைப் பண்ணுவார்னு நினைக்குறேன். இந்தி மற்றும் தெலுங்கு சினிமால டைரக்டர் கன்ட்ரோல்ல ரெண்டு பெரிய ஹீரோஸ் சேர்ந்து பண்ணிட்டிருக்காங்க. ஆனா, நம்ம ஊர்ல வாய்ப்பு இல்ல.’’