தொடர்கள்
சினிமா
Published:Updated:

“மனித மனம்தான் பேய்!”

‘டெவில்’ படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
‘டெவில்’ படத்தில்

‘டெவில்’ ரொம்பவே ரசிக்கவைத்து பாசிட்டிவ் எனர்ஜியைக் கொடுக்கும். இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ஆணும் ‘நான்தான் இது’ என்று தங்களைப் பொருத்திக்கொள்வார்.

``இதைப் பேய்ப் படம் என்று நினைக்கலாம். உண்மையில் மனித மனம்தான் பேய். நிஜப் பேய்கள் நம்மை ஒன்றுமே செய்யாது. மனிதர்கள்தான் பேய்மாதிரி நடந்துகொள்கிறார்கள். எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு டெவில் இருக்கிறது. அதனை மையப்படுத்தியதுதான் இப்படம்’’ என்று அறிமுகம் தருகிறார் இயக்குநர் ஜி.ஆர் ஆதித்யா. மிஷ்கினின் தம்பி என்கிற பில்டப் இல்லாமல் ‘சவரக்கத்தி’யை இயக்கி கவனம் ஈர்த்தவர். இப்போது ‘டெவில்’ படத்தில் மிஷ்கினையே இசையமைப்பாளராக அறிமுகம் செய்திருக்கிறார்.

“மனித மனம்தான் பேய்!”

‘‘உங்க முதல் படத்தில் டார்க் ஹியூமர் இருக்கும். ‘டெவில்’ அதேபோல் இருக்குமா?”

‘‘அது ஹ்யூமர் படம். ஆனா, ‘டெவில்’ ரொம்ப சீரியஸ் படம். இரண்டாம் பாதியில் சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு த்ரில்லரில் மிரட்டும் திரைக்கதை. பெண்கள்தான் உலகின் மிகப்பெரிய சக்தி. ஆனால், அந்த சக்தி என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை. அதை உணர்த்துவதுதான் ‘டெவில்’ ஒன்லைன். நாயகனாக விதார்த், நாயகியாக பூர்ணா நடித்திருக்கிறார்கள். விதார்த் வழக்கறிஞராக வருகிறார். அர்ப்பணிப்போடு நடிக்கக்கூடிய கலைஞர். பூர்ணாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஏற்கெனவே ஒரு படத்திற்காக மொட்டை அடித்துக்கொண்டவர். எந்த நடிகை தன் முடியை இப்படித் தியாகம் பண்ண ஒத்துக்குவாங்க? பூர்ணா, நடித்தால் நம்ம கதைக்கே ஒரு நல்ல பரிணாமம் கிடைத்துவிடும். இப்படத்திற்காக, பூர்ணாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவர்களுடன் இன்னொரு நாயகனாக ஆதித் அருண் இருக்கிறார். மிஷ்கின் சார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்ன கதாபாத்திரம் என்பது சஸ்பென்ஸ். அதைச் சொல்லிவிட்டால் கதை தெரிந்துவிடும்.”

“மனித மனம்தான் பேய்!”

‘‘சமூகத்தில் எதெல்லாம் நெகட்டிவா இருக்குமோ அதையெல்லாம் மிஷ்கின் பாசிட்டிவா மாற்றுவார். அதேமாதிரி, ‘டெவில்’ படத்தில் எதிர்பார்க்கலாமா?”

‘‘நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ‘டெவில்’ ரொம்பவே ரசிக்கவைத்து பாசிட்டிவ் எனர்ஜியைக் கொடுக்கும். இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ஆணும் ‘நான்தான் இது’ என்று தங்களைப் பொருத்திக்கொள்வார். ஒரு பெண்ணிலிருந்துதான் நாம் பிறந்தோம். அம்மா, மனைவி, அக்கா, தங்கை என நம்மைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் பெண்கள்தான். படத்தைப் பார்த்தபிறகு வழக்கமாகப் பேசுவதுபோல் அல்லாமல், கூடுதல் அன்பு, பாசம், மரியாதையுடன் பெண்களிடமும் உறவுகளிடமும் பேசுவார்கள். ரசிகர்கள் தங்களது வழக்கமான உலகத்தை மறந்து வேறொரு உலகத்தில் மகிழ்ச்சியாக இருக்கத்தான் தியேட்டருக்குப் படம் பார்க்க வருகிறார்கள். அவர்களை ஏமாற்றாமல், ஒவ்வொரு காட்சியும் கட்டிப்போடவேண்டும். அப்படி எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கும்.”

“மனித மனம்தான் பேய்!”
“மனித மனம்தான் பேய்!”

“மிஷ்கினை இசையமைப்பாளராக எப்படி அறிமுகம் செய்தீர்கள்?”

‘‘ ‘சித்திரம் பேசுதடி’ படம் முடிந்ததும் மிஷ்கின் சார்கிட்ட உதவி இயக்குநரா வாய்ப்பு கேட்டேன். `உனக்கு சினிமா பற்றி என்ன தெரியும்’னு திட்டி அனுப்பிட்டார். அப்புறம் பார்த்திபன் சார்கிட்ட சேர்ந்தேன். அதுக்கப்புறம், என் டெடிகேஷனைப் பார்த்துட்டுதான் மிஷ்கின் சார் தன்னோடு சேர்த்துக்கிட்டார். 13 வருடங்களாக அவரிடம் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அவரை அண்ணன் என்பதைவிட குரு என்பதில்தான் விருப்பம். அதனால்தான், அவரை ‘சார்’ என்று அழைக்கிறேன். அவரது பள்ளியிலிருந்து வந்திருக்கேன். ஏதாவது ஒரு இடத்தில் அதை நிரூபிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. முதல் படத்தை அவர்தான் தயாரித்தார். இது வேறொரு ஜானர் என்றாலும் அவரை டச் செய்யும் ஜானர். அவரும் ‘நல்லா பண்ணியிருக்கடா’ன்னு பாராட்டினார்.

மிஷ்கின் சாரின் இசை ஆர்வத்தையும் ஞானத்தையும் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன். வெஸ்டர்ன் கிளாசிக்கலில் விருப்பமும் ஆழ்ந்த அறிவும் இருக்கிறது. வெஸ்டர்ன் கிளாஸிக்கல் பாடல்கள் அமையவேண்டும் என்று எதிர்பார்த்தேன். அதோடு, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் உண்டு. அதற்கு, மிஷ்கின் சார்தான் கரெக்டா இருப்பார்னு தோன்றியது. கதையைக் கேட்டதும் ஓகே சொல்லிட்டார். நான் எதிர்பார்த்ததைவிட பாடல்களை அட்டகாசமாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்.”