சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஹன்சிகாவை மயங்கவைத்த அந்தச் சத்தம்!

ஹன்சிகா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹன்சிகா

ஹன்சிகா இதுல ஃபேஷன் டிசைனர். அவங்க வாழ்க்கையில் ஒரு ஆண் குறுக்கிடுறான். அதன்பின் அவங்க வாழ்க்கை எப்படி மாறுது, அந்தச் சூழல்ல இருந்து எப்படித் தப்பிக்கிறாங்க என்பதே கதை

“பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லைன்னு சொல்வாங்க. ‘பெண்கள் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே சமூக முன்னேற்றத்தை அளவிட முடியும்’னு மார்க்ஸ் சொல்லியிருக்கார். எல்லாமே உண்மைதான். ஆனா, நடைமுறை அப்படியா இருக்கு? குடும்ப வன்முறையாகட்டும், ஆண்கள் பெண்கள் மீது வைத்திருக்கும் பார்வையாகட்டும், எல்லாமே கேள்வி கேட்க வேண்டிய ஒன்றாக இருக்கு. இப்படியான சூழலை ஹன்சிகாவை வைத்து த்ரில்லரா பண்ணியிருக்கோம். படத்தின் பெயர் ‘மேன்.’ இந்தப் படம் ஆண் - பெண் சமத்துவத்தை வலியுறுத்தும், ஆணாதிக்கச் சிந்தனைக்கு எதிரான படமா இருக்கும்’’ - தன்னம்பிக்கை மின்னப் பேசுகிறார் இயக்குநர் இகோர். இதற்குமுன் ‘கலாபக் காதலன்’ படத்தை இயக்கியவர்.

ஹன்சிகா
ஹன்சிகா

“கதாநாயகியை மையமா வச்ச கதைக்கு ‘மேன்’னு தலைப்பு வச்சிருக்கீங்க..?’’

‘‘கதைக்குப் பொருத்தமான தலைப்பு இது. என் முதல் படம் ‘கலாபக் காதலன்’ படத்தில் நந்தகோபால் சார் லைன் புரொட்யூசரா இருந்தார். அந்த நட்பில் இப்ப அவர் தயாரிப்பில் படம் பண்ணுறேன். அவர் ‘நாடோடிகள் 2’-ஐத் தயாரித்த சமயத்திலேயே இந்தக் கதையை அவர்கிட்ட சொன்னேன். ஹன்சிகா ஏற்கெனவே இதே நிறுவனத்திற்கு ‘ரோமியோ ஜூலியட்’ பண்ணியிருக்கறதால, என் வேலை எளிதாகிடுச்சு. ஹன்சிகாகிட்ட கதையைச் சொன்னேன். உடனே தேதிகள் ஒதுக்கிக் கொடுத்தாங்க. அதே வேகத்துல படப்பிடிப்புக்குக் கிளம்பி, இப்ப படத்தையும் முடிச்சிட்டோம்.

இதுல ‘பிக் பாஸ்’ ஆரி வில்லனா நடிச்சிருக்கார். வில்லனாக நடிக்க அவர் முதல்ல மறுத்துட்டார். கதையைக் கேட்டபின் ஆர்வமாகி வந்தார். ஸ்பாட்டிலும் இன்புட்ஸ் நிறைய கொடுத்தார். ஹன்சிகா, ஆரி தவிர ஜனனி, சௌமிகான்னு ரெண்டு பேர் இருக்காங்க. அவங்க இதுக்கு முன்னாடி சில படங்கள்ல சின்னச் சின்ன ரோல்கள்ல நடிச்சிருக்காங்க. த்ரில்லர் படத்துக்கு இசையும் ஒரு பலம். ஜிப்ரான் மிரட்டியிருக்கார். ‘96’ ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரத்தின் உதவியாளரான மணிகண்டன் ஒளிப்பதிவு த்ரில்லருக்கு வலுக் கூட்டியிருக்கு. திரைக்கதையை சரண்யா பாக்யராஜும், வசனத்தை பொன்.பார்த்திபனும் எழுதியிருக்காங்க.’’

ஹன்சிகாவை மயங்கவைத்த அந்தச் சத்தம்!

``ஹன்சிகா ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடிச்சதா சொல்றாங்களே...’’

‘‘நிஜம்தான். ஹன்சிகா இதுல ஃபேஷன் டிசைனர். அவங்க வாழ்க்கையில் ஒரு ஆண் குறுக்கிடுறான். அதன்பின் அவங்க வாழ்க்கை எப்படி மாறுது, அந்தச் சூழல்ல இருந்து எப்படித் தப்பிக்கிறாங்க என்பதே கதை. ஹன்சிகா இந்தக் கதையை அழகா உள்வாங்கினதால எளிதா பண்ணிட்டாங்க. படப்பிடிப்பில் மறக்க முடியாத சம்பவம் ஒண்ணு. ஹன்சிகா - ஆரி ரெண்டுபேருமே பெரிய கண்ணாடியை உடைச்சிட்டு வெளியே வர்ற சீனை வச்சிருந்தோம். ஹன்சிகாகிட்ட இதச் சொன்னதும் கொஞ்சம் யோசிச்சாங்க. டூப் வச்சுப் பண்ணலாம்னு நினச்சபோது, ‘நானே பண்ணிடுறேன்’னு சொல்லிட்டாங்க. அவங்க உடைக்கறப்ப, அந்தக் கண்ணாடி ‘படார்’னு உடைஞ்சது மட்டுமல்லாம, சின்ன அறை முழுவதும் சத்தம் பயங்கரமா எதிரொலிச்சது. அப்படி ஒரு சத்தத்தை யாரும் எதிர்பார்க்கல. அதுல ஹன்சிகா சட்டுனு மயக்கம் போட்டு விழ, நாங்க எல்லாருமே பதறிட்டோம். ஆனா, சின்ன பிரேக் எடுத்துக்கிட்டு உடனே நடிக்க வந்துட்டாங்க.’’