Published:Updated:

இரண்டு கண்ணில் இரண்டு படம் பார்க்கலாம்!

பிகினிங்
பிரீமியம் ஸ்டோரி
News
பிகினிங்

ஒரு பாதி திரையில் அம்மாவிற்கும், மாற்றுத் திறனாளியான மகனுக்கும் இடையேயான வாழ்க்கை, அவர்களின் தினங்கள். மறு பாதி திரையில் மூன்று இளைஞர்கள் சேர்ந்து ஒரு பெண்ணைக் கடத்தி வந்துவிடுகிறார்கள்.

‘‘இந்தியத்திரைக்கே இந்த ‘பிகினிங்' திரைப்படம் ஒரு புது அனுபவம். ‘பிளவுத்திரை'ன்னு இதைச் சொல்வாங்க. ஒரே திரையில் பாதிப் பாதியாய் இரண்டு படம் ஓடும். ஆரம்பத்தின் சிறு வியப்புக்குப் பிறகு, தன்னால் அருமையாகப் புரியும்படி இருக்கும். சினிமாவில் எவ்வளவோ டெக்னிக் வந்திருச்சு. கேமராவில் மட்டுமே அசர வைக்கிற முன்னேற்றம். அத்தனை நிஜ இயக்கங்களையும் அப்படியே படமாக்க முடியும். ஒரு நல்ல கதையை முன் பின்னாக அருமையாகச் சொல்ல முடியும்னு ‘பிகினிங்' நிரூபிச்சிருக்கு’’ - நிதானமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா.

‘‘பிளவுத்திரையில் படம் செய்த அனுபவத்தையும் அதற்குண்டான முயற்சிகளையும் சொல்லுங்கள்?’’

‘‘ஒரே திரையில் இப்படிக் கதை சொல்ல முடியும் என சொன்னபோது எல்லோருக்கும் ஆச்சரியம். நாங்கள் அதைத் திறம்படச் செய்து முடித்ததும் இன்னும் ஆச்சரியப்பட்டார்கள். அவ்வளவு சந்தேகங்களுக்கும் மத்தியில் படம் அருமையாக வந்திருக்கிறது. லிங்குசாமி, பாக்கியராஜ் என பார்த்தவர்கள் அத்தனை பேருக்கும் இதன் அருமை தெரிந்தது.’’

இரண்டு கண்ணில் இரண்டு படம் பார்க்கலாம்!
இரண்டு கண்ணில் இரண்டு படம் பார்க்கலாம்!

‘‘எப்படியிருக்கும் பிகினிங்..?’’

‘‘ஒரு பாதி திரையில் அம்மாவிற்கும், மாற்றுத் திறனாளியான மகனுக்கும் இடையேயான வாழ்க்கை, அவர்களின் தினங்கள். மறு பாதி திரையில் மூன்று இளைஞர்கள் சேர்ந்து ஒரு பெண்ணைக் கடத்தி வந்துவிடுகிறார்கள். இரண்டும் அதனதன் போக்கில் நடந்துகொண்டு இருக்கும். ஒரு புள்ளியில் இரண்டும் ஒன்றாக இணையும். அந்த நிமிடத்திலிருந்து அதையும் சுவாரஸ்யமாக மக்கள் பார்க்கத் தொடங்கி விடுவார்கள். ரசிகர்களை என் கதைப் போக்கிற்கு எந்தச் சிரமமும் இல்லாமல் அழைத்துச் சென்றிருக்கிறேன். இந்தப் படம் பற்றிக் கேள்விப்பட்டும், சென்னைத் திரைப்பட விழாவில் கைதட்டி ரசிக்கப்பட்டதைப் பார்த்தும் லிங்குசாமி ஆச்சரியப்பட்டார். நாங்கள் அவரைப் போய்ப் பார்த்தோம். அவரது திருப்பதி பிரதர்ஸ் சார்பாக வெளியிட முன்வந்தார். அவர் இதுவரை ஐந்து முறை படம் பார்த்துவிட்டார். பிளவுத்திரையில் ஒரு படத்தை ரசிக்க எந்தப் பிரச்னையும் இல்லை என்பதே உண்மை.’’

இரண்டு கண்ணில் இரண்டு படம் பார்க்கலாம்!
இரண்டு கண்ணில் இரண்டு படம் பார்க்கலாம்!

‘‘நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்!’’

‘‘வினோத் கிஷன் அருமையான நடிகர். ‘அந்தகாரம்' படத்தில் அவர் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. ‘குணா'வின் நீட்சியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரின் அம்மாவாக ரோகிணி நடித்திருக்கிறார். மிகையில்லாத மாற்றுத்திறனாளி என்பதால் சோகம் இழையோடி நிறைந்துவிடாமல் நகைச்சுவைத் தன்மையிலும் படம் நகர்கிறது. ‘96' படத்தில் நடித்த கௌரி கிஷன் முக்கியமான ரோலில் வருகிறார். சச்சின், ‘ராட்டினம்' படத்தின் ஹீரோ லகுபரன், KPY பாலா என பலரும் படத்தின் தன்மை புரிந்து நடித்திருக்கிறார்கள். ரோகிணியும், கௌரியும் பிரமாதமாக நடித்துக்கொடுத்தார்கள். அந்த இரண்டு முகங்களிலும் நடிப்பும் சந்தோஷமும் வலியும் எல்லாம் சேர்ந்து அதன் சாரத்தில் வெளிப்பட்டன. இரண்டு படங்களுக்கும் அதன் காட்சிகளுக்கும் இருவேறு இசை அமைக்க முடியாது. இரண்டிற்குமான இசையை சுந்தரமூர்த்தி இசைத்திருக்கிறார். சாதாரண வேலையில்லை. இசை, இரண்டு நிகழ்வுகளுக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பது பெரும் முயற்சி. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கேமராமேன் செழியனின் தம்பி வீரக்குமார் இதன் ஒளிப்பதிவாளர். இந்த வித்தியாச முயற்சிக்கு அவரே முதுகெலும்பு. வித்தியாசத்தை விரும்பும் தமிழ் மக்கள் எங்கள் ‘பிகினிங்'கை நிச்சயம் ரசிப்பார்கள். புதிதாக, நேர்மையாக, விறுவிறுப்பாக, ஏமாற்றம் இல்லாமல், பொய் இல்லாமல் படம் செய்திருக்கிறேன் என்று திடமாக நம்புகிறேன்.’’