கட்டுரைகள்
Published:Updated:

“சினிமாவில் ‘13’ வெற்றி நம்பர்!”

ஜி.வி.பிரகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.வி.பிரகாஷ்

ஆதியா மலையாளத்தில் பிரபலமாகிவருகிற பொண்ணு. பவ்யாவும் நடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஐஸ்வர்யா சிவம் சன் மியூசிக்கில் இருந்தாங்க.

``ஒரு படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது எப்போது படம் பிடிக்க ஆரம்பித்தது, எப்படி நம்மைக் கவர்ந்துவிட்ட படமாக உள்ளே உட்கார்ந்துகொண்டது என்று நாங்கள் சினிமா பார்த்த காலம் முழுவதும் பேசிக்கொள்வோம். லைஃப் லைன் ரொம்ப சிறுசுங்க... சிம்பிள்! ‘கடவுளை நம்பு, ஆனால் உன் காரையும் பூட்டு'ன்னு சொல்லுவாங்க. அதுமாதிரி, என்னதான் நம்ம திறமையில் நம்பிக்கை வச்சாலும் திரைக்கதையில் அவ்வளவு கவனம் வைக்கணும். இப்படி நல்ல கதைகளும் புது விஷயங்களும் ஜெயிச்சுக்கிட்டே இருக்கிறதுதான் என்னை மாதிரி புதியவர்களுக்கு மூலதனம். என்னோட ‘13' படமும் அப்படியான நம்பிக்கை அளிக்கிற படம்தான். மக்களுக்குப் படத்தைப் பிடித்துப்போகிற கட்டம் ஆரம்பத்திலிருந்து வருமென்று நிச்சயமாக நம்பிக்கொண்டிருக்கிறேன்...'' வார்ப்பாகப் பேசுகிறார், அறிமுக இயக்குநர் கே.விவேக்.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

‘‘படத்திற்கு ‘13' என்ற பெயரே வித்தியாசமாக இருக்கே?’’

‘‘ ‘96' படம் எடுத்த நந்தகோபால் சார்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ‘13’ என்று பெயர் வைப்பதற்குக் கதையில் காரணம் இருக்கு. 13 கொஞ்சம் வித்தியாசமான எண். அயல்நாட்டிலும், இங்கேயும்கூட இந்த எண் என்றால் கொஞ்சம் நெகட்டிவாகப் பார்ப்பார்கள். ஆனால் சினிமாவில் இந்த எண் கொண்ட படங்கள் பெரும் வெற்றி அடைஞ்சிருக்கு. த்ரில்லர் ஆகவும், துப்பறிகிற விதத்திலும், ஹாரர் ஆகவும், எமோஷன் கலந்தும் படம் போய்க்கொண்டே இருக்கும். வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமாகவும் நட்பாகவும் இருக்கிற ஐந்து பேர், வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறாங்க. எதிர்பாராத விதமாக ஏதோ ஒன்று செய்யப் போய், அது கடைசி எல்லை வரைக்குமே அவங்களைத் துரத்துது. அதிலிருந்து அவர்கள் தப்பிப்பிழைத்தார்களா என்பதுதான் கதை. ஒற்றை இழையில் கதை செல்வதால் படத்தின் கதையை விரிவாகப் பேச இயலாது. முக்கியமானது இதில் திரைக்கதை. தொடர்ந்து விறுவிறுவென வேகமெடுக்கும். சென்னையில் ஆரம்பித்து கேரளத்தின் ஒரு விசித்திரமான கிராமம், காடுகள் எனச் செல்கிறது கதை. அங்கே போய் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.''

13 படத்தில்...
13 படத்தில்...
13 படத்தில்...
13 படத்தில்...

‘‘ஜி.வி.பிரகாஷைச் சுத்தி நிறைய பேர் இருக்காங்களே..?’’

‘‘ஆமா. ஜி.வி.பிரகாஷோட ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா சிவம், கதிர்னு பலர் நடிக்கிறாங்க. இந்த ஜாலிக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்கிறார் ஜி.வி. இந்தக் கதை எழுதும்போதே அவரைத்தான் மனசுக்குள்ளே வச்சிருந்தேன். ரொம்ப அருமையாக தோளில் கை போட்டு நண்பன் மாதிரி வந்தார் ஜி.வி. ‘தில்லானா மோகனாம்பாள்' படத்தில் சிவாஜிதான் ஹீரோ. ஆனால் பாலையா மாதிரியானவங்க எல்லாம் சேர்ந்து எவ்வளவு உயிரோட்டமா இருந்தது. அப்படி இதில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா, கதிர் இணைந்திருந்தாங்க.

ஆதியா மலையாளத்தில் பிரபலமாகிவருகிற பொண்ணு. பவ்யாவும் நடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஐஸ்வர்யா சிவம் சன் மியூசிக்கில் இருந்தாங்க. கதிர் இப்ப துடிப்பா வந்துகிட்டிருக்கிற நடிகர். சில சினிமாக்களில் எல்லார் நடிப்பும் நல்லா இருக்கும். இதை இந்தப் படம் செய்யும்போதே அனுபவிக்க முடிஞ்சதுதான் நல்ல விஷயமாகப் படுது. இதில் ஜி.வி-க்கு ஜோடி இல்லை. காதலுக்கான தளமும் இங்கே இல்லை. நட்புதான் பிரதானம். ஒரு நல்ல கதை தனக்கான நடிகர்களைத் தானே தேடிக்கொள்ளும்னு சொல்லுவாங்க. அது இதில் தெரிஞ்சதுன்னு நான் நம்புகிறேன்.''

13 படத்தில்...
13 படத்தில்...
13 படத்தில்...
13 படத்தில்...

‘‘கௌதம் மேனனையும் கொண்டு வந்துட்டிங்க...’’

‘‘ஒரு புலனாய்வு ஆபீசர் கேரக்டர் இருந்தது. அதற்கு அவர்தான் மிகவும் பொருத்தமாகத் தெரிந்தார். ரொம்ப வித்தியாசமான இடத்தில் வைத்துப் பார்க்கிற வேடம். அதை அழகா புரிஞ்சுக்கிட்டார் கௌதம் மேனன். அவரை மாதிரி பெரிய டைரக்டர்கள் குழந்தை மாதிரி. நல்ல திரைக்கதையில் அவங்களைக் கொண்டு வந்து நிறுத்திட்டோம்னு மனசில் பட்டுவிட்டால் அவங்க டோட்டல் சரண்டர். பிரமாதமாக நடிச்சுக் கொடுத்தார்.''

கௌதம் மேனன்
கௌதம் மேனன்
கே.விவேக்.
கே.விவேக்.

‘‘பாடல்கள் நல்லா இருக்கு...’’

‘‘சித்து குமார்தான் பாடல்கள். முன்னுக்கு வந்துகொண்டே இருக்கிறார். பின்னணி இசையை அருள் கவனிக்கிறார். மூவேந்தர்தான் கேமரா. சிட்டியிலிருந்து கேரளத்தின் காடுகள் வரைக்கும் தனித்தனி ஃபீல் தருகிறார். நிஜத்தைவிடப் புனைவு கவனமாகச் செய்யப்பட வேண்டும். அதில் கவனம் செலுத்தியிருப்பதால் பார்வையாளர்களோடு இந்தப் படம் நெருங்கிவிடும் என நம்புகிறேன்.''