கட்டுரைகள்
Published:Updated:

``கமல் சொல்ற டயலாக் சினிமாவுக்கும் பொருந்தும்!’’

லிங்குசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
லிங்குசாமி

கடனை ஒரு விஷயமாக நான் நினைக்கிறதில்லை. என்னை அவர்கள் நம்புகிறார்கள். நான் அவர்களை மதிக்கிறேன்.

மறுபடியும் உற்சாகமாக எழுகிறார் இயக்குநர் லிங்குசாமி. பிரச்னைகளிலிருந்து கடந்து வந்திருக்கிறார். தயாரிப்பு நிறுவனம் சார்ந்து அழுத்தும் கடன்களிலிருந்து வெளியே வருவதற்கான முழு எத்தனிப்பில் இருக்கிறார். இப்போது கமல்ஹாசன் அவருக்கு ஒரு படம் செய்து தருவதாகக் கொடுத்த வாக்குறுதி... அடுத்தடுத்த தனது முயற்சிகள்... பொதுவான தன் படப் பிரச்னைகள்... அவற்றிலிருந்து மீள்வதற்கான முயற்சிகள் என நம்மிடம் மனம்திறந்து பேசினார் லிங்குசாமி.

‘‘இப்போது ‘பிகினிங்' படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் இருக்கிறேன். மறுபடியும் உத்வேகமான நல்ல விஷயங்களைச் செய்யப் போகிறேன். ஒரு சினிமாவை எடுத்துக்கொண்டால் அதனோட முழு மேப் யார்கிட்டேயும் கிடையாது. அதில் என்கிட்ட ஒரு பகுதி இருக்கு. கேமராமேன்கிட்டே ஒரு பகுதி இருக்கு. இன்னும் இரு பகுதிகள் மியூசிக் டைரக்டர், எடிட்டர்கிட்ட இருக்கு. இப்படி அந்த மேப் எல்லாத்தையும் ஒட்டிப் பார்க்கும்போதுதான் அந்தப் படமே தெரியுது. எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்ததை வைத்து தான் எல்லோருமே வேலை செய்யுறோம். எவ்வளவு குறைகள் குறைவாக இருக்கோ, அதில் ஓடுகிறது படம்.

``கமல் சொல்ற டயலாக் சினிமாவுக்கும் பொருந்தும்!’’

கமல் ‘அபூர்வ சகோதரர்கள்'ல ‘சர்க்கஸ் துப்பாக்கி... முன்னாடியும் வெடிக்கும், பின்னாடியும் வெடிக்கும்'னு சொல்லுவார். இது சினிமாவுக்கும் பொருந்தும். காலம் மாறுது. புதுசு புதுசா பையன்கள் வர்றாங்கன்னு நினைத்து நம்மைக் குறைச்சு மதிப்பீடு செய்யாமல் புதுப்பித்துக்கொண்டு உழைத்தால் நமக்கு நல்லது. நான் அப்படித்தான் தீவிரமாகப் படைப்பு வேலைகளில் இறங்கியிருக்கேன்.

கடனை ஒரு விஷயமாக நான் நினைக்கிறதில்லை. என்னை அவர்கள் நம்புகிறார்கள். நான் அவர்களை மதிக்கிறேன். சொடக்கு போடுகிற நேரத்தில் மாறின விஷயங்கள் நிறைய உதாரணங்களாக இங்கே இருக்கு. தரமாக, சரியாக வேலை பார்க்கிறது மட்டும்தான் நம்ம கையில் இருக்கு. இதோ அடுத்த படத்திற்கு ரெடியாகிட்டு இருக்கேன். எல்லோரும் என்கிட்ட ஒரு நல்ல தன்மை இருக்குன்னும், ஒரு கதையைச் சிறப்பாகக் கொண்டு போக முடியும்னும் நம்புறாங்க. கொஞ்சம் வயசு கடந்த பிறகு, ‘உடம்பைப் பார்த்துக்கங்க, வாக்கிங் போங்க’ன்னு சொல்ற மாதிரி நமக்கும் ஒரு செக்கிங் வேண்டியிருக்கு.

நான் மணி சாருக்கு ரசிகனாக இருந்தேன். இப்போ என் மகளுக்கும் அவர் படம் பிடிக்குது. மணி சார் பார்க்காத வெற்றியும் தோல்வியும் இல்லை. அவர்கிட்ட இருந்து ஒரு ட்ரெய்லர் வந்தால் சினிமா இன்னும் பரபரக்குது. ஷங்கர் வந்து 25 வருஷத்திற்கு மேலே ஆச்சு. ராஜமௌலி இருக்கார். நம்ம மாஸ்டர்ஸ் தொடர்ந்து இப்படி இருக்காங்க. அவங்களைப் பார்த்துட்டு நாமும் பிழைக்கலாம். ஒரு அழுத்து அழுத்தினால் ஓர் இடம் கிடைச்சிடும்.

``கமல் சொல்ற டயலாக் சினிமாவுக்கும் பொருந்தும்!’’

நம்முடைய நம்பிக்கையும் அதனோட லெவலும்தான் ஒரு படம். நம்ம உடம்பில் என்ன டெம்போ இருக்கிறதோ அது படத்தில் தெரியும். மக்கள் சுத்தமான மனசோட வர்றாங்க. சரியில்லாட்டி சந்தோஷம் இல்லாமப் போறாங்க. மத்தபடி இங்கே இருக்கிற கேலி, கிண்டல் எல்லாமே பிளானிங். மிகச் சரியாக ஒண்ணு கொடுத்திட்டால், அந்தப் பேரலையில் இதெல்லாம் அடிச்சிட்டுப் போயிடும்.

கமல் சாரும் நாங்களும் நல்லா யோசிச்சு சந்தோஷமாகத்தான் ‘உத்தம வில்லன்' படத்தில் இறங்கினோம். நினைச்ச மாதிரி அது போகலை. அடுத்து ஒரு படம் செய்து தர்றேன்னு கமல் சார் சொல்லியிருக்கார். ‘உத்தம வில்லன்' செய்வதற்கு முன்பு நாங்கள் ‘பாபநாசம்' செய்திடலாம்னு நினைச்சோம். கமல் சார் ‘உத்தம வில்ல’னில் ஆர்வமாக இருந்தார். அவருக்குச் சில படங்கள் லைனில் இருக்கின்றன. அது முடிந்ததும் அவருடன் எங்களுக்கான படம் ஆரம்பிக்கும் என்று நினைக்கிறேன். அவருடன் எங்களுக்கு நல்லுறவு இருக்கிறது. ஒரு கதை, ஒரு ஸ்கிரிப்ட் நல்லா அமைஞ்சிட்டால் இங்கே எல்லாமே மாறும்னு நம்புகிறேன். சுதந்திரமாக இறங்கி ஒரு ஸ்கிரிப்டோடு வருகிறேன். காத்திருங்கள்.''