கட்டுரைகள்
Published:Updated:

இயக்குநர் மோகன்ராஜா சொல்லும் ‘தனி ஒருவன் 2’ சீக்ரெட்ஸ்

மோகன்ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
மோகன்ராஜா

இயக்குநர்கள்ல தமிழ்ல மணிரத்னம் சார் இன்ஸ்பிரேஷன் மாதிரி, தெலுங்குல கே.விஸ்வநாத் சார், பாபு சார் படங்கள் பார்த்துதான் எனக்குள் இயக்குநர் ஆகணும்னு ஆசை வந்துச்சு.

“ஒரு காலகட்டத்துல சினிமாவின் தாய்வீடா சென்னைதான் இருந்துச்சுன்னு சொல்லலாம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அப்ப நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். எங்க அப்பா வாஹினி ஸ்டூடியோவில எடிட்டிங் வேலைகள்ல இருப்பார். நான் ஸ்கூல் விட்டு வந்ததும், ஸ்டூடியோவுலதான் விளையாடிட்டு இருப்பேன். மறக்க முடியாத தருணங்கள்.

ஸ்டூடியோவுல ஒரு அறையில கன்னடப் பட வேலைகள் போயிட்டிருக்கும். இன்னொரு ஃப்ளோர்ல தெலுங்கு டப்பிங் வேலைகள் நடக்கும். இந்திப் படங்களின் ஷூட்டிங்கும் நடக்கும். ஸ்டூடியோவை ஒரு ரவுண்டு வந்தாலே, பல மொழிகள் காதுல கேட்கும். சினிமாவோடு அப்படி வளர்ந்தேன் நான். அப்புறம், அப்பா தெலுங்கில் படங்கள் தயாரிக்கறப்ப, பல வருஷம் அங்கே பிஸியா இருந்தாங்க. டாப் தயாரிப்பாளரா பெயர் வாங்கினாங்க. அதன் தொடர்ச்சியாகத்தான் என்னை அங்கே இயக்குநராக அறிமுகப்படுத்தினாங்க. என் முதல் படம் ‘ஹனுமன் ஜங்ஷன்’ பண்ணி 21 வருஷம் ஆகுது. இப்பவும் அந்தப் படத்தைச் சொல்லிக் கொண்டாடுறது சந்தோஷமா இருக்கு!’’

- மகிழ்வும் நெகிழ்வுமாகப் பேசுகிறார் இயக்குநர் மோகன் ராஜா.

அப்பாவுடன் மோகன் ராஜா
அப்பாவுடன் மோகன் ராஜா

மீண்டும் தெலுங்கில் படம் இயக்குவீங்கன்னு நினைச்சீங்களா?

“மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தை இயக்க வாய்ப்பு அமையும்னு எதிர்பார்க்கல. ஆனா, கொரோனா காலகட்டத்துக்கு முன்னாடியே நாகார்ஜுனாவை இயக்குறது முடிவாகிடுச்சு. நாம எத்தனை படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும், முதல் பட வெற்றிங்கறது தனி சந்தோஷம்தான். நான் ‘காட்ஃபாதர்’ பண்ணப் போயிருந்தபோது, ‘இவர்தான் ஹனுமன் ஜங்ஷன் இயக்குநர்’னு மேடையில என்னை அறிமுகப்படுத்தினாங்க.

அங்கிருந்த அத்தனை பேரும் ‘நீங்கதான் அந்தப் படத்தைப் பண்ணின இயக்குநரா... மறக்கவே முடியாத படம்!’னு எல்லாருமே என்னை ஞாபகம் வச்சிருந்து சந்தோஷமாப் பேசி, அன்பும் அக்கறையுமா விசாரிச்சு வாழ்த்தினாங்க. இயக்குநர்கள்ல தமிழ்ல மணிரத்னம் சார் இன்ஸ்பிரேஷன் மாதிரி, தெலுங்குல கே.விஸ்வநாத் சார், பாபு சார் படங்கள் பார்த்துதான் எனக்குள் இயக்குநர் ஆகணும்னு ஆசை வந்துச்சு. இத்தனை வருஷ இடைவெளிக்குப் பிறகும் மெகா ஸ்டார் படம் பண்ணியிருக்கறதும், அதுக்குக் கிடைச்ச வரவேற்பும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுல மறக்க முடியாத ஒரு விஷயம்..

இயக்குநர் மோகன்ராஜா சொல்லும் ‘தனி ஒருவன் 2’ சீக்ரெட்ஸ்

‘காட்ஃபாதர்’ ரிலீஸ் அன்னிக்கு படம் பார்க்க எங்க அப்பாவை அழைச்சிருந்தேன். அப்ப அவர் கண்கலங்கினபடி ஒரு விஷயத்தை என்கிட்ட சொல்லி சந்தோஷப்பட்டார். ‘காட்ஃபாதர்’ தியேட்டர்லதான் ‘பொன்னியின் செல்வன்’ படமும் ஓடிக்கிட்டு இருந்துச்சு. ரெண்டு படமும் அடுத்தடுத்த தியேட்டர்ல ஓடினாலும், ரெண்டுக்குமே பக்கத்துப் பக்கத்துல கதவுகள் இருந்துச்சு. ஒரு கதவைத் திறந்தால் ‘காட்ஃபாதர்’ ஓடுது. இன்னொரு கதவைத் திறந்தால் ‘பொன்னியின் செல்வன்’ ஓடுது. அப்பா என்னைக் கூப்பிட்டு ‘அடுத்தடுத்து என் மகன்கள் படங்கள் ஓடுறது சந்தோஷமா இருக்கு. இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைச்சதே இல்ல. ரொம்பவே மன நிறைவா இருக்கு’ன்னு அந்தத் தருணத்தைக் கண்கலங்கினபடி அப்பா சொன்னாங்க. அது எவ்ளோ பெரிய சந்தோஷம்னு என்னாலேயும் உணர முடிஞ்சது!’’

இயக்குநர் மோகன்ராஜா சொல்லும் ‘தனி ஒருவன் 2’ சீக்ரெட்ஸ்

‘தனி ஒருவன் 2’ எப்ப ரெடியாகும்?

“என்னுடைய கரியர்ல ‘தனி ஒருவன்’ ரொம்ப எமோஷனலான பயணம். அந்தப் படத்துல வில்லன் ரோல் மிகப்பெரிய ரோல். ஏன்னா, யார் பெரிய எதிரி என்பதுதான் படத்திற்கான லைன். வலுவான வில்லனையும் அதுல உருவாக்கிட்டேன். அந்த வில்லன், ஹீரோவுக்கு இதுவரை யாரும் கொடுத்திராத அழுத்தத்தைக் கொடுக்கணும். அதை முறியடிச்சு, ஹீரோ ஜெயிக்கணும். இதான் ஃபார்முலா.

இப்ப ‘தனி ஒருவன் 2’-க்கு எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருக்குன்னு தெரியும். ‘தனி ஒருவன்’ வந்து ஏழு வருஷம் ஆனதால அந்த எதிரியும் இந்த ஏழு வருஷத்துல சூப்பர் அப்டேட் ஆகிட்டே இருக்காங்க. எதிரி அப்டேட் ஆக ஆக திரைக்கதையையும் மாற்ற வேண்டியிருக்கு. தம்பி ஜெயம் ரவியும் அடுத்தடுத்து படங்கள் நடிச்சிட்டிருக்கார். நானும் மறுபடியும் தெலுங்கில் நாகார்ஜுனா சாரை வச்சுப் பண்றேன். ‘தனி ஒருவன்’ படத்தைத் தயாரிச்ச ஏ.ஜி.எஸ் நிறுவனமும் இதைத் தயாரிக்க ரெடியா இருக்கு. நானும் ரவியும் எங்க கமிட்மென்ட்களை முடிச்சிட்டு சீக்கிரமே இணைவோம்.’’