சினிமா
தொடர்கள்
Published:Updated:

“நடிப்பின் மூலம் வரும் பணத்தை மகளுக்காக சேமிக்கிறேன்!”

மிஷ்கின்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஷ்கின்

- படங்கள்: சி.விக்னேஷ்

இயக்குநர் மிஷ்கின், இப்போது இசை அமைப்பாளராக புரமோஷன் ஆகியிருக்கிறார். ‘டெவில்’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். தவிர, ‘மண்டேலா’ இயக்குநர் அஸ்வின் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார்.

“நடிப்பின் மூலம் வரும் பணத்தை மகளுக்காக சேமிக்கிறேன்!”

``இளையராஜா, இளையராஜான்னு உருகிட்டு இருந்தீங்க... இப்ப நீங்களே இசையமைப்பாளர் ஆகிட்டீங்களே?’’

“நான் சினிமாவுக்கு வந்ததுக்குக் காரணம் இளையராஜாதான். இப்ப அவரோடு பெரும் சண்டை. என் சின்ன வயசில திண்டுக்கல் தீவுத்திடல்ல ‘அன்னக்கிளி’ பாடல் ஒலிக்கிறது. எங்க அப்பா என்னை அவரது தோள்மீது தூக்கி வச்சிருந்தார். அது மறக்க முடியாத நினைவு.

அவரோடு ஒர்க் பண்ணினதில், முழுக்க முழுக்க எல்லா இசையையும் எனக்காக அவர் கொடுத்திருக்கார். அப்புறம் சண்டை. அவர் எல்லா விஷயமும் சொல்லுவார். நான் தலையாட்ட மாட்டேன். எதிர்த்துப் பேசுவேன். மறுத்துப் பேசினதுல சண்டை வந்திடுச்சு. அவரோடு மூணு படங்கள் ஒர்க் பண்ணினதே பெரிய விஷயம். போதும். அப்புறம் கார்த்திக்கிட்ட ஒர்க் பண்ணினேன். ஆனா, இளையராஜா அளவுக்கு கார்த்தியோடு பெருசா என்னால பேச முடியல. ஒரு இடைவெளி விழுந்தது. என் தம்பி அவனோட படத்துல என்னை இசையமைக்கக் கேட்டான். மியூசிக் பண்றேன்னு சொல்லிட்டேன். என்னோட மியூசிக் எனக்குள் இருந்து வரும் மியூசிக். ஒன்றரை வருஷமா வெஸ்டர்ன் கிளாசிக் படிச்சிட்டிருக்கேன். எனக்குத் துணையா ஜிம்மி வேலண்டைன்னு ஒரு பையனும் இருக்கார். அவரோட உதவியோடவும் இசையமைச்சிட்டு இருக்கேன்.

ஆனாலும் இளையராஜாவை ரொம்ப மிஸ் பண்றேன். எங்க அம்மாகூட இருக்கும்போது ஒரு சந்தோஷம் வருமில்லையா... அதைவிட இருநூறு மடங்கு அவருடன் இருக்கும்போது வரும். என்னை அவர் பிரியறதால அவருக்கு ஒண்ணுமில்ல. ஆனா, அவரை நான் பிரியறது எனக்குப் பேரிழப்பு.’’

“நடிப்பின் மூலம் வரும் பணத்தை மகளுக்காக சேமிக்கிறேன்!”
“நடிப்பின் மூலம் வரும் பணத்தை மகளுக்காக சேமிக்கிறேன்!”
“நடிப்பின் மூலம் வரும் பணத்தை மகளுக்காக சேமிக்கிறேன்!”

``தொடர்ந்து நடிக்கறதும் திட்டமா?’’

‘`பொதுவா நடிப்பைவிட, இயக்கத்தில்தான் கவனம் செலுத்துறேன். திரைக்குப் பின்னால் இருக்கறதுதான் பிடித்தமானது. ஆனா, நடிக்கச் சொல்லி நிறைய பேர் கேட்கிறார்கள். தட்டமுடியவில்லை. பெரிய தொகையையும் சம்பளமாகத் தருகிறார்கள். ஒரு படம் இயக்கிக்கொண்டிருக்கும்போது நடிக்கப் போக மாட்டேன். ஆனா, இப்ப படம் முடிச்சிட்டேன். அடுத்த படம் வரை நேரம் இருக்கறதால, நடிக்கறதுக்கு கமிட் ஆகிட்டேன். நடிக்கறதுக்காகக் கிடைக்கும் சம்பளத்தை எல்லாம் தனியா எடுத்து வச்சிருக்கேன். அதை என் மகளுக்காகச் சேமிக்கறேன்.’’

‘` `முகமூடி’யில் நீங்க தமிழில் அறிமுகப்படுத்திய பூஜா ஹெக்டே, இப்ப பேன் இந்தியா ஹீரோயினா கலக்குறாங்களே..?’’

‘`பூஜா அப்ப மாடலிங் பண்ணிட்டிருந்தாங்க. அவங்கள பார்த்ததும் பிடிச்சுப்போச்சு. செலக்ட் பண்ணினோம். அவங்களும் ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்ததால, நடிக்கக் கேட்டதும் வந்துட்டாங்க. நல்ல சம்பளமும் அவங்களுக்குக் கொடுத்தோம். ஒரு கதாநாயகிக்கான எல்லா அம்சத்தோடும் அவங்க இருப்பாங்க. நடிப்பு பெருசா அவங்களுக்கு அப்ப வரல. ஆனாலும் இயக்குநர் சொல்றதைக் கேட்டு அழகா நடிச்சாங்க. இப்ப நல்ல இடத்துல இருக்கறது சந்தோஷமா இருக்கு.’’

“நடிப்பின் மூலம் வரும் பணத்தை மகளுக்காக சேமிக்கிறேன்!”
“நடிப்பின் மூலம் வரும் பணத்தை மகளுக்காக சேமிக்கிறேன்!”
“நடிப்பின் மூலம் வரும் பணத்தை மகளுக்காக சேமிக்கிறேன்!”

``ஒரு பர்சனல் கேள்வி... நடிப்பின் மூலம் கிடைக்கும் சம்பளத்தை மகளுக்காகச் சேமிக்கறதா சொல்றீங்க... உங்க திருமண வாழ்க்கை பத்தித் தெரிஞ்சுக்கலாமா?’’

‘`ரொம்பவே பர்சனலுக்குள்ள போறீங்க. இருந்தாலும் சொல்றேன். காதல் வயப்பட்டோம். கல்யாணம் பண்ணினோம். கொஞ்ச நாள்கள்ல பிரிஞ்சிட்டோம். அவங்க ரொம்ப நல்லவங்க. அன்பானவங்க. இன்னமும் என் குழந்தையை பத்திரமாகப் பார்த்துக்கறாங்க. ஒரு கணவனாக நானும் என்னவெல்லாம் செய்யணுமோ அதை இன்னமும் செய்துகொண்டிருக்கிறேன். சேரல அவ்ளோதான். மத்தபடி வேறெதுவும் காரணமில்ல. ஏதோ ஒருவகையில சினிமாவுல வந்துட்டேன். அவங்க மேல தப்பில்ல. என் மேலதான் தப்பு. நான் பிரிஞ்சுட்டேன். மகளைப் பாத்துக்கறாங்க. என்னையும் இன்னும் அன்போடு நேசிச்சுட்டுத்தான் இருக்காங்கன்னு தெரிய வந்துச்சு. நானும் சினிமாவுக்குள் உருண்டோடி வந்துட்டேன். ஒரு திரைப்பட இயக்குநரா எனக்கு அவங்க கொடுத்த சுதந்திரம் நிறையவே! போன்கூட பண்ணித் தொந்தரவு பண்ணினதில்ல. அவங்ககிட்ட இருந்து போன் வந்தால், அது என் மகள் சம்பந்தமான விசாரிப்பாக இருக்கும். அதுவும்கூட ரொம்ப தயங்கித்தயங்கிதான் பேசியிருப்பாங்க’’ - குரல் உடைந்து எமோஷனலாகிறார் மிஷ்கின்.