சினிமா
Published:Updated:

“இந்தியில் ஸ்போர்ட்ஸ்... தமிழில் ஃபேமிலி!”

ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில்

தமிழ்ல 'மெடல்'ங்கிற பெயர்ல எழுதி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் நயன்தாரா மேடம்கிட்ட கதை சொல்ல நேரம் வாங்கிக்கொடுத்தார்.

என்னுடைய முதல் படமான `ஒரு கல்லூரியின் கதை' படத்துக்குப் பிறகு, பெரிய நடிகர்களை வெச்சுப் படம் பண்ணாமல் சின்னச்சின்ன நடிகர்களை வெச்சுப் படம் பண்ணினதாலதான், என் கரியர்ல கொஞ்சம் சரிவு ஏற்பட்டுச்சு. என்னதான் கதை பண்ணினாலும், தயாரிப்பாளர்கள் வந்தாலும் ஸ்டார் வேல்யூ இல்லாமல் ஜெயிக்கமுடியாது அப்படிங்கிற சூழலை லேட்டாதான் புரிஞ்சுக்கிட்டேன். அதனால, கொஞ்சம் கேப் எடுத்துக்கிட்டு நிறைய கதைகள் எழுதினேன். நம்ம சினிமா வட்டத்துக்குள்ள இருந்துகிட்டே இருக்கணுங்கிறதால அப்பப்போ படங்கள்ல நடிச்சுக்கிட்டும் இருந்தேன். இப்போ ஒரு பெரிய பட்டாளத்தை வெச்சு `ஆனந்தம் விளையாடும் வீடு'ன்னு ஒரு படத்தை எடுத்து முடிச்சிருக்கேன். இனி எல்லாம் ஏறுமுகமாகத்தான் இருக்கும்னு நம்புறேன்'' என நம்பிக்கை வார்த்தைகள் இயக்குநர் நந்தா பெரியசாமியிடமிருந்து வருகின்றன.

 “இந்தியில் ஸ்போர்ட்ஸ்... தமிழில் ஃபேமிலி!”

``டாப்ஸியுடைய 'ராஷ்மி ராக்கெட்' படத்துக்குக் கதை எழுதியிருக்கீங்க. எப்படி பாலிவுட்டுக்குப் போனீங்க?’’

``அது தமிழுக்காக எழுதினதுதான். தமிழ்ல 'மெடல்'ங்கிற பெயர்ல எழுதி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் நயன்தாரா மேடம்கிட்ட கதை சொல்ல நேரம் வாங்கிக்கொடுத்தார். இன்னையில இருந்து பத்தாவது நாள் நான் அவங்களுக்குக் கதை சொல்லணும். ஆனா, அவங்க எனக்குக் கொடுத்த நேரம் 15 நிமிடங்கள்தான். அந்தக் குறுகிய நேரத்துல எப்படிக் கதை சொல்லி இம்ப்ரஸ் பண்றதுன்னு யோசிச்சிட்டிருந்தேன். என் பையனுக்கு அனிமேஷன் மேல ஆர்வம். எப்போவும் அதுல ஏதாவது பண்ணிக்கிட்டிருப்பான். சரின்னு அந்தக் கதையை அனிமேஷன் வீடியோவா கொடுக்கலாமேன்னு தோணுச்சு. அந்தப் பத்து நாளுக்குள்ள எழுதின கதையை ஷூட் பண்ணி, அதை அனிமேஷனா மாத்தி, டப்பிங், பேக் கிரவுண்ட் மியூசிக், 5.1 எஃபெக்ட்ஸ்னு 12 நிமிஷத்துக்கு ஒரு டெமோ பிலிமாவே மாத்தினேன். அதைப் பார்த்துட்டு ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டாங்க. முதல்ல அவங்க பண்ற மாதிரிதான் இருந்தது. தடகள வீராங்கனையா நடிக்க உடல் தோற்றம் ரொம்ப முக்கியம். கடுமையா உழைச்சாலும் அந்த உடல் அமைப்பைக் கொண்டு வர ஆறு மாதங்களாவது ஆகும். அப்போ அவங்களே என்னைக் கூப்பிட்டு, `என்னால இப்போதைக்கு மாறமுடியாத சூழல்'னு வெளிப்படையா சொல்லிட்டாங்க. ஆண்ட்ரியா, தமன்னான்னு நிறைய பேர்கிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். ஆனா, நடக்கலை. காரணம், இது 10 கோடி ரூபாய் படம். என்னுடைய பழைய டிராக் ரெக்கார்ட்ஸை வெச்சு அவ்வளவு செலவு பண்ண தயாரிப்பாளர்கள் வரலை. ஆனா, கதை எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்புறம் மனோபாலா சார் மூலமா டாப்ஸியை சந்திச்சுக் கதை சொன்னேன். அப்படித்தான் 'ராஷ்மி ராக்கெட்' ஆரம்பமானது.''

 “இந்தியில் ஸ்போர்ட்ஸ்... தமிழில் ஃபேமிலி!”
 “இந்தியில் ஸ்போர்ட்ஸ்... தமிழில் ஃபேமிலி!”

``கதை கேட்டுட்டு டாப்ஸி என்ன சொன்னாங்க?’’

‘‘அவங்க இம்ப்ரஸ் ஆகி, ‘ரொம்ப பிரமாதமா இருக்கு. இதை நான்தான் பண்ணுவேன்'னு சொல்லிட்டாங்க. `தமிழ், தெலுங்குல நான் பண்ணிக்கிறேன். இந்திக்குக் கதையைத் தர்றேன். நீங்க பண்ணிக்கோங்க'ன்னு சொன்னேன். அவங்கதான் ‘இந்தக் கதைக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் தமிழ் - தெலுங்குல பண்ணமாட்டாங்க. இந்தி மார்கெட்டுக்கு இது சரியா இருக்கும். அதனால முதல்ல இந்தில பண்ணலாம். அப்புறம், இங்க பண்ணிக்கோங்க'ன்னு சொன்னாங்க. அதுல எனக்கு உடன்பாடில்லை. அதனால, அந்த மீட்டிங்கில கதையைக் கொடுக்கலை. ஏழு மாசம் அவங்க என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்துல `இப்படியொரு கதை வெச்சுக்கிட்டு ஏன் இப்படிப் பண்றீங்க?'ன்னு உரிமையா திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு நாள் தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரூவாலா டீம்ல இருந்து ஒருத்தர் சென்னைக்கு வந்து, `இங்க பாருங்க, ஏழு மாசமாகிடுச்சு. இன்னும் அந்தக் கதையை உங்களால இங்க பண்ண முடியலை. ஏன்னா, ஹீரோயின் சென்ட்ரிக் படத்துக்கு இந்த பட்ஜெட் இங்க ரொம்ப அதிகம்''னு தெளிவா சொன்னார். அப்புறம்தான் கதையைக் கொடுத்தேன். 35 கோடியில படம் எடுத்திருக்காங்க. கதாசிரியரா மட்டும் அங்க புரமோட் ஆகக்கூடாது. அந்தப் படம் வர்றதுக்குள்ள இங்க சூப்பரா ஒரு படம் பண்ணிடணும்னுதான் `ஆனந்தம் விளையாடும் வீடு' கதை எழுதினேன்.''

 “இந்தியில் ஸ்போர்ட்ஸ்... தமிழில் ஃபேமிலி!”

`` `ஆனந்தம் விளையாடும் வீடு' எப்படி ஆரம்பமானது?’’

``இந்தியில கதை கொடுத்திருக்கார்னு என் மேல நல்ல மதிப்பு வந்து தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகள் திறக்க ஆரம்பிச்சது. அப்படித்தான் 'தர்மபிரபு' படத் தயாரிப்பாளர் ரங்கநாதன் சார்கிட்ட கதை சொன்னேன். ஒரு குடும்பம் என்ன காரணத்துக்காக பிரிஞ்சிருக்காங்க, அவங்களை ஹீரோ எப்படி ஒண்ணு சேர்க்கிறார்ங்கிறதுதான் கதை. படத்துடைய அடிநாதம் எமோஷன்தான். ஆனா, உள்ள இருக்கிற திரைக்கதையில நிறைய புதுப்புது விஷயங்கள் வெச்சிருக்கேன். எங்க குடும்பத்துக்கு `Happy Family'-னு ஒரு வாட்ஸப் குரூப் இருக்கு. அதுல என் குடும்பம், என் ரெண்டு அண்ணங்க குடும்பம், அக்கா குடும்பம்னு எல்லோரும் இருப்போம். சின்ன பிரச்னையினால என் அக்கா அந்த குரூப்ல இருந்து வெளியே போயிடுச்சு. அப்படியே ஒவ்வொருத்தரா போனாங்க. அதை என்னால தாங்கிக்க முடியலை. மறுபடியும் அவங்களை எல்லாம் ஒண்ணு சேர்க்க இரண்டரை வருஷமாச்சு. இந்த மாதிரி என்னுடைய பர்சனல் வாழ்க்கையில இருந்து பல விஷயங்களைப் படத்துக்குள்ள வெச்சிருக்கேன். இந்தக் கதை உருவாக இன்னொரு காரணம், விகடன்தான். என் அத்தை ஒருத்தங்க வியாசர்பாடியில இருக்காங்க. 55 பேர் ஒரு வீட்ல குடும்பமா வாழுறாங்கன்னு ஒரு கட்டுரை வந்தது. இந்த விஷயம் எனக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருந்தாலும் அதுக்குள்ள ஒரு கதை ஒளிஞ்சிருக்குன்னு எனக்குக் காட்டியது விகடன்தான். கொரோனா காலத்துல குடும்ப உறவுகள் எவ்வளவு முக்கியம்னு எல்லோருக்கும் காட்டியிருக்கு. இந்த மாதிரி பல எமோஷன்கள் படம் முழுக்க இருக்கும்.''

 “இந்தியில் ஸ்போர்ட்ஸ்... தமிழில் ஃபேமிலி!”

``அத்தனை நடிகர்கள் இருக்காங்க. ஸ்பாட்ல என்னென்ன சவால்கள் இருந்தன?’’

``சேரன் சார், சிநேகன், `பருத்திவீரன்' சரவணன், சிங்கம்புலி, விக்னேஷ், டேனியல் பாலாஜி, நமோ நாராயணன், செளந்தர்ராஜன், மொட்டை ராஜேந்திரன், மெளனிகா, `மைனா' சூஸன், `நக்கலைட்ஸ்' தனம் அம்மா, செல்லா, முனீஷ்ராஜ், ஜோ மல்லூரி, பிரியங்கா, வெண்பான்னு கிட்டத்தட்ட 35 பேர் இருக்காங்க. எல்லோருக்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்கும். படம் முழுக்க அந்த விழாக்கோலம் இருந்துக்கிட்டே இருக்கும். சவால்கள்னு பார்த்தா, கொரோனா காலத்துலதான் படத்தை ஆரம்பிச்சு எடுத்து முடிச்சோம். எழுதின கதையைப் படமாக்கணும் அப்படிங்கிறதைத் தாண்டி கொரோனாவுல இருந்து எல்லோரையும் பத்திரமாப் பார்த்துக்கணும்னு பயம் இருந்துக்கிட்டே இருக்கும். ஹீரோ கெளதம், ஹீரோயின் சிவாத்மிகா. நடிகர் ராஜசேகருடைய மகள். டிவி ஆங்கரா நடிச்சிருக்காங்க.''

நந்தா பெரியசாமி
நந்தா பெரியசாமி

``எல்லோரும் ஓ.டி.டி-க்குள்ள போயிட்டாங்க. இந்தச் சூழல்ல ஒரு ஃபேமிலி டிராமா கதை வொர்க் அவுட்டாகும்னு எப்படி முடிவு பண்ணுனீங்க?’’

``எமோஷனுக்கு எப்போவும் பெரிய மதிப்பு உண்டு. குடும்பம் வேணுங்கிற ஒரு பாதுகாப்பு உணர்வை கொரோனாச் சூழல் ஏற்படுத்தியிருக்கு. நிச்சயமா படம் பார்க்கிறவங்களுக்கு இதயம் கசிஞ்சு கண்ணுல இருந்து ரெண்டு சொட்டு கண்ணீராவது வரும். பிரிஞ்ச குடும்பங்கள் ஒண்ணு சேருவாங்கன்னு நம்புறேன்.''