சினிமா
தொடர்கள்
Published:Updated:

எமோஷன் கலந்த ஆக்‌ஷன் ஸ்டோரி!

விஜய் ஆண்டனி, அருண் விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் ஆண்டனி, அருண் விஜய்

இந்த சினிமாவை ஹாலிவுட் ஸ்டைலில் செய்யணும்னு நினைச்சேன். துரோகம், பழிவாங்குதல், பகை, வஞ்சம், வன்மம் என்று பல உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு இதில் இருக்கும்.

ஒரே ஒரு படம் ‘மூடர்கூடம்.’ தமிழின் அரிதான ப்ளாக்ஹியூமரில் இயக்கி ஃபிரேமுக்கு ஃபிரேம் சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தவர் டைரக்டர் நவீன். அதே மாதிரி சென்றாயனுக்கு லாஜிக் வகுப்பெடுத்த நடிகர் நவீனையும் மறக்கமுடியாது. இப்போது ‘அக்னிச்சிறகுகள்’ வழியாகக் கவனம்பெறுகிறார் நவீன்.

“அடுத்த படம் ‘மூடர்கூடம்’ மாதிரி இருக்கக்கூடாதுன்னு முதலிலேயே முடிவு பண்ணிட்டேன். அந்தப் படம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தது என்றால், இந்தப் படம் ஓடிக்கிட்டே இருக்கணும்னு நினைச்சேன். அது ஒரு வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தால் இது உலகத்தைப் பார்க்கணும். பிரான்ஸ், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, கஜகஸ்தான்னு பல நாடுகளுக்குப் போனோம். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை திகுதிகுன்னு ஓடும்” மாறாத புன்னகையில் பேசத் தொடங்குகிறார் நவீன்.

எமோஷன் கலந்த ஆக்‌ஷன் ஸ்டோரி!
எமோஷன் கலந்த ஆக்‌ஷன் ஸ்டோரி!

“ `மூடர்கூடம்’ படம் பிளாக் ஹியூமர் வழியா நிறைய சமூகச்சிந்தனைகளையும் அரசியலையும் பேசிய படம். ‘அக்னிச் சிறகுகள்’ எமோஷன் கலந்த ஆக்‌ஷன் ஸ்டோரி என்று சொல்லலாம்.

இந்த சினிமாவை ஹாலிவுட் ஸ்டைலில் செய்யணும்னு நினைச்சேன். துரோகம், பழிவாங்குதல், பகை, வஞ்சம், வன்மம் என்று பல உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு இதில் இருக்கும். கொல்கத்தாவில் தொடங்கும் கதை, ஐரோப்பிய நாடுகளின் வழி பயணிக்கும். இப்படிப்பட்ட காட்சி அமைப்புகளும், கதையோடு கூடிய நகர்வுகளும் தமிழ் சினிமாவில் நீங்கள் அவ்வளவாகப் பார்த்திருக்க முடியாது” என்று விரிவாகப் பேசியவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

எமோஷன் கலந்த ஆக்‌ஷன் ஸ்டோரி!
எமோஷன் கலந்த ஆக்‌ஷன் ஸ்டோரி!

“விஜய் ஆண்டனி, அருண்விஜய்ன்னு ரெண்டு பேரையும் எப்படிக் கொண்டு வந்தீங்க?”

“விஜய் ஆண்டனியும் நானும் நண்பர்கள். திடீரென்று ‘உங்கள் டைரக்‌ஷனில் ஒரு படமாவது நடிக்கணும்’னு சொன்னார். ‘எனக்குக் கோவையாகக் கதை சொல்லத் தெரியாது. அதனால்தான் எனக்கு வசதியாக நானே தயாரிச்சுக்கிட்டு, நடித்துக்கொண்டும் இருக்கிறேன்’ என்றேன். ‘அதைப்பற்றி பிரச்னையில்லை’ என்று ஆண்டனி சொன்ன பிறகு ஆரம்பித்ததுதான் இந்தப் படம். அருண் விஜய், விஜய் ஆண்டனி ரெண்டு பேரும் பரஸ்பரம் மரியாதை, விட்டுக்கொடுத்தலோடு சந்தோஷமா நடிச்சுக் கொடுத்தாங்க. என்னோடு சேர்ந்து உதவி இயக்குநர்கள், விஜய் ஆண்டனி, அருண், அக்‌ஷரான்னு எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்துதான் சாப்பிடுவோம். ரொம்ப ஜனநாயகமா பழகித் திரிந்த நாள்கள் அவை. இரண்டு பேரும் நடிச்சதை ஒருவரை ஒருவர் பாராட்டிக்கிட்டாங்க. மோட்டார் ரேஸ், ஹெலிகாப்டர் சேஸ், கார் சேஸ், கத்திச்சண்டை முதலான எல்லா வகை ஃபைட்டும் இதில் இருக்கு. கொஞ்சம் கவனம் பிசகினாலும் விபத்தாகிடும். ஆனால் ரெண்டுபேரும் ரிஸ்க் எடுத்து நடிச்சாங்க. அதேபோல் ஐரோப்பிய நாடுகளின் குளிரையும் சமாளிச்சு நடிச்சாங்க.

எமோஷன் கலந்த ஆக்‌ஷன் ஸ்டோரி!
எமோஷன் கலந்த ஆக்‌ஷன் ஸ்டோரி!

அக்‌ஷரா ஹாசனுக்கு இந்தப் படத்தில் முக்கியமான ரோல். ராய்மா சென் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன். சென்றாயனும் சம்பத்தும், புரொடியூசர் ஜே.எஸ் சதீஷ்குமாரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கிற கே.ஏ.பாஷா கேமரா கையாண்டிருக்கிறார். ட்ரெய்லர் பார்த்தே வியந்தவர்களுக்கு, சினிமாவில் பெரும் ஆச்சரியங்கள் காத்திருக்கு. இப்ப முதல் பிரதி தயாராகிப் பார்க்கும்போது என் தேர்வு எவ்வளவு சரின்னு தோணுது. எல்லோருமே டெடிகேட்டட் உழைப்பு, எமோஷனல் பர்பாமன்ஸ் கொடுத்திருக்காங்க. தயாரிப்பாளர் சிவாவை மறக்க முடியாது. இன்னும் சொல்லணும்னா, வெள்ளித்திரையில் படமே பார்த்திடுங்களேன் சகோ!”

இன்னும் புன்னகை விரிகிறது.