சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சந்தானத்தின் டிஷ்யூம் டிஷ்யூம்...

தாரா அலிஷா பெர்ரி, சந்தானம்
பிரீமியம் ஸ்டோரி
News
தாரா அலிஷா பெர்ரி, சந்தானம்

“ஆமா. சந்தானத்துக்குப் பாட்டியா நடிச்சிருக்காங்க. ரொம்ப பர்ஃபெக்டான ஆர்ட்டிஸ்ட்.

‘`என் முதல் படம் ‘ஜெயம்கொண்டான்’ல சந்தானம் நடிச்சிருப்பார். அவர் அப்போ சினிமாவுக்கு வந்த புதுசு. ‘கண்டேன் காதலை’ படத்தைத் தமிழில் ரீமேக் பண்றப்போ கதைக்காக சந்தானம் போர்ஷனைச் சேர்த்தோம். ஆனா, அந்தப் படத்தின் ஹைலைட்டே அவர்தான். சந்தானம் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகு இப்போதான் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. சம்மர்க்கான செம என்டர்டெய்ன்மென்ட் படமா ‘பிஸ்கோத்’ இருக்கும்’’ - ஆர்வமாய்ப் பேசுகிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

ஆர்.கண்ணன்
ஆர்.கண்ணன்

“பிஸ்கட் கம்பெனியில் அடிமட்டத்துல வேலை செய்ற ஒரு சராசரி ஆள் எப்படி உயர்பொறுப்புக்குப் போறான், எப்படி ஜெயிக்கிறான் என்பதுதான் படத்தின் ஒன்லைன். ‘மொட்டை’ ராஜேந்திரன், ஆனந்தராஜ், ‘லொள்ளுசபா’ மனோகரன், புஜ்ஜி பாபு, சிவசங்கர்னு நிறைய காமெடி நடிகர்கள் படத்துல இருக்காங்க. ரெண்டு ஹீரோயின் படத்துல இருக்காங்க. ஒருத்தர் ‘மிஸ் கர்நாடகா’ சுவாதி முப்பாலா. இன்னொரு ஹீரோயின் ரோலில் ‘A1’ படத்தில் நடிச்ச தாரா அலிஷா பெர்ரி நடிச்சிருக்காங்க.

‘`இந்தப் படம் செளகார் ஜானகியின் 400-வது படமாமே?’’

“ஆமா. சந்தானத்துக்குப் பாட்டியா நடிச்சிருக்காங்க. ரொம்ப பர்ஃபெக்டான ஆர்ட்டிஸ்ட். சரியான நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருவாங்க. சாப்பாடுகூட வீட்டுல இருந்தே கொண்டு வந்திருவாங்க. முக்கியமா, படத்துல அவங்க பயன்படுத்துன காஸ்ட்யூம் எல்லாம் அவங்களுடையது.

செட்ல இருக்குறப்போ அவங்க சொன்ன விஷயம் எல்லோருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ‘புதிய பறவை’ படத்துல ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாட்டோட ஷூட்டிங் ஏ.வி.எம்ல நடந்துட்டு இருந்ததாம். அப்போ அவங்களுக்குக் கொடுத்த சேலை அவ்வளவு சரியில்லையாம். ‘ஒருமணி நேரம் கொடுங்க. இந்தப் பாட்டுக்கு ஏத்த மாதிரியான சேலை என் வீட்ல வெச்சிருக்கேன்’னு இயக்குநர்கிட்ட சொல்லிட்டு வீட்டுக்குப் போய் மாத்திட்டு வந்திருக்காங்க. சிவாஜி சார் இவங்க வர்ற வரைக்கும் காத்துட்டிருந்திருக்கார்.

‘`வேறென்ன ஸ்பெஷல்?’’

‘`இந்தப் படத்துல சந்தானத்துக்கு மூணு கெட்டப் சேஞ்ச் இருக்கு. அதுல ஒண்ணு எண்பதுகளின் ஹீரோ கெட்டப். இதுக்காக சந்தானம் ‘சகலகலா வல்லவன்’ படத்துல வர்ற கமல் சார் மாதிரியே டிரஸ் போட்டுட்டு புல்லட்ல வருவார்.

இந்தப் போர்ஷன்ல ஒரு ஃபைட் சீன் இருக்கு. அதையும் அந்தக் காலத்துல எப்படி டிஷ்யூம் டிஷ்யூம் சவுண்ட் வெச்சு ஷூட் பண்ணியிருப்பாங்களோ அப்படித்தான் எடுத்தோம். அதே மாதிரி பதினெட்டாம் நூற்றாண்டுகளில் நடக்குற மாதிரியான அரண்மனை செட் ஐதராபாத்ல போட்டு ஷூட் போனோம்.’’

‘`இசையமைப்பாளர் ரதனுடன் தொடர்ந்து வேலை பார்த்துட்டிருக்கீங்களே?’’

‘`நிறைய பேர் ரதனைத் தெலுங்கு இசையமைப்பாளர்னு நினைச்சிட்டிருக்காங்க. அவர் சென்னைவாசி. ஏ.ஆர்.ரஹ்மான் சார் கிட்ட உதவியாளரா இருந்த ஒருத்தர். கஷ்டப்பட்டு மேலே வந்திருக்கிற திறமைசாலி. நாம எதிர்பார்க்குறதை அப்படியே கொடுப்பார். ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்துச்சு.’’

‘`ஒரே சமயத்துல சந்தானத்தின் ‘பிஸ்கோத்’ மற்றும் அதர்வாவின் ‘தள்ளிப்போகாதே’ ஷூட்டிங் போக என்ன காரணம்?’’

‘`அதர்வா படத்தின் ஷூட்டிங் முதலிலேயே ஆரம்பிச்சிட்டோம். இருபது நாள்ல முதல் ஷெட்யூலை முடிச்சிட்டோம். இதுல அதர்வா அடர்ந்த தாடியுடன் இருக்கக்கூடிய போர்ஷன் இருக்கு.

அதர்வா தாடி வளர்க்குறதுக்கு நடுவுல 60 நாள் கிடைச்சுச்சு. இந்த இடைவெளியில் சந்தானம் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிச்சு முடிச்சிட்டோம்.’’

‘`மணிரத்னத்தின் உதவி இயக்குநராக இருந்தவர் நீங்கள். இன்னும் அவருடன் தொடர்பில் இருக்கீங்களா?’’

“அடிக்கடி என் வாழ்க்கைல என்ன நடந்துட்டிருக்குன்னு கேட்டுத் தெரிஞ்சிக்குவார். என் படங்களின் ரிலீஸுக்குப் பிறகு ‘பொன்னியின் செல்வன்’ல மணி சார்கிட்ட உதவி இயக்குநரா திரும்பவும் வேலை பார்க்கணும்னு நினைக்குறேன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ பட ஷூட்டிங்கின் போது அவர்கிட்ட உதவி இயக்குநரா இருந்தேன். அப்பவே ‘பொன்னியின் செல்வ’னுக்கான ஸ்க்ரிப்ட் பேப்பரை ரெடியா வெச்சிருந்தவர் மணிரத்னம்.’’