Published:Updated:

Lokesh kanagaraj : மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி; தயாராகும் புது டீம்

கமல் - லோகேஷ்

`தளபதி 67' படத்தில் இயக்குநர் லோகேஷ் தற்போது பிஸியாக பணியாற்றி வருகிறார்.

Published:Updated:

Lokesh kanagaraj : மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி; தயாராகும் புது டீம்

`தளபதி 67' படத்தில் இயக்குநர் லோகேஷ் தற்போது பிஸியாக பணியாற்றி வருகிறார்.

கமல் - லோகேஷ்

'மேயாத மான்', 'ஆடை', 'குளுகுளு' போன்ற படங்கள் எடுத்தவர் இயக்குநர் ரத்ன குமார். இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய படங்களில் இணை எழுத்தாளராகவும் பணியாற்றியவர். தற்போது இவர், நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் தயாராகிவரும் 'தளபதி 67' படத்தின் வசனம் மற்றும் திரைக்கதையில் இயக்குநர் லோகேஷுடன் இணைத்து பிசியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த வேலையை முடித்த கையோடு ரத்னக்குமார், நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து படம் ஒன்றை இயக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் RKFI தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்தப் படத்தின் கதை லோகேஷ் கனகராஜுடையது என்று கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் 'சந்திரமுகி-2' உட்பட இன்னும் இரண்டு படங்களை தன் வசம் வைத்துள்ள நிலையில் தற்போது, இயக்குநர் ரத்னக்குமாரின் இந்தப் படத்தையும் தனது லைன் அப்பில் அடுத்தடுத்து வைத்துள்ளார் என்கின்றனர்.