சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“முன்னாள் காதலர்களின் தீராக் காதல்!”

தீராக் காதல் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
தீராக் காதல் படத்தில்...

ரொம்ப வருஷத்துக்குப் பிறகு, முன்னாள் காதலர்கள் சந்திச்சுக்கிற சூழல் வருது. ரெண்டு பேருமே இப்போ வெவ்வேற வாழ்க்கை வாழ்ந்துகிட்டிருக்காங்க.

2017 தமிழ் சினிமாவுக்குக் கொடுத்த பல நல்ல இயக்குநர்களில் ஒருவர் ரோஹின் வெங்கடேசன். ‘அதே கண்கள்' என்ற தன் அறிமுகப் படத்தில் அனைவரின் கண்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இப்போது, ‘தீராக் காதல்' படத்தை இயக்கி முடித்து, அதைப் பற்றி தீராக் காதலோடு நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

தீராக் காதல் படத்தில்...
தீராக் காதல் படத்தில்...
தீராக் காதல் படத்தில்...
தீராக் காதல் படத்தில்...

‘‘உங்க அறிமுகப் படத்திற்கு நல்ல வரவேற்பு...’’

‘‘என் ‘அதே கண்கள்' படத்துக்குக் கிடைச்ச வரவேற்பு ரொம்ப நெகிழ வச்சுது. ரெண்டாவது படமா ‘தீராக் காதல்'தான் பண்ண வேண்டியது. அப்போ வேறொரு நடிகருக்குக் கதை சொல்லி, ஓகே பண்ணியிருந்தோம். ஆனா, அவருடைய கமிட்மென்ட்ஸ்னால தாமதமாகிட்டே இருந்தது. அந்த இடைவெளியில வந்த வாய்ப்புதான், ‘அனந்தோ பிரம்மா' படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பெட்ரோமாக்ஸ்.' அது முடிஞ்சதும், உடனே ‘தீராக் காதல்' பண்ண முடியலை. அப்புறம் லாக்டெளன் வந்திடுச்சு. அந்த இடைவெளியில நானும் எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்திரநாத் சாரும் நிறைய கதைகள் பேசினோம். ஆனா, ‘தீராக் காதல்' கதைக்குள்ள ஏதோ ஒண்ணு என்னை மறுபடியும் இழுத்தது. அதுதான் இப்போ படமா வந்து நிக்குது.’’

தீராக் காதல் படத்தில்...
தீராக் காதல் படத்தில்...
தீராக் காதல் படத்தில்...
தீராக் காதல் படத்தில்...

‘‘ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா...’’

‘‘இந்தப் படத்துக்குள் முதலில் வந்தது ஐஸ்வர்யா ராஜேஷ்தான். அவங்களுக்குக் கதை ரொம்பப் பிடிச்சது. வெவ்வேற படங்களின் ஷூட்டிங்ல இருந்தாலும் அவங்க திடீர்னு போன் பண்ணி, ‘இந்த சீன்ல என் கேரக்டர் இப்படிப் பேசுனா நல்லாருக்கும்ல'ன்னு கேட்பாங்க. அவங்க சொன்ன சின்னச்சின்ன விஷயங்கள் எல்லாம் அந்தக் கேரக்டரை அழகாக்குச்சு. அப்புறம்தான், லைகாகிட்ட சொல்லி புராஜெக்ட் ஆரம்பமானது. கெளதம் கேரக்டர் ஜெய் நடிச்சா நல்லாருக்கும்னு தோணுச்சு. முன்னாள் காதலர்கள் கிடைச்சாச்சு. இப்போ ஜெய் மனைவி கேரக்டர் யார்னு யோசிச்சப்போ, ஷிவதா ஞாபகம் வந்தாங்க. ஏற்கெனவே, நாங்க ‘அதே கண்கள்'ல வொர்க் பண்ணியிருந்தோம். ஜெய் - ஷிவதாவுடைய குழந்தையா நடிக்க வைக்க நிறைய குழந்தைகளை ஆடிஷன் பண்ணினோம். அப்போ ஜெய் ‘காபி வித் காதல்' ஷூட்டிங்ல ஒரு குழந்தையோட வீடியோ போட்டிருந்தார். அந்தக் குழந்தை வ்ரித்தி ரொம்ப பிஸி. நிறைய படங்கள்ல நடிச்சுட்டிருக்காங்க. படத்திலும் ரொம்ப க்யூட்டா இருப்பாங்க.’’

ரோஹின் வெங்கடேசன்
ரோஹின் வெங்கடேசன்

‘‘நிறைய காதல் படங்கள் வந்திடுச்சு. அதிலிருந்து வித்தியாசப்படுத்தி மக்களை ஈர்க்கிறது இப்போ இருக்கிற சூழல்ல பெரிய சவால். அதை எப்படிக் கையாண்டிருக்கீங்க?’’

‘‘ரொம்ப வருஷத்துக்குப் பிறகு, முன்னாள் காதலர்கள் சந்திச்சுக்கிற சூழல் வருது. ரெண்டு பேருமே இப்போ வெவ்வேற வாழ்க்கை வாழ்ந்துகிட்டிருக்காங்க. அந்தச் சந்திப்பில் என்ன நடக்குது, அவங்க உரையாடல் எப்படியிருக்கும்னு எழுத ஆரம்பிச்சோம். காதல் பிரிவுக்குப் பிறகு, ஒரு ஆண் எப்படி இருப்பான், அவனுடைய எமோஷன் என்ன, அடுத்து எப்படி வாழ்க்கையை எதிர்கொள்றான்னு நிறைய படங்கள்ல பார்த்திருப்போம். இதுல அதே உணர்வை அந்தப் பெண்ணும் எப்படி கடந்துவர முயற்சி செய்றா, அதுக்குப் பிறகு, வாழ்க்கையை எப்படிப் பார்க்குறா, சூழ்நிலை அவங்களை எங்கே கொண்டுபோகுதுன்னு திரைக்கதை பண்ணியிருக்கோம். ஜெய், ஐஸ்வர்யா, ஷிவதா மூணு பேருக்கும் நடிக்கிறதுக்கான முக்கியத்துவம் நிறையவே இருந்தது.

ரிலேஷன்ஷிப்பைக் கையாளக்கூடிய பக்குவம் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்தந்த சந்தர்ப்பத்துல என்ன மாதிரி முடிவுகள் எடுக்குறாங்க, எப்படி அதை எதிர்கொண்டா எல்லோரும் நிம்மதியா இருக்கமுடியும், இதெல்லாம் பேசுற கதையா ‘தீராக் காதல்' இருக்கும். ‘மற்ற ஊர்கள்ல காதலர்கள் சேர்ந்தாலோ பிரிந்தாலோ அவங்க மட்டும்தான் காரணமா இருப்பாங்க. இந்தியாவுல மட்டும்தான் சேர்றதுக்கும் பிரியறதுக்கும் மத்தவங்களோட பங்களிப்பு இருக்கும்'னு சேத்தன் பகத் புத்தகத்துல படிச்சேன்னு நினைக்கிறேன். அந்த மாதிரி சூழல்ல இருக்கிற காதலர்கள் ஏன் பிரிஞ்சாங்கன்னு கதை தொடங்கும். கதாபாத்திரங்களுடைய உணர்வும் அதன் ஆழமும் நிச்சயமா உங்களை ஈர்க்கும். சுரேந்திரநாத் சாரோட வசனங்கள் பேசப்படும். எல்லோராலும் தங்களை கதாபாத்திரங்களோடு தொடர்புபடுத்திக்க முடியும்.’’