சினிமா
தொடர்கள்
Published:Updated:

“விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான்!”

எஸ்.ஜே.சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ஜே.சூர்யா

என்னோட பயணம் போயிட்டே இருக்கு. ‘பொம்மை’ படத்துல ஹீரோவா பண்ணியிருக்கேன். ராதாமோகன் விரட்டி விரட்டி வேலை வாங்கியிருக்கிறார்.

வாழ்க்கை நல்லாப் போயிட்டிருக்கு. நல்ல நல்ல விஷயங்கள் நடக்குது. இறைவனுக்கு நன்றி’’ என்று தொடங்கினார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. பிஸி ஷெட்டியூலுக்கு நடுவில் கேட்ட கேள்விகளுக்கு நிதானமாக பதில் சொன்னார்.

`` `டான்’ படத்தின் அனுபவம் எப்படியிருந்தது?’’

“டான் ஸ்கிரிப்ட் கேட்டப்பவே அவ்ளோ நல்லா இருந்தது. ‘மாநாடு’ அதிரடியான ஹிட்டுன்னா ‘டான்’ அழகான ஹிட்டா இருக்கும். இந்தப் படத்தின் இயக்குநர் சிபி ஸ்பாட்ல நடிச்சுக் காட்டுவார். எனக்கு இதுவரைக்கும் பண்ணாத ரோல். சிவகார்த்திகேயனுடன் முதல் படம். கண்டிப்பா ஹிட் ஆகும்.”

“விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான்!”
“விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான்!”
“விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான்!”

``எப்போதும் டைரக்டர் ஆர்ட்டிஸ்ட்தான் சூர்யாவா?’’

``ஆமா, கண்டிப்பா. கதை கேக்குறப்போ டைரக்டர் என்னைத் திருப்திப்படுத்தணும்னு ஆசைப்படுவேன். ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்டரை நான் திருப்திப்படுத்தணும்னு ஆசைப்படுவேன். இதனால், எப்போதும் ஸ்பாட்ல டைரக்டர் சொல்றதை மட்டும்தான் ஃபாலோ பண்ணுவேன். அவங்களைத் திருப்திப்பட வெச்சிட்டா ஆடியன்ஸும் திருப்தி அடைஞ்சிருவாங்க. ரொம்ப சிம்பிள்!”

``சிவகார்த்திகேயனுடன் நடிச்ச அனுபவம் பத்திச் சொல்லுங்க...’’

“அவர் இப்போ ஒரு பெரிய இடத்துல இருக்கார். இருந்தாலும், ‘ஜோடி நம்பர் ஒன்’ ஷோவுல இருந்த மாதிரிதான் எளிமையா இருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்ல கவுண்டமணி சார் காமெடி டயலாக்ஸ் நிறைய பேசிட்டு இருப்பார். காலேஜ் ஸ்டூடண்ட்டா நல்லா பண்ணியிருக்கார். காலேஜ் கலாட்டாக்கள் எல்லாம் அவரது ஸ்டைல்ல இருக்கும். அதைத் தாண்டி எமோஷனல் கனெக்ட் ஒண்ணு வரும். விஜய் சாருக்கு அப்புறம் எல்லாருடைய ஃபேமிலியிலும் நம்ம வீட்டுப் பிள்ளையா நினைக்கிறது சிவகார்த்திகேயனைத்தான். அதற்குத் தகுதியான குணங்கள் அவரிடம் இருக்கு.”

“விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான்!”
“விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான்!”
“விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான்!”

``ஹீரோவா நடிச்சிட்டிருக்கிற படங்கள்..?’’

“என்னோட பயணம் போயிட்டே இருக்கு. ‘பொம்மை’ படத்துல ஹீரோவா பண்ணியிருக்கேன். ராதாமோகன் விரட்டி விரட்டி வேலை வாங்கியிருக்கிறார். ரத்தமும் சதையும் கலந்த இசையை யுவன் கொடுத்திருக்கார். ‘கடமையைச் செய்’ படத்தில் யாஷிகா ஆனந்த்கூட நடிச்சிருக்கேன். படத்தின் டைரக்டர், சுந்தர்.சி சார் அசிஸ்டெண்ட். நல்ல கன்டென்டை வித்தியாசமான ஸ்டைல்ல கொடுத்திருக்கார். தவிர, வெப் சீரிஸ் ஒண்ணு பண்ணியிருக்கேன். இதைப் பற்றி இப்போ பெருசா பேச முடியாது. சீக்கிரம் அறிவிப்பு வரும். எப்போதும் ஒரு கதையை டைரக்டரா கேட்க மாட்டேன். நடிகராதான் கேட்பேன்.”

``பேன் இந்தியா படங்களை எப்படிப் பார்க்கிறீங்க?’’

“ஆரோக்கியமான விஷயமா பார்க்கிறேன். வெற்றி இப்படித்தான் இருக்கணும். கண்ணுக்குத் தெரியாத தேச ஒருமைப்பாட்டை பேன் இந்தியா படங்கள் உருவாக்குது. நம்ம சவுத் இந்தியா படங்கள் நார்த் இந்தியாவில் போயிட்டிருக்கு. ‘கங்குபாய்’ படத்தை மும்பைல பார்த்தப்போ நாலு படத்தோட டிரெய்லர் ஓடிட்டிருந்தது. இதுல ரெண்டு படங்கள் சவுத் இந்தியாவைச் சேர்ந்தது. ்ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

‘மாநாடு’ ரீமேக் மட்டும் பன்னிரண்டு கோடிக்குப் போயிருக்கு. ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஆயுஷ்மான் குரானா ஷூட்டிங் போயிருக்கார். அங்கே ஆயுஷ்மான் `என்னங்க, இவர் ‘மாநாடு’ல இப்படி நடிச்சிருக்காரு’ன்னு என்னைப் பற்றிச் சொல்லியிருக்கார். நல்ல விஷயம்னு நினைச்சேன். ரஜினி சார் பாராட்டியது இன்னும் பெரிய சந்தோஷம். சினிமாவுக்கு அவரைப் பார்த்து வந்தவன் நான். ‘சார், கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சீங்களா, நீங்க பண்ணுனதுதான் பண்ணியிருப்பேன்’னு சொன்னேன். நடிப்பப் பொறுத்தவரைக்கும் சிவாஜி மற்றும் ரஜினி சார் தவிர்க்க முடியாது. இவங்க எல்லாரையும் பார்த்துதானே வளர்ந்திருக்கேன்.”

“விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான்!”
“விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான்!”
“விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான்!”

``இன்னும் சிங்கிளா இருக்கீங்க. இப்படியே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?’’

“ராபர்ட் டி நீரோ நடிச்ச ‘ஹீட்’ படத்துல ஒரு டயலாக் வரும். ‘are you lonely?’ன்னு ஒரு பொண்ணு ஹீரோ கிட்ட கேட்கும். அதுக்கு, ‘I am alone, am not lonely’ன்னு பதில் சொல்லுவார். அந்த வசனம் ரொம்ப கனெக்ட் ஆச்சு. எப்போதும் நான் lonely-யா இருந்ததில்ல. ஆனா, தனிமைல இருந்திருக்கேன். ஏன்னா, என்னோட மைண்ட் வொர்க் பண்ணிட்டிருக்கும். ஓடிக்கிட்டே இருக்கேன். சாதிக்கணும்னு நினைக்கும் விஷயங்கள் நிறைய இருக்கு. என் மைண்ட் போற ஸ்பீடுக்கு வாழ்க்கை போக மாட்டேங்குது. எதையும் பிளான் பண்ணல. ஆன் தி ப்ளோல வாழ்க்கை போகுது. எதுவும் யோசிக்கல. இப்பதான் லயோலா காலேஜ்ல படிச்சிட்டு வெளியே வந்து அஞ்சு வருஷம் ஆன மாதிரி ஸ்டேட் ஆப் மைண்ட் இருக்கு.”

``இயக்குநர் சூர்யாவை எப்போ பார்க்கலாம்?’’

“விரைவில் என்னோட டைரக்‌ஷன்ல நடிக்கப்போறேன். படத்தோட பேர் ‘கில்லர்.’ பேன் இந்தியா படமா பிளான் பண்றேன். இப்போ, நிறைய படங்களில் நடிச்சிட்டிருக்கேன். அதனால, இந்த பிளான் தள்ளிப்போயிருக்கு. சீக்கிரமே நல்ல சேதி சொல்றேன்!”