சினிமா
தொடர்கள்
Published:Updated:

“‘பீஸ்ட்’ என் ‘கூர்கா’ மாதிரி இல்லை!”

அதர்வா
பிரீமியம் ஸ்டோரி
News
அதர்வா

`மூணு முறை `பீஸ்ட்' பார்த்துட்டேன். ஹாலிவுட்ல கிறிஸ்துமஸ் பிலிம்ஸ்னு இருக்கு. எல்லாமே கிறிஸ்துமஸ் பின்னணியில நடக்கிற கதைகள்தான்

“‘பீஸ்ட்’ என் ‘கூர்கா’ மாதிரி இல்லை!”

``அதர்வாவை வெச்சு '100'னு ஒரு போலீஸ் படம் பண்ணியிருந்தேன். இப்போ ரெண்டாவது முறையா நானும் அதர்வா பிரதரும் சேர்ந்து இன்னொரு போலீஸ் படம் பண்ணியிருக்கோம். ஆனால், வேற மாதிரியான போலீஸ் படம். அதர்வா இதுல காக்கிச் சட்டையிலேயே வரமாட்டார். போலீஸ்காரர்களின் பர்சனல் பக்கங்களைக் காட்டியிருக்கேன். தவிர, காவல்துறைக்குள்ள தனியா ஒரு டீம் இருக்காங்க. அவங்களுடைய வேலை என்னன்னா, காவல்துறைக்குள்ள நடக்கிற தவறுகளைக் கண்காணிக்கிறதுதான். அதுல போலீஸே அண்டர் கவர் ஆப்ரேஷன்ல இருந்து கண்டுபிடிப்பாங்க. இந்த விஷயத்தைப் பத்தி எந்தப் படமும் வந்ததில்லை. இதுவரைக்கும் வெளியான எத்தனையோ போலீஸ் படங்கள்ல இருந்து இந்தப் படம் வித்தியாசமா இருக்க இது காரணமா இருக்கும்னு நினைக்கிறேன். அந்த அண்டர் கவர் ஆப்ரேஷன் டீம்ல வேலை செய்யுற போலீஸ்தான் அதர்வா'' என தன் அடுத்த படமான `ட்ரிகர்' பற்றி நம்பிக்கையாகப் பேசுகிறார், இயக்குநர் சாம் ஆண்டன்.

“‘பீஸ்ட்’ என் ‘கூர்கா’ மாதிரி இல்லை!”

`` ‘100', ‘ட்ரிகர்'னு இரண்டு போலீஸ் படங்கள். காவல்துறை நபர்கள் நிறைய பேர்கூட பயணிச்சிருப்பீங்க. அந்த அனுபவம் எப்படி இருந்தது?’’

‘‘ரொம்ப நல்ல அனுபவம். வழக்கமான படமா இருந்திடக்கூடாதுன்னு காவல்துறை அவசர போன் அழைப்பை வெச்சு `100' பண்ணினேன். அந்தக் கதைக்காக நிறைய பேரை சந்திச்சு ஆராய்ச்சி பண்ணினேன். அப்போதான் போலீஸ் டீமுக்குள்ளயே ஒரு அண்டர் கவர் டீம் இருக்கும்னு எனக்குத் தெரிய வந்தது. அவங்களுடைய நடவடிக்கைகள் பத்திக் கேட்டபோது, ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. அப்பவே இதை வெச்சு ஒரு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி, ‘100' ஷூட்டிங் ஸ்பாட்லயே அதர்வாகிட்ட சொல்லிட்டேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. அந்த விஷயம் இருந்தாலும் படத்துல ஒரு அப்பா - மகனுக்கு இடையேயான எமோஷன் ஒண்ணு இருக்கு. அதுதான் படமே. அப்பாவா அருண்பாண்டியன் சார் நடிச்சிருக்கார்.

அவரிடம் கதை சொல்லும் போது அவருடைய கேரக்டர் இப்படிதான்னு சில விஷயங்கள் சொன்னேன். அப்போ `நீங்க பெரும்பாலும் உங்க இடது கையைப் பயன்படுத்தவே மாட்டீங்க, க்ளைமாக்ஸ்ல அதுக்கு காரணம் இருக்கு’ன்னு சொல்லியிருந்தேன். ஷூட்டிங் பரபரப்புல நான் அதைக் கவனிக்கலை. ஆனா, எடிட்ல பார்க்கும்போது, அவர் ஒரு ஷாட்ல கூட அவருடைய இடது கையைப் பயன்படுத்தலை. எனக்கு ஆச்சர்யமா இருந்தது. அதுதான் அனுபவம்னு புரிஞ்சது.''

“‘பீஸ்ட்’ என் ‘கூர்கா’ மாதிரி இல்லை!”

``ஹீரோயின் தான்யா ரவிச்சந்திரனுக்கு என்ன மாதிரியான கேரக்டர்?’’

‘‘ ‘100' படத்துக்கு வந்த முக்கியமான விமர்சனமே ஹன்சிகாவுக்கு முக்கியத்துவம் இல்லைன்னுதான். அதை இந்தப் படத்துல சரி பண்ணியிருக்கேன். தான்யா இதுல ஆதரவற்றோர் ஆசிரமத்தின் பொறுப்பாளரா வருவாங்க. கதையில அவங்க மூலமாதான் எல்லா விஷயங்களும் வெளிவரும். சின்னி ஜெயந்த் சார், முனீஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன், அழகம்பெருமாள் சார்னு நிறைய பேர் இருக்காங்க. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் வசனம் எழுதியிருக்கார். தயாரிப்புத் தரப்புல இருந்து டயலாக் வேற யாரையாவது எழுத வைக்கலாமான்னு கேட்டாங்க. தாராளமா எழுத வைக்கலாம்னு சொன்னேன். அவங்க சொன்ன பெயர், மித்ரன். நானும் மித்ரனும் நண்பர்கள். கேட்டதும் ஓகே சொல்லி எழுதிக்கொடுத்தார்.''

“‘பீஸ்ட்’ என் ‘கூர்கா’ மாதிரி இல்லை!”
“‘பீஸ்ட்’ என் ‘கூர்கா’ மாதிரி இல்லை!”

`` ‘பீஸ்ட்' டிரெய்லர் வெளியானதில் இருந்து, உங்களுடைய ‘கூர்கா'வை ஒப்பிட்டுப் பேச்சுகள் வந்தன. ‘பீஸ்ட்' பார்த்தீங்களா?’’

``மூணு முறை `பீஸ்ட்' பார்த்துட்டேன். ஹாலிவுட்ல கிறிஸ்துமஸ் பிலிம்ஸ்னு இருக்கு. எல்லாமே கிறிஸ்துமஸ் பின்னணியில நடக்கிற கதைகள்தான். அதெல்லாம் ஒண்ணு கிடையாது. மால் ஹைஜாக் அப்படிங்கிற ஒரு விஷயம் பொதுவா இருக்கிறதனால அப்படிப் பேசுறாங்க. நாங்க எடுத்தது சின்னப்படம். ‘பீஸ்ட்' விஜய் சார் படம். ரெண்டையும் ஒப்பிடவே முடியாது. அப்படிப் பார்த்தா ‘கேப்டன் பிரபாகரன்', ‘புஷ்பா' இந்த ரெண்டு படங்களும் காட்டுக்குள்ள நடக்குற கதை, அதுல ‘ஆட்டமா தேரோட்டமா...' இதுல ‘ஊ சொல்றியா...' பாடல். அது ரெண்டும் ஒண்ணுன்னு சொல்லமுடியுமா? இல்லை. `டார்லிங்', `அரண்மனை', `காஞ்சனா' இதெல்லாம் ஒண்ணா? எல்லாம் வெவ்வேற படங்கள். எனக்கு விஜய் சாருடைய `வசீகரா', `புலி' ரெண்டு படங்களும் பிடிக்கும். அதுல அவர் வித்தியாசமா இதுவரை பண்ணாத ஒன்றை முயற்சி பண்ணியிருப்பார். அது மாதிரி, இதுவரை பண்ணாத விஷயத்தைப் பண்ணிப்பார்க்கலாம்னு `பீஸ்ட்' படத்தை நினைச்சிருக்கார். நெல்சன் ரொம்ப நல்ல இயக்குநர். `கூர்கா' படத்துக்கு நான், ரூபன் எல்லோரும்தான் தயாரிப்பாளர்கள். எங்களுக்கு `பீஸ்ட்' பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது.''