Published:Updated:

பூ ராமு: "சார் என்று அழைப்பதைவிட தோழர் என்று அழைப்பதில்தான் ஒட்டுதல் அதிகம் என்பார்" -இயக்குநர் சசி

`பூ' ராமு

மறைந்த நடிகர் 'பூ' ராமுவின் நினைவுகளைப் பகிர்கிறார் இயக்குநர் சசி.

பூ ராமு: "சார் என்று அழைப்பதைவிட தோழர் என்று அழைப்பதில்தான் ஒட்டுதல் அதிகம் என்பார்" -இயக்குநர் சசி

மறைந்த நடிகர் 'பூ' ராமுவின் நினைவுகளைப் பகிர்கிறார் இயக்குநர் சசி.

Published:Updated:
`பூ' ராமு
பிரபல குணச்சித்திர நடிகரான 'பூ' ராமு உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இவரது இறப்பிற்கு திரையுலகினர் மட்டுமில்லாமல் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். `பூ', 'நீர்ப்பறவை', 'கர்ணன்', 'சூரரைப் போற்று', 'பரியேறும் பெருமாள்' என இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இயக்குநர் சசியின் 'பூ' படம் தான் இவரது முதல் படம்.

நடிகர் ராமுவைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் சசி, அவர் குறித்தும் அவருடன் பணியாற்றிய நினைவுகள் குறித்தும் உருக்கமாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "தோழமை என்ற வார்த்தைக்கு ராமு அவர்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். சார் என்று அழைப்பதைவிட தோழர் என்கிற வார்த்தையில் ஒட்டுதல் அதிகம் என்பார். சிலருடைய சிரிப்பில் வெள்ளந்தித்தனம் இருக்கும். நான் 'பூ' ராமுவின் சிரிப்பை விடுதலைப் புலிகள் தளபதி தமிழ்செல்வனோடு எப்பவும் ஒப்பிடுவேன். மனசு அப்படி. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பார். இவரைப் பார்த்தவுடன் எனது கேரக்டருக்குத் தேர்வு செய்துவிட்டேன்.

`பூ' ராமு
`பூ' ராமு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேக்கப் வேண்டாம் என்று நினைப்பார். இயற்கையான தோற்றத்தில் வருவதையே விரும்புவார். பின்புதான் அவர் நாடகவியலாளர் பிரளயன் குரூப்பில் இருந்திருக்கிறார் என்பது தெரிந்தது. அவர் 'பூ'ல் நடிக்கும்போது எனக்கு எந்த சிரமமும் கொடுக்கவில்லை. அவர் அப்படியே வாழ்ந்ததாகவே கருதுகிறேன். அவர் அப்படிக் கருதி நடித்ததை பூ சினிமாவிலும் எல்லோரும் உணர்ந்தார்கள். ஒவ்வொரு படங்கள் ரிலீசாகும்போது பேசுவார். அவரது ஒவ்வொரு படங்களையும் நான் அவரிடம் பேசி விவாதிப்பேன். தேர்வு செய்துதான் நடிப்பார். அவரை தோழர் என்பதில் எனக்கு சந்தோஷம் வருகிறது. எப்போதும் அவர் எளிய மனிதர்களின் பக்கமாகவே இருந்தார். அவரது ஒவ்வொரு பேச்சிலும் நடவடிக்கையிலும் தெள்ளத் தெளிவாக அது தெரியும். என்னிடம் எப்போதும் சிரித்துப் பேசும் வாழ்க்கையை அலசும் ராமு தான் என் நினைவில் இருக்கிறார். சென்று வாருங்கள் என கனத்த மனதோடு தான் சொல்லி அனுப்பினேன். இழப்புணர்ச்சி பதுங்கிக் கொண்டுதான் நிற்கும். எப்போதும் என் நினைவில் ராமு இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.