சினிமா
Published:Updated:

மக்கள் கேட்கிறதைக் கொடுக்கிறவன் வியாபாரி... தன்பக்கம் இழுக்குறவன் கலைஞன்!

கருமேகங்கள் கலைகின்றன படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
கருமேகங்கள் கலைகின்றன படத்தில்...

ஐயோ, அந்த மனுஷன் அவ்வளவு பிஸி. அவர் சாப்பிடும்போதுதான் கதை சொல்ல நேரம் கிடைச்சது. இந்தக் கதையைச் சொன்னதும் ‘வந்துடுறேன் ஐயா'ன்னு சொன்னார்.

``நிறைய அவகாசம் எடுத்துக்கிட்டு என்னையும் புதுப்பிச்சுக்கிட்டு செய்யற படம் தான் `கருமேகங்கள் கலைகின்றன.' என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு படைப்பு சும்மா பொழுதுபோக்காக மட்டும் இல்லாம, எங்கேயோ ஒரு ஓரத்தில் உங்களின் இதயத்தில் ஒட்டணும். கொஞ்சம் ஸ்தம்பிக்க வச்சு, ஒரு ராத்திரியாவது உங்களைத் தூங்கவிடாமல் பண்ணணும். வாழ்க்கை எப்பவும் நம்மைச் சீட்டுக்கட்டு மாதிரி கலைச்சுப் போட்டு வேடிக்கை பார்க்குது. அதையும் `அழகி'க்குப் பிறகு அனுபவ முதிர்ச்சியோடு நான் எடுத்திருப்பது மகிழ்ச்சியா இருக்கு. இதில் எல்லோரும் முகம் பார்த்துக்கலாம். என் படங்களில் இன்னொரு மைல் கல் இது''- ஆழ்ந்து பேசுகிறார் இயக்குநர் தங்கர் பச்சான். தமிழ் சினிமாவில் நிறைவும் உணர்வுமாய் நிரம்பியவர்.

“ 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற தலைப்பு பொருள்பட இருக்கு. இதில் நீங்கள் சொல்ல வருவது என்ன?”

“பல்வேறு மனிதர்களின் பலவிதமான மனங்கள். அவர்களின் உறவுநிலை சார்ந்த பிணக்கு, அன்பு, பிரிவு, தேடல் குறித்தும் படம் சொல்லும். என்னுடைய சிறுகதையைத் தழுவித்தான் எடுக்கிறேன். ஒவ்வொருத்தரும் கிடைத்த வாழ்க்கையைக் கடந்து வந்திடுறோம். திரும்பிப் பார்த்து சரியாக இருந்திருக்கிறோமா என்பது நமக்கு மட்டும்தான் தெரியும். நாமே கேள்வி கேட்டுக்கிட்டால் எல்லோரும் மாட்டிக்குவோம். படம் அது குறித்தும் பேசுகிறது. மனசாட்சிக்குத்தான் நாம் யாரு எப்படி வாழ்ந்திருக்கிறோம்னு தெரியும். மனிதர்களைக் கடந்து போயிடலாம். மனசுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்? இவ்வளவு அழுத்தமாக நான் முயன்று பார்த்ததில்லை. தயாரிப்பாளர் வீரசக்தி ஒரு தொந்தரவும் செய்யலை. எந்த நெருக்கடியும் தராமல் ஒரு படம் எடுக்கிறது எவ்வளவு நல்லாருக்கு பாருங்க... என் உயிரையும் உணர்வையும் எரிபொருளா போட்டுக் கிடைத்த படம்னு சொல்லிடலாம்.''

தங்கர் பச்சான்
தங்கர் பச்சான்

“ரொம்ப ஆச்சரியம் யோகி பாபு, பாரதிராஜா, கௌதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர்னு... எப்படி சம்மதிக்க வைச்சீங்க?”

“என் படங்களில் ஸ்டார்கள் நடிக்க மாட்டாங்க. உண்மைக்குப் புறம்பான படங்கள்தான் அவங்க விருப்பம். என்னுடைய கதைகள் உண்மையை மட்டும் பேசுவதால் தயங்குறாங்க. இந்தக் கதைக்கு அசலான நடிகர்கள் வேணும். எனக்கு இவர்களைவிடவும் பாத்திர வடிவுக்கு யாரும் கிடையாது. அதற்காக இது உலக சினிமாவெல்லாம் கிடையாது. நம்ம மண்ணுக்கு ஏத்த மாதிரி தான் படம் எடுக்க முடியும். அதில் கிடைக்கிற செய்தி மட்டும்தான் உலகத்துக்குக் கிடைக்கும். பாரதிராஜா அளவுக்கு யாரும் இதில் செய்ய ஆளில்லை. ஒவ்வொரு நாளும் ‘தங்கர், உன் படத்தில் நடிக்கிறது எனக்குப் பெருமைடா'ன்னு சொல்லுவார். தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிக் காட்டிய மனுஷன், மனசில் இருக்கிறதைக் கொட்டுறார். இந்நேரம் படமே முடிந்திருக்க வேண்டியது. அவர் மருத்துவமனையில் கொஞ்ச நாள் இருக்கிற மாதிரி ஆகிவிட்டது. அங்கே போய்ப் பார்த்தால் ‘ரெடி பண்ணு தங்கரு வந்துடுறேன். பிரமாதப்படுத்திடலாம்'னு எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்புறார்.''

“யோகி பாபு இதில் அமைஞ்சது எப்படி?”

“ஐயோ, அந்த மனுஷன் அவ்வளவு பிஸி. அவர் சாப்பிடும்போதுதான் கதை சொல்ல நேரம் கிடைச்சது. இந்தக் கதையைச் சொன்னதும் ‘வந்துடுறேன் ஐயா'ன்னு சொன்னார். அதன்படியே வந்து நடித்துக் கொடுத்தார். அவரை நகைச்சுவை நடிகர்ன்னு மட்டும் சொல்லிட முடியாது. அவர் வந்த பின்னாலதான் எல்லோரும் வந்து அமைஞ்சாங்க. ‘மண்டேலா' படத்தில் நடிச்ச பின்னாடி நம்ம படம் காலத்திற்கும் நிற்கணும்னு நினைக்கிறார். நம்ம படத்துக்கு வந்து சேர அது ஒண்ணு போதுமே.''

மக்கள் கேட்கிறதைக் கொடுக்கிறவன் வியாபாரி... தன்பக்கம் இழுக்குறவன் கலைஞன்!
மக்கள் கேட்கிறதைக் கொடுக்கிறவன் வியாபாரி... தன்பக்கம் இழுக்குறவன் கலைஞன்!
மக்கள் கேட்கிறதைக் கொடுக்கிறவன் வியாபாரி... தன்பக்கம் இழுக்குறவன் கலைஞன்!
மக்கள் கேட்கிறதைக் கொடுக்கிறவன் வியாபாரி... தன்பக்கம் இழுக்குறவன் கலைஞன்!

“கௌதம் மேனனும் எஸ்.ஏ.சி-யும் எப்படி?”

“நான்தான் கௌதமை ‘பள்ளிக்கூடம்’ படத்தில் நடிக்கச் சொன்னேன். அப்போதிருந்த சூழல்ல முடியல. அவர்கிட்டே ஒரு நடிகன் இருக்கிறார் என்று கண்டுபிடிச்சதே நான்தான். இதுல அவருக்குப் பொருத்தமான வேடம். அவ்வளவு கச்சிதமாக நடித்தார். எஸ்.ஏ.சி-யின் அனுபவம் இதில் பேசுகிறது. மம்தா மோகன்தாஸ் முக்கியமான கண்மணிங்கிற பொண்ணா வர்றாங்க. நந்திதா தாஸுக்குப் பக்கத்தில் வர்ற கேரக்டர். 20 வருஷம் கழிச்சு லெனின் மறுபடியும் எடிட் பண்றார். நல்ல பாடல்களை ஜி.வி.பிரகாஷ் போட்டுக்கொடுத்தார். சினிமாவுக்காக உட்கார்ந்து கதை எழுதுவது உலகத்திலேயே நம்ம ஊர் தவிர எங்கேயும் கிடையாது. இங்கே நடிகர்களுக்கு தகுந்த மாதிரிதான் கதை எழுதுறாங்க. நான்தான் நாஞ்சில் நாடன் கதையை எடுத்தேன். ‘கல்வெட்டு' கதையை ‘அழகி'யாக்கினேன். ‘அம்மாவின் கைப்பேசி', ‘ஒன்பது ரூபாய் நோட்டு' எல்லாம் அப்படி வந்ததுதான். மக்கள் கேட்கிறதைக் கொடுக்கிறவன் வியாபாரி. அவங்களைத் தன் பக்கம் இழுக்கிறவன்தான் கலைஞன்.''

மக்கள் கேட்கிறதைக் கொடுக்கிறவன் வியாபாரி... தன்பக்கம் இழுக்குறவன் கலைஞன்!
மக்கள் கேட்கிறதைக் கொடுக்கிறவன் வியாபாரி... தன்பக்கம் இழுக்குறவன் கலைஞன்!
மக்கள் கேட்கிறதைக் கொடுக்கிறவன் வியாபாரி... தன்பக்கம் இழுக்குறவன் கலைஞன்!
மக்கள் கேட்கிறதைக் கொடுக்கிறவன் வியாபாரி... தன்பக்கம் இழுக்குறவன் கலைஞன்!
மக்கள் கேட்கிறதைக் கொடுக்கிறவன் வியாபாரி... தன்பக்கம் இழுக்குறவன் கலைஞன்!

“முன்னாடியெல்லாம் அநீதிகளுக்கு எதிராகப் பொங்கி எழுவீங்க. இப்ப அமைதியாகிட்ட மாதிரி தெரியுதே?”

“இந்த நாடு இப்படி ஆகிடுச்சு'ன்னு மனசு பொறுக்காமல் பேசினால் அதுக்கான தீர்வு என்னன்னு பார்க்காமல் ‘தங்கர் பச்சான் கொதிக்கிறார்'னு ஏன் பேசணும்? இனி எல்லோருக்கும் உணர்வு வரும்போது எனக்கும் கோபம் வரும். என் வீடு இருக்கிற இடத்திலிருந்து ஆபீஸ் போற தொலைவு ஆறு கிலோமீட்டர். அதற்கு ஆகிற நேரத்தைச் சொல்லவே முடியலை. வழியில் கல்லு மண்ணு கிடந்துதான் பார்த்திருக்கோம். இருட்டின நேரத்திற்கு வந்தால் மனுஷங்களே குடிச்சிட்டு ரோட்டுல கிடக்காங்க. எதுவுமே, யாருமே சரியில்லாமல் இருக்கும்போது தங்கர் பச்சான் பேசி என்ன ஆகப்போகுது? நல்ல சினிமாவை எடுத்து வைப்போம். பேசிப் பிரயோஜனம் இல்லை என மனசாட்சி சொல்லுது. தனித்து வாழ்தலும், தனக்கென வாழ்தலும் சிறந்த வழிங்கிறது எல்லோரது நினைப்பாக இருக்கு. நானும் இனிமேல் அந்த வழியில் போறேன். என்ன நடந்தாலும் சிறு எதிர்ப்புக் குரல்கூட மக்கள்கிட்டே இல்லை. சினிமாவில் ஹீரோ பேசினால் மட்டும் கையைத் தட்டிட்டு வீட்டில் வந்து படுத்துக்கிறான். நான் தனியா நின்னு கத்தினால் பைத்தியகாரன்னு சொல்றாங்க. எப்ப சமூகம் ஒண்ணுமண்ணா திரளுதோ அப்ப முன்னாடி நிற்கிறேன்.போதுமா!''