வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள `விடுதலை' திரைப்படத்தின் முதல் பாகம் இந்த மாதம் மார்ச் 31ம் தேதி வெளியாகவுள்ளது. ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதி, சூரி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ஆடுகளம் நரேன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் போஸ்டர்களும், புகைப்படங்களும், தனுஷ் பாடிய பாடலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.