Published:Updated:

"அஜித்துக்கு ஸ்டார் வேல்யூவை உருவாக்கியவர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி சார்!"- `முகவரி' இயக்குநர் V.Z.துரை

எஸ்.எஸ்.சக்ரவர்த்தி, அஜித்

"அஜித் சாருக்கும் அவருக்குமான நட்பு அவ்ளோ அழகானது. ஒருத்தருக்கொருத்தர் அவ்ளோ புரிதலோடு இருப்பாங்க. சக்ரவர்த்தி சார் சொல்ற விஷயத்தை அஜித் அப்படியே கேட்பார்! இவரால அவரும், அவரால இவரும் சேர்ந்து ஜெயிச்சாங்கன்னு சொல்லலாம்."

Published:Updated:

"அஜித்துக்கு ஸ்டார் வேல்யூவை உருவாக்கியவர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி சார்!"- `முகவரி' இயக்குநர் V.Z.துரை

"அஜித் சாருக்கும் அவருக்குமான நட்பு அவ்ளோ அழகானது. ஒருத்தருக்கொருத்தர் அவ்ளோ புரிதலோடு இருப்பாங்க. சக்ரவர்த்தி சார் சொல்ற விஷயத்தை அஜித் அப்படியே கேட்பார்! இவரால அவரும், அவரால இவரும் சேர்ந்து ஜெயிச்சாங்கன்னு சொல்லலாம்."

எஸ்.எஸ்.சக்ரவர்த்தி, அஜித்
அஜித்தின் `முகவரி', `ராசி', `வாலி', `ரெட்', `வில்லன்', `சிட்டிசன்', `ஜி' உட்படப் பல படங்களைத் தயாரித்த 'நிக் ஆர்ட்ஸ்' எஸ்.எஸ். சக்ரவர்த்தி, உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 55.

அஜித் படங்கள் தவிர, விக்ரமின் 'காதல் சடுகுடு' சிம்புவின் 'வாலு' உட்பட சில படங்களைத் தயாரித்தவர் சக்ரவர்த்தி. கடந்த சில மாதங்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இறந்தார். கடந்த ஆண்டில் வெளியான `விலங்கு' வெப்சீரீஸிலும் சின்னதொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர்.

'முகவரி'யில் அஜித்...
'முகவரி'யில் அஜித்...

சக்ரவர்த்தியின் மறைவு குறித்து அவர் தயாரித்த 'முகவரி', 'காதல் சடுகுடு' படங்களை இயக்கிய இயக்குநர் V.Z.துரையிடம் பேசினேன்.

"ரொம்ப நல்ல மனிதர். அப்பெல்லாம் யார்கிட்டேயாவது உதவி இயக்குநரா இருந்திருந்தால்தான் தயாரிப்பாளர்கள் அவருக்கு முதல் படம் கொடுப்பாங்க. நான் அப்ப முதுகலை படிப்புதான் படிச்சிட்டு இருந்தேன். உதவி இயக்குநராகவும் இல்லை. ஆனாலும் சக்ரவர்த்தி சார் என் மீது நம்பிக்கை வச்சு, 'முகவரி'யை இயக்கற வாய்ப்பைக் கொடுத்தார். எனக்கு அவர் தயாரிப்பாளர் மட்டுமல்ல, குருவாகவும் இருந்தார். முதல் நாள் படப்பிடிப்புக்கு முன்னாலிருந்து, எடிட்டிங் வரை சகலத்திலும் எனக்கு உறுதுணையா இருந்தார்.

அதைப் போல அஜித் சாருக்கும் அவருக்குமான நட்பு அவ்ளோ அழகானது. ஒருத்தருக்கொருத்தர் அவ்ளோ புரிதல்களோடு இருப்பாங்க. சக்ரவர்த்தி சார் சொல்ற விஷயத்தை அப்படியே கேட்பார். சாதாரண ஹீரோவா இருந்த அஜித் சாரை, ஸ்டார் வேல்யூ ஹீரோவாக உருவாக்கினார். அதைப் போல, சக்ரவர்த்தி சார் கேட்ட தேதிகள்ல எல்லாம் அஜித் சாரும் வந்து நடிச்சுக் கொடுப்பார். இவரால அவரும், அவரால இவரும் சேர்ந்து ஜெயிச்சாங்கன்னு சொல்லலாம்.

அஜித்துடன் வி.இசட்.துரை
அஜித்துடன் வி.இசட்.துரை

சிலரோட இழப்பு, தமிழ் சினிமாவுக்கு இழப்புன்னு சொல்வோம். சக்ரவர்த்தி சார், ஒரு கட்டத்துல படத்தயாரிப்பிலிருந்தே ஒதுங்கினது, பட உலகுக்குப் பெரிய இழப்பு. அவரோட நிறுவனத்துல இரண்டு படங்கள் இயக்கின பெருமை எனக்கு உண்டு. எனக்காகத்தான் 'காதல் சடுகுடு' படம் பண்றதுக்கான சூழலை உருவாக்கிக் கொடுத்தார். அவரது வீட்டு விசேஷங்களுக்கும் அழைப்பு விடுப்பார். அவரோட அடிக்கடி பேசுவேன். என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல தயாரிப்பாளரை மட்டுமல்ல, ஒரு குருவையும் இழந்து நிற்கிறேன்" என்று குரல் உடைந்து பேசுகிறார் துரை.