Published:Updated:

`` `காலா'வுக்கு நன்றி... `கே.ஜி.எஃப்-2'ல என்ன ஸ்பெஷல்னா?!'' - ஈஸ்வரி ராவ்

ஈஸ்வரி ராவ் ( Lock Up )

''சினிமால பெரிய ஹீரோயின்ஸூக்குதான் செகண்ட் இன்னிங்ஸ் கிடைக்கும். ஆனா, எனக்கு 'காலா' படத்தின் மூலமா கிடைச்சதுல பெரிய சந்தோஷம். இதுக்காக ரஞ்சித் மற்றும் ரஜினி சாருக்குதான் நன்றி சொல்லணும்."

`` `காலா'வுக்கு நன்றி... `கே.ஜி.எஃப்-2'ல என்ன ஸ்பெஷல்னா?!'' - ஈஸ்வரி ராவ்

''சினிமால பெரிய ஹீரோயின்ஸூக்குதான் செகண்ட் இன்னிங்ஸ் கிடைக்கும். ஆனா, எனக்கு 'காலா' படத்தின் மூலமா கிடைச்சதுல பெரிய சந்தோஷம். இதுக்காக ரஞ்சித் மற்றும் ரஜினி சாருக்குதான் நன்றி சொல்லணும்."

Published:Updated:
ஈஸ்வரி ராவ் ( Lock Up )

லாக்டௌன் நேரடி ஓடிடி ரிலீஸில் சமீபத்திய வரவு 'லாக்கப்' திரைப்படம். வைபவ், வெங்கட் பிரபு, ஈஸ்வரி ராவ், வாணி போஜன் நடித்துள்ள இந்த த்ரில்லர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் காவல் துறை அதிகாரியாக அசத்திய ஈஸ்வரி ராவிடம் பேசினேன்.

'காலா' படத்துக்குப் பிறகான சினிமா வாழ்க்கை எப்படியிருக்கு?

காலா -  ஈஸ்வரி ராவ் 
காலா -  ஈஸ்வரி ராவ் 

''சினிமால பெரிய ஹீரோயின்ஸூக்ந்த்தான் செகண்ட் இன்னிங்ஸ் கிடைக்கும். ஆனா, எனக்கு 'காலா' படத்தின் மூலமா கிடைச்சதுல பெரிய சந்தோஷம். இதுக்காக ரஞ்சித் மற்றும் ரஜினி சாருக்குத்தான் நன்றி சொல்லணும். ரஜினி சார் சினிமாவுக்கு வந்து 45 வருஷம் ஆச்சுனு கேள்விப்பட்டேன். இந்த நேரத்துல தலைவருக்கு வாழ்த்துகள் சொல்லிக்குறேன். 'காலா' என்னை எங்கேயோ கொண்டுபோயிடுச்சு. அந்தப்படத்துக்கு பிறகு மற்ற மொழிகள்ல நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்துட்டிருக்கு. தெலுங்குல பெரிய டைரக்டர்ஸ் மற்றும் ஹீரோஸ் படங்கள் வந்துட்டு இருக்கு. திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் சாரின் படங்கள்ல நடிச்சதை பெரிய விஷயமா நினைக்குறேன். பெரிய ஹீரோஸ்கூட காம்பினேஷன் சீன்ஸ் கொடுத்திருந்தார். தெலுங்கு எனக்குத் தெரியும். அதனால, மொழி பிரச்னை இல்லாம இருந்தது. நானே டப்பிங் வாய்ஸூம் கொடுத்தேன். இப்போ, கன்னடத்துல 'கே.ஜி.எஃப்- 2' படத்துல முக்கியமான ரோல் பண்ணியிருக்கேன். ஹீரோ யஷ்கூடவே படத்துல வருவேன். அவர் குழந்தை மாதிரி ரொம்ப க்யூட். கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுவார். தவிர, தெலுங்குல நாகசைதன்யா படத்துலயும் நடிச்சிருக்கேன். லாக்டெளன் முடிஞ்சவுடனே படத்தை தியேட்டர்ல பார்க்க வெயிட் பண்றேன்.''

'லாக்கப்' படத்தோட வாய்ப்பு எப்படி வந்தது?

''வழக்கமான அம்மா, அக்கா கேரக்டர்ஸ் பண்றதுல எனக்குப் பெரிய உடன்பாடில்ல. நாம பண்ற கேரக்டர்ஸ் வித்தியாசமா இருக்கணும். காட்டன் புடவையை கட்டிக்கிட்டு வந்து நின்னு, கண்ணீர் சிந்திட்டுப்போற மாதிரியான கேரக்டர்ஸைத் தவிர்த்துட்டு வர்றேன். இப்படியிருந்த சூழல்ல இயக்குநர் சார்லஸ் 'லாக்கப்' படத்தோட இன்ஸ்பெக்டர் கேரக்டரைப் பற்றி சொன்னார். கதை கேட்டேன். ரொம்ப நல்ல கேரக்டரா தெரிஞ்சது. உடனே ஓகே சொல்லிட்டேன்.''

`` `காலா'வுக்கு நன்றி... `கே.ஜி.எஃப்-2'ல என்ன ஸ்பெஷல்னா?!'' - ஈஸ்வரி ராவ்

நிதின் சத்யா டீமுடன் வேலைபார்த்த அனுபவம் எப்படியிருந்தது?

''சார்லஸ் கதை சொன்னப்போ நிதின் சத்யாவும் உடன் இருந்தார். படத்தோட புரொடியூசரா நிதின் 'லாக்கப்' படத்துல என்னை கமிட் பண்ண ஆர்வமா இருந்தார். வெங்கட் பிரபு மற்றும் வைபவ் கேரக்டர்ஸ் பற்றி நம்ம எல்லாருக்குமே தெரியும். ரொம்ப ஜாலியான பாசிட்டிவ் கேரக்டர்ஸ் அவங்க. ஷாட் ரெடியானதும் எல்லாரும் ரொம்ப சீரியஸா நடிச்சிட்டு இருப்போம். டைரக்டர் டேக் ஓகேனு சொல்லிட்டா போதும், அடுத்த நிமிஷமே ஜாலியான மூட்ல சிரிக்க ஆரம்பிச்சிடுவோம். படத்துல சீரியஸான லுக்ல இருப்பேன். நிறைய டயலாக்ஸ் பேசி நடிக்கிறது கொஞ்சம் டஃப்பான விஷயமா இருந்தது. என்னோட சினிமா கரியர்ல போலீஸ் ரோல்ல நடிச்சிருக்குற முதல் படம் 'லாக்கப்'.''

'லாக்கப்' தியேட்டர் ரிலீஸை மிஸ் பண்ணீங்களா?

ஈஸ்வரி ராவ்
ஈஸ்வரி ராவ்

''ஓடிடி-ங்குற விஷயமே நம்ம எல்லாருக்கும் ரொம்பப் புதுசு. இந்த லாக்டெளன் காலத்துலதான் எல்லாரும் இந்த டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம்ல படம் பார்க்கத் தொடங்கியிருக்கோம். படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துட்டு இருக்கு. தியேட்டர்ல ரிலீஸாகியிருந்தா நல்லாயிருக்கும்னு சிலர் சொல்றாங்க. நானும் இதை ஃபீல் பண்ணேன். ஏன்னா, த்ரில்லர் ஜானர் படத்தை தியேட்டர்ல பார்க்குறப்போ கிடைக்குற ஃபீல் வேற மாதிரியிருக்கும். முக்கியமா, ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் என்னனு தெரிஞ்சுக்கவும் முடியும். இதெல்லாம் நடக்காமப்போனது கொஞ்சம் வருத்தமா இருந்தாலும், படம் சீக்கிரம் ரிலீஸானது நினைச்சு சந்தோஷம்தான். வீட்டுல ஃபேமிலியோட படம் பார்த்தேன். என் பசங்களும் என்ஜாய் பண்ணாங்க.''

லாக்டெளன் எப்படி போயிட்டிருக்கு?

லாக்கப்
லாக்கப்

''ஷூட்டிங் இல்லாத எல்லா நாளுமே எனக்கு லாக்டெளன்தான். ஏன்னா, பெரும்பாலும் வீட்டுல நேரம் செலவழிக்குற டைப் நான். இந்த லாக்டெளனால வேலைக்காரங்க யாரும் வர்றதில்ல. அதனால, வீட்டு வேலைகளை செய்றதுல நேரம் போகுது. தவிர, பசங்களுக்கு ஆன்லைன் கிளாஸ் போயிட்டிருக்கு. அவங்ககூடவே உட்கார்ந்து நானும் கிளாஸ் கவனிக்கிறேன்.''