கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“என் வாழ்க்கையிலும் தேவதைகள் உண்டு!”

கதிர்
பிரீமியம் ஸ்டோரி
News
கதிர்

படங்கள்: அருண் டைட்டன்

“என் பாட்டி வீடு பவானி பக்கத்துல சின்ன கிராமம். ரொம்ப வருஷம் கழிச்சு அங்க வந்திருக்கேன். தாத்தா - பாட்டிக்கு செம சந்தோஷம். கிராமம்ன்றதால வீட்டுக்குள்ள அடைஞ்சிருக்கிற மாதிரி ஒரு ஃபீலே இல்லை. பக்கத்துல தோட்டம் இருக்கு. தாத்தா, பாட்டி, மாமா, அவங்க பசங்க எல்லோரும் இருக்கிறதனால செம ஜாலியா பொழுது போகுது” உற்சாகம் பொங்கப் பேசுகிறார் கதிர். ‘மதயானைக்கூட்டம்’ தொடங்கி ‘பரியேறும்பெருமாள்’ வரை தமிழ் சினிமா ரசிகர்கள் உற்று கவனித்த நடிகர்.
கதிர்
கதிர்

‘‘ஒரு நாள் எப்படிக் கழியுது?’’

``என்ன பண்றதுனே தெரியல. காலையில சூர்ய நமஸ்காரம்லாம் எனக்கே காமெடியா இருக்கு. ஃப்ரெஷ்ஷாகி சாப்பிட்டுட்டு, கயித்துக் கட்டிலை வேப்ப மரத்துக்குக் கீழே போட்டுக்குவேன். படுத்துக்கிட்டே ஏதாவது ஒரு படம் அல்லது வெப் சீரிஸ். அப்புறம் கொஞ்சம் கேப் எடுத்துட்டு கிணத்துக்குப் பக்கத்துல இருக்கிற பெரிய தொட்டில ஒரு குளியலைப் போட்டுட்டு மதிய சாப்பாடு. உண்ட மயக்கத்தில அப்படியே ஒரு குட்டித் தூக்கம். எழுந்து கொஞ்ச நேரம் வொர்க் அவுட், வாக்கிங். சில நேரம் தோட்டத்துல மண்வெட்டியெல்லாம் எடுத்து, கொஞ்சம் வேலை. அப்புறம் கொஞ்ச நேரம் எல்லார்கூடவும் தாயம். கடைசியா இன்னிக்கு என்ன நடந்திருக்குன்னு போன்ல நியூஸ் அப்டேட்ஸ் பார்த்துப்பேன். அப்புறம் அப்படியே ஒரு படம் பார்த்துட்டுத் தூங்கிடுவேன். இதான் என் டைம்டேபிள்.”

கதிர்
கதிர்

‘`என்னென்ன படங்கள் பார்த்தீங்க?’’

‘`கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தியேட்டர்ல மிஸ் பண்ணியிருந்தேன். நெட்ஃபிளிக்ஸ்லதான் பார்த்தேன். மலையாளத்துல ‘வைரஸ்’, அப்புறம் ‘ஷீ’னு ஒரு சீரிஸ் பார்த்தேன். ‘Money Heist’ சீரிஸ் பயங்கரமா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க. இனிதான் அதைப் பார்க்க ஆரம்பிக்கணும். அப்புறம், நான் நடிச்ச ‘சிகை’ இப்ப பார்த்தா எப்படி இருக்குன்னு அதையும் பார்த்தேன்.”

‘’இந்த க்வாரன்டீன்ல புதுசா என்ன கத்துக்கிட்டீங்க?’’

``நிறைய பொறுமையைத்தான்”

Dulquer Salmaan
Dulquer Salmaan

‘’ கதிர் - நதிமூலம், ரிஷிமூலம் சொல்லுங்க’’

`` என் பெயர் விக்னேஷ். ‘மதயானைக்கூட்டம்’ சமயத்துல சினிமாவுக்காக வேற பெயர் வைக்கலாம்னு பேச்சு போயிட்டிருந்தது. அப்போ ஜி.வி.பிரகாஷ் அண்ணாதான் கதிர்னு சொன்னார். ‘நல்லாருக்கு. அப்படியே படத்துல போட்டுடலாம்’னு மாத்திக்கிட்டேன்.”

கதிர்
கதிர்

‘’மதயானைக்கூட்டம், கிருமி, பரியேறும் பெருமாள்னு நீங்க நடிக்கிற படங்களின் கதை கனமாவே இருக்கும். கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்குறீங்க?’’

``கதைகள் தேர்ந்தெடுக்கிறது பத்தி இன்னமும் கத்துக்கிட்டுத்தான் இருக்கேன். அது முழுமையா தெரிஞ்சிட்டா எல்லாப் படமும் சூப்பரா ஓடிடும்ல. எந்தெந்தக் கதைகள் எனக்குள்ள ஒரு தாக்கத்தை ஏற்படுத்துதோ அந்தக் கதைகள்ல நடிக்க ஓகே சொல்லிடுவேன். ஏதாவது புதுசா பண்ணணும்னு நினைச்சு ஓடிட்டிருக்கேன். ‘மதயானைக்கூட்டம்’ முடிஞ்சு ‘கிருமி’ படம் கமிட் பண்றதுக்குள்ள எப்படியும் 50 கதையாவது கேட்டிருப்பேன். ஏன்னா, எனக்கு அப்ப ஐடியா தெரியலை. அதுல நிறைய நல்ல கதைகளைக்கூட நான் மிஸ் பண்ணியிருக்கலாம்.”

கதிர்
கதிர்

‘’தமிழ் சினிமால எத்தனையோ ஹீரோக்கள் இருக்கும்போது கதிருக்கான இடம் இதுதான்னு நீங்க நினைக்கிறது ஏதாவது இருக்கா?’’

``கதிர் படம் இப்படித்தான் இருக்கும்னு யாரும் நினைச்சிடக்கூடாது. அதனால எந்த வட்டத்துக்குள்ளயும் சிக்கிடக்கூடாதுன்னு நினைச்சு கதைகள் கேட்குறேன். இப்ப ரிலீஸுக்கு ரெடியா இருக்கிற ‘சர்பத்’ படம் முழுக்க முழுக்க கிராமத்துல நடக்கிற ஜாலியான படம். ‘மதயானைக்கூட்டம்’, ‘பரியேறும் பெருமாள்’ பார்த்தவங்களுக்கு இந்தப் படம் என்னுடைய வேற முகத்தைக் காட்டும்னு நம்புறேன்.”

“என் வாழ்க்கையிலும் தேவதைகள் உண்டு!”

‘’ ‘பரியேறும் பெருமாள்’ மாதிரியான படத்துல ஹீரோவா நடிக்கிறீங்க. அப்படியே ‘பிகில்’ மாதிரி படத்துல ஒரு சின்ன கேரக்டரும் பண்றீங்க. இந்த அப்ரோச் சரியா?’’

``கதாநாயகனா நடிக்கிற படங்கள் ஒரு அனுபவத்தைக் கொடுக்குற மாதிரி, ‘விக்ரம் வேதா’, ‘பிகில்’ மாதிரி பெரிய ஹீரோக்களோட, பெரிய பட்ஜெட்ல நடிக்கிற படங்கள் வேற மாதிரியான அனுபவத்தைக்கொடுக்கும். இது புரிஞ்சுதான் அந்தக் கதைக்குள்ள போறேன். தவிர, இந்த ரெண்டு படங்கள்லயும் எனக்கு முக்கியமான கேரக்டர். என்னைச் சுட்டதனாலதான் வேதா ரிவெஞ்ச் எடுப்பார். என் கனவை நிறைவேத்தத்தான் மைக்கேல் டீமை செட் பண்ணி ஜெயிக்க வைப்பார். அதனால எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.”

“என் வாழ்க்கையிலும் தேவதைகள் உண்டு!”

‘’ ‘பரியேறும் பெருமாள்’ படத்துல உங்களை இங்கிலிஷ் எக்ஸாம்ல பாஸ் பண்ண வைக்கிற தேவதை மாதிரி உங்க வாழ்க்கையில இருந்த தேவதைகள் யார்னு சொல்லுங்க?’’

``எனக்கு என் கம்யூட்டர் சயின்ஸ் சுஜா மிஸ்தான் உடனே ஞாபகம் வர்றாங்க. அவங்க கிளாஸ்ல நான்தான் அடிக்கடி வெளியே நிற்பேன், திட்டு வாங்குவேன். இருந்தாலும் அவங்களுக்கு என்னைப் பிடிக்கும். காலேஜ்ல மணி சார், பாபு சார் இவங்க எல்லாம் என் வாழ்க்கையில இருந்த தேவதைகள் லிஸ்ட்ல வருவாங்க. எப்படி சமாளிச்சேன் பார்த்தீங்களா?!”

சமாளிச்சேன்னு சொல்லும்போதே எனக்கு வேண்டிய பதில் கிடைச்சிடுச்சு ப்ரோ.