சினிமா
தொடர்கள்
Published:Updated:

“நகைச்சுவைப் படங்களில் நடிக்க ஆசை!”

நேர்கொண்ட பார்வை
பிரீமியம் ஸ்டோரி
News
நேர்கொண்ட பார்வை

“எனக்கு நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்தன.

ல காரணங்களினால் அவை எதுவும் அடுத்த கட்டத்துக்குச் செல்லவில்லை. ‘நேர்கொண்ட பார்வை எதிர்பாராமல் நடந்த விஷயம். படத்தோட தயாரிப்பாளர் போனி கபூர், ‘ ‘பிங்க்’ படத்தோட ரீமேக்கில் நடிக்க முடியுமா’ன்னு கேட்டார். எனக்கும், ஸ்ரீதேவி மேடம் மேல இருந்த அதீத மரியாதையால் இந்தப் படத்தில் நடிக்க ஓகே சொன்னேன்” ஆர்வமாகப் பேச ஆரம்பித்தார், வித்யா பாலன்.

“ ‘டர்ட்டி பிக்சர்’ பயோபிக் டிரெண்டின் ஆரம்பம் எனச் சொல்லலாம். தற்போது, இந்திய சினிமாவில் பயோ பிக்குகள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. இந்தப் படங்கள், சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கையைச் சரியாகச் சித்திரிக்கின்றனவா?”

“ ‘டர்ட்டி பிக்சர்’ படத்துக்குப் பிறகு நிறைய பயோபிக் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தற்போது வரும் படங்கள் சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கையின் சிற்சில பகுதிகளை மட்டுமே கூறுகின்றன. அதனால் அப்படங்களின் அழகு குறைகிறது. ஒரு மனிதரின் முழுமையைக் கூற யாரும் எண்ணுவதுமில்லை.’’

“தற்போது தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். இனி தமிழ்ப்படங்களில் உங்களை அடிக்கடி பார்க்கலாமா?”

“பெரிய திட்டமிடல் எல்லாம் இல்லை. தெலுங்கில் என்.டி.ஆர் படத்துல நடிச்சேன். அது இரண்டு பாகமாக வெளியானது. நான் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகள் வரும்பட்சத்தில் கண்டிப்பா நடிப்பேன்.’’

“நீங்க நடிச்சிருந்த ‘துமாரி சுலு’ படத்தை ஜோதிகா ‘காற்றின் மொழி’ன்னு நடிச்சாங்க? அந்தப் படத்தைப் பார்த்தீங்களா?

“ ‘காற்றின் மொழி’ பார்க்கிற வாய்ப்பு எனக்குக் கிடைக்கலை. டிரெய்லர் பார்த்தேன். ஜோதிகா அவங்க ஸ்டைல்ல பண்ணியிருந்தாங்க. பார்க்க நல்லா இருந்தது. கண்டிப்பா பார்த்துடுவேன்.’’

“நகைச்சுவைப் படங்களில் நடிக்க ஆசை!”

“பெண்களை மையப்படுத்தி நிறைய ஜானர்களில் படங்கள் வருகின்றன. உங்களுக்கு எந்த ஜானர் படங்கள் இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க?”

“தமிழ் சினிமா மட்டுமல்ல, மற்ற மொழிகளிலும் முழுக்க முழுக்க நகைச்சுவைப் படங்கள் பெண்களை மையப்படுத்தி வரணும். அது எனக்கு ரொம்ப நாள் ஆசை.’’

“ ‘நேர்கொண்ட பார்வை’ ஒரு இந்திப்பட ரீமேக், அதேமாதிரி எந்தத் தமிழ்ப்படத்தை உங்களுக்கு இந்தில ரீமேக் பண்ண ஆசை?”

“பொதுவா எனக்கு ரீமேக் படங்களில் நாட்டம் கம்மிதான். நேரடிப் படங்கள்தான் எனக்குப் பிடிக்கும். ஆனா, ’நேர்கொண்ட பார்வை’ விதிவிலக்கு.’’

“உருவ கேலி (பாடி ஷேமிங்) குறித்து வைக்கப்படும் விமர்சனங்களை இன்று அதிகம் பார்க்க முடிகிறது. உங்கள்மீதும் இப்படியான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இத்தகைய கருத்துகள் வைப்பவரை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ஒருவரின் உருவத்தை வைத்து விமர்சனம் செய்பவர்களுக்கு மூளை கம்மி.’’