
“ரொம்ப எமோஷனலா ஃபீல் பண்ணினேன். எனக்குள்ள ஒரு ஜெய லலிதா இருக்காங்கன்னு தான் நினைக்கிறேன்.
சைஸ் ஸீரோ, ஸ்லிம் பியூட்டிகளைத் தனது க்யூட் கன்னங்களால் ஓரங்கட்டுகிறார் நித்யா மேனன்.
“உங்களுடைய திறமையை முழுசா வெளியே கொண்டு வர்ற மாதிரியான படங்கள் தமிழில் இன்னும் அமையலைன்னு எப்போதாவது நினைத்தது உண்டா?”
“தமிழ் மட்டுமல்ல, எல்லா மொழிப் படங்களிலும் அமையலைன்னுதான் எனக்கும் தோணுது. நெகட்டிவ், ஆக்ஷன் கேரக்டர்கள் பண்ணணும்னு ஆசை. ஆனா, இதுவரைக்கும் அந்த மாதிரியான கதைகள் என்னைத் தேடி வரலை.”

“ஜெயலலிதா பயோபிக் படம்..?”
“ரொம்ப எமோஷனலா ஃபீல் பண்ணினேன். எனக்குள்ள ஒரு ஜெய லலிதா இருக்காங்கன்னு தான் நினைக்கிறேன். பரபரப்பைக் கிளப்ப ணும்கிறதுக்காக பிரிய தர்ஷன் படம் பண்ண மாட்டார். அப்படியான படமும் இல்லை ‘தி அயர்ன் லேடி.’ மிகப்பெரிய கலைஞர்கள், டெக்னீஷியன்கள் எல்லாம் இதில் இருக்காங்க. அதனால்தான் படம் ஆரம்பிக்க லேட் ஆகுது!”
`` ‘சைக்கோ’ கதை உங்களை எப்படித் தேடி வந்தது?’’
“மிஷ்கின் சார் படங்களெல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்கும். இந்தப் படத்துல நான் பண்ணியிருக்கிற கேரக்டரும் அது மாதிரி ரொம்ப தனித்துவமான ஒண்ணுதான். நான் நடிக்கிற கேரக்டரை யார் பண்ணினா நல்லா இருக்கும்னு மிஷ்கினும் பி.சி.ஸ்ரீராம் சாரும் பேசியிருக்காங்க. அப்போ பி.சி.சார், ‘இந்த கேரக்டரை அவங்க பண்ணினாதான் சரியா இருக்கும்’னு என் பேரைச் சொல்லியிருக்கார். மிஷ்கின் சார் எனக்கு போன் பண்ணி என்னோட கேரக்டர் பத்திச் சொன்னார். ‘இந்த கேரக்டர்தான் நான் பண்ணணுமா’னு கேட்டேன். ‘ஆமா’ன்னு மிஷ்கின் பதில் சொன்னார். ‘நூறு சதவிகிதம் பண்றேன்’னு சொல்லிட்டேன். ரொம்ப சந்தோஷமாயிட்டார் மிஷ்கின். ‘பி.சி இதுவரைக்கும் எந்த நடிகை பத்தியும் இந்த அளவுக்கு உறுதியா சொன்னதில்லை’ன்னு சொன்னார்.”

``உடல்கேலி (Body shaming) குறித்து இப்போது அதிகம் பேசப்படுகிறது. நீங்கள் உடல்கேலியால் பாதிக்கப்பட்டி ருக்கிறீர்களா?’’
“அதையெல்லாம் நான் பொருட்படுத்துறதில்லை. பேசுறவங்க எல்லா விஷயத்தையும் கிண்டல் பண்ணிட்டுதான் இருக்காங்க. அறிவு இல்லாமல் ஏதோ பண்றாங்கன்னு விட்டுருவேன். இதையெல்லாம் மனசுல ஏத்திக்கிட்டா நம்முடைய வேலையை சரியா பண்ண முடியாது. வாழ்க்கையில் சந்தோஷமா இருக்கவும் முடியாது.’’