
உங்க கணவர் மிஸ்டர் பீட்டருக்கும் இங்கே அனிமேஷன் வொர்க் இருக்கு.
பெரிய நட்சத்திரங்களுடைய பேட்டி, வளர்ந்துவரும் நட்சத்திரங்களுடைய பேட்டி, சர்ச்சைக்குரிய நபர்களுடைய பேட்டி... இவை அனைத்தும் ஒரு சினிமாப் பத்திரிகையாளனுக்கு வெவ்வேறு இல்லை. யாராக இருந்தாலும் அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களைப் பேட்டிக்கு ஒப்புக்கொள்ள வைப்பது என்பதும் மாஸ்க் போடாமல் கொரோனா வார்டுக்குள் வாக்கிங் போயிட்டு வருவதும் ஒன்று. அந்த அளவுக்கு ரிஸ்க். அடுத்து அவர்களிடமிருந்து கன்டன்ட் வாங்குவது என்பது பெசன்ட் நகரில் பத்தாயிரம் ரூபாய்க்கு டபுள் பெட் ரூம் தேடி அலைவதற்கு சமம். ஆனால், அவ்வப்போது சில மேஜிக்குகள் நடக்கும். அதே சமயம், கிரில் சிக்கனில் கீரைக்குழம்பை ஊற்றியதுபோன்ற அவுட்புட்டும் வரும். அப்படிச் சில பிரபலங்களிடம் பேட்டிக்காகத் தொடர்புகொள்ளும்போது அவர்களின் ரிப்ளை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
குறிப்பு : புகைப்பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்; உயிரைக் கொல்லும். மது அருந்ததுதல் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.
வனிதா
“ஹலோ சொல்லுங்க... ஆமா. வனிதாதான் பேசுறேன். கப்புள் இன்டர்வ்யூ வேணுமா? இப்போ ‘நோ வே’ங்க. ஏற்கெனவே, நிறைய பேசி டயர்டாகிட்டேன். ‘உங்களால எங்களுடைய ரெவென்யூ அதிகமாகியிருக்கு. ‘யார் இந்த வனிதா? அவங்களை நம்ம ஆபீஸுக்கு வேலைக்கு எடுத்துக்கலாமா’ன்னெல்லாம் பேசியிருக்கோம். எங்க ஆபீஸுக்கு வந்து வொர்க் பண்ண உங்களுக்கு சம்மதமா? உங்க கணவர் மிஸ்டர் பீட்டருக்கும் இங்கே அனிமேஷன் வொர்க் இருக்கு.

கொரோனா முடிஞ்ச பிறகு, யு.எஸ் வாங்க’ன்னு சொல்லி யூடியூப்ல இருந்து மெயில் பண்ணியிருக்காங்க. அந்த ஆஃபரை எப்படி டீல் பண்ணுறதுன்னு நானும் என் லவ்லி கணவரும் டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கோம். அதனால் இப்போ பேட்டி வேண்டாம். அப்படி நாங்க யு.எஸ் போயிட்டோம்னா எங்களுடைய தல கிறிஸ்துமஸுக்கு இந்தியா வருவோம். அப்போ வேணும்னா, கப்புள் இன்டர்வியூ கொடுக்குறோம். ஓகேவா?” என்று, அவரை கன்வின்ஸ் செய்ய நினைத்த நம்மை அவர் கன்வின்ஸ் செய்துவிடுவார்.
மொட்டை ராஜேந்திரன்
“சொல்லுப்பா... நான்தான் பேசுறேன். வீட்லதான் இருக்கேன். நோ ஷூட்டிங், நோ சினிமா. போர் அடிக்குதுப்பா. நான் பேட்டியெல்லாம் கொடுக்கிறதே இல்லைப்பா. நாம சும்மா எவ்வளவு நேரம் வேணாலும் பேசலாம். 5000 ரூபா இன்கிரிமென்ட்னு தெரியாமல் ஒரு படத்துல சொல்லிட்டேன். அதையே எல்லா வீடியோ பேட்டியிலயும் 5000 விதமா சொல்லச் சொல்றாய்ங்க. அதைச் சொல்லலைனா, டாஸ்க்னு சொல்லி கபசுரக் குடிநீரை கல்பா அடிக்கச் சொல்றாங்க. கபசுரக் குடிநீர் நல்லதுதானேன்னு நினைச்சு ஓகே சொன்னா, அரை லிட்டர் பாட்டிலைக் கையில கொடுக்குறாங்க. ஏற்கெனவே, மண்டை காய்ஞ்சு கிடக்கு. இதுல இப்படி டார்ச்சர் பண்ணுறாங்களேன்னுதான் இனிமே பேட்டியே வேண்டாம்னு முடி வெடுத்துட்டேன்.”

மீரா மிதுன்
போனை எடுத்து அவருக்கே உரிய மெல்ல்ல்லிய குரலில் ‘`Ya Its Meera here... All medias in TamilNadu are fake. நீங்க ரிப்போர்ட்டர்னு நான் எப்படி நம்புறது? இப்படி நிறைய கால் வருது... உங்களுடைய ஆபீஸ்ல கொடுத்த ஐடி கார்டை எனக்கு போட்டோ எடுத்து வாட்ஸப் பண்ணுங்க. அப்போதான் நான் நம்புவேன்” என்று காலை கட் செய்துவிடுவார். ‘என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனை’ன்னு வேற வழியில்லாமல் ஐடியை போட்டோ எடுத்து அனுப்புனா, கால் வரும்.

“இப்போ பேசலாம். சொல்லுங்க என்ன வேணும்? இப்போ இன்டர்வியூ எல்லாம் நான் கொடுக்கிறதில்லை. நான் ஒரு சூப்பர் மாடல். ஸோ, கோலிவுட்ல நான் நடிச்சா அந்தப் பட ஹீரோக்களை நான் நடிப்புல தூக்கிச் சாப்பிட்டிடுவேன்னு பயந்துக்கிட்டு என்னைக் கமிட் பண்ணமாட்டிக்குறாங்க. நான் எப்படிப்பட்ட திறமையான நடிகைன்னு என் ரசிகர்களுக்குத் தெரியும். இப்போ ஒரு ஹாலிவுட் படத்துல செகண்ட் ஹீரோயினா நடிக்க பேச்சு வார்த்தை நடந்துட்டிருக்கு. அது ஓகே ஆகிடுச்சுனா, அடுத்து என் டார்கெட் ஆஸ்கர்தான். இப்படியான ஒரு சூப்பர் மாடலுக்கு நீங்க அசால்ட்டா போன் பண்ணி பேட்டி கேட்குறீங்க. எனக்கு ட்விட்டர்ல ஏகப்பட்ட வேலையிருக்கு” என்பார். ஆமா... அந்த ஐடி கார்டை அனுப்பச் சொன்னது ஏன் என்ற கேள்வியோடு தொடங்கும் நமது மைண்ட் வாய்ஸ் நம்மை நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கும்.
பிஜிலி ரமேஷ்
“அலோ... சொல்லுங்க தலைவா! பேட்டியா? கொரோனா முடியட்டும் தலைவா. 8 படங்கள் நான் நடிச்சு வெளியாக ரெடியா இருக்கு. 7 படம் பேசிக்கிட்டிருக்கேன். எப்படியும் ஓகே பண்ணிடுவேன். ஆகமொத்தம் 13. ஒவ்வொண்ணைப் பத்தியும் ஒரு மணி நேரம் பேசலாம். ஆனா, இப்போ முடியாதே!

ஆக்சுவலா, எனக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறதா பிளான் பண்ணியிருந்தாங்க. ஆனா, அதுக்குள்ள கொரோனா வந்துடுச்சு. லாக் டெளன் முடிஞ்சதும் ஷூட்டிங், டப்பிங், டிவி ஷோன்னு பிஸியாகிடுவேன். சாண்டி மாஸ்டர்கிட்ட டான்ஸ் கிளாஸ்கூட போகலாம்னு இருக்கேன். ஒரு தகவல் சொல்லவா? ‘பட்டைய கிளப்பும் பலே பிஜிலி’ன்னு ஒரு படத்துல ஹீரோவா நடிக்க பேச்சுவார்த்தை நடக்குது. அது கன்ஃபார்ம் ஆனதும் அதைப் பத்தியும் பேசுறேன். ஒரு மாசம் கழிச்சு போன் பண்ணுங்க தலைவா...”