
“யாராவது ஒருவரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பியே ஆகவேண்டும்... யாரை அனுப்புவீர்கள்” என்று பிரபலங்களிடம் கேட்டபோது கிடைத்த ஜாலி பதில்கள்...
சதீஷ்

“கேதர் ஜாதவை பிக்பாஸ் வீட்டுக்குள்ள அனுப்பிட்டா நல்லா இருக்கும். 100 நாள் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் போக ணும்னா, நிச்சயம் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ டீம்ல இருந்து வெளியே வந்திடு வார்ல! அப்போ சிஎஸ்கே தானே சாம்பியன். அதனால, என் சாய்ஸ் ஜாதவ்தான்!”

முனீஷ்காந்த்
“காசு இல்லை. வேலை இல்லை கோவிட் வந்தாலும் வந்தது, வாழ்க்கையே தலைகீழாகிடுச்சு. ‘இ.எம்.ஐ. கட்டுங்க’, ‘லோனைக் கட்டுங்க’ன்னு வெளியில ஏக டென்ஷன்ங்க. அதனால இன்னொருத்தரை எதுக்குப் பரிந்துரை பண்ணணும்? அப்படியொரு வாய்ப்பு வந்தா, நானே அந்த வீட்டுக்குள்ள போயிடுவேன். அங்க இருக்கிறவங்களைக்கூட சமாளிச்சிடலாம்போல.”

கருணாகரன்
“அனிதா சம்பத் அழுகி றதைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. அதேநேரம் ப்ரொமோ பார்க்கிறப்ப, ‘ஆஹா, டிராமா ஆரம்பமா கிடுச்சா’ன்னும் நினைக்கத் தோணுது. ‘உங்க சாய்ஸ்ல ஒருத்தரை உள்ளே அனுப்பணும்னா யாரைக் கைகாட்டுவீங்க’ன்னு கேட்டா கமல் சார் நல்லா இருக் கும்லன்னுகூடத் தோணுது. டெய்லி கரெக்டா பஞ்சாயத்து பண்ணுவார்ல. அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அவர் போகணும்னு ஆசைப் படறேன்.”

சஞ்சிதா ஷெட்டி
“மிர்ச்சி சிவா பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனா சூப்பரா இருக்கும். அவர் இருக்கிற இடமே செம ஜாலியா எனர்ஜெடிக்கா இருக்கும். ஷூட்டிங்ல பக்கத்துல இருந்த அனுபவத்துல சொல்றேன். அவர் இருக்கிற இடத்துல சண்டையே வராதுங்க. ஸோ, என் சாய்ஸ் சிவா.”

ஷெரின்
“விஜய் டிவி ஆங்கர் ஆண்ட்ரூஸை அனுப்பலாம். ரியோவுக்கு இன்னும் நல்ல கம்பெனி கிடைக்கலே. இவர் போனா அந்தக் குறை நிவர்த்தி ஆகிடும். ரெண்டு பேரும் சேர்ந்தா அவ்ளோ ஜாலியா இருக்கும். உள்ள இருக்க வங்களை மட்டுமல்லாம நம்ம எல்லோரையும் சிரிக்க வெச்சுக்கிட்டே இருப்பாங்க.”

ரோபோ சங்கர்
“தேவையானது கேட்டதும் கிடைக்கும்னா, 100 நாளும் நானே இருந்துட்டு வர்றேன். பெரிய வீடெல்லாம் வேண்டாம். பத்துக்குப் பத்து ரூம் போதும். பசிக்குதுன்னு கேட்டா சாப்பாடு கொடுத்து பத்திரமாப் பார்த்துக்கோங்க. ‘ரெண்டு நிமிஷம் கண்டென்ட் தரணும்’னு பிக்பாஸ் கேட்டா, இருபது நிமிஷத்துக்குத் தர நான் ரெடி.”

உமா ரியாஸ்
‘இவங்க ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள்ள போகணும்’னு நான் நினைச்ச ஆள் இந்த சீசன்ல உள்ளே போயிட்டாங்க. அறந்தாங்கி நிஷாதான். ஆனா நான் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் அவங்க சைடுல இருந்து ஜாலி கேலி வரத் தொடங்கலே. குறைவா இருக்கோன்னு தோணுது. கமான் நிஷா.”

நாஞ்சில் விஜயன்
“சுவாமிஜி நித்தியா னந்தாவை உள்ளே அனுப்பணும். அவரைத்தானே எல்லாரும் ‘எங்க இருக்காரு மனுஷன்’னு தேடிக்கிட்டு இருக்காங்க. ஷோவுக்குக் கூட்டி வந்துட்டா அது மூலமாச்சும் ஆளைப் பார்த்துடலாம்ல. அவர் தனியா உள்ளே போக மாட்டேன்னு சொல்வார். கூட பத்து சிஷ்யைகளையாச்சும் அனுப்ப வேண்டியிருக்கும். ஷோ சும்மா கலர்புல்லா இருக்கும்லா?

நித்யா
“சேனலும் ஏன் மக்களுமே என்ன எதிர்பார்க்கிறாங்க? அங்க யாராச்சும் சண்டை போட்டுக்கிறாங்களான்னு தானே? கண்டென்ட்லயும் கான்ட்ரவர்சி தூக்கலா இருந்தா ரேட்டிங் சும்மா பிச்சுக்கிட்டுப் போகும். அதுக்கு உள்ளே இருக்க வேண்டிய சரியான ஆளு யார்னு என்னைக் கேட்டீங்கன்னா சிம்புவைச் சொல்வேன். செம கான்ட்ரவர்சி தினமும் கிடைக்கும்.”

ஜெனிஃபர்
“ ‘தாத்தா நான் பார்த்தேன்’னு நாட்டாமையில டயலாக் பேசி, இப்ப ‘மாஸ்டர்’ வரைக்கும் வளர்ந்திருக்கிறாரே, மகேந்திரன், அவரை அனுப்பலாம். நாங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ். அதனால ஜஸ்ட் ‘எப்படி இருக்கீங்க’ன்னு கேட்க போனைப் போட்டா போதும் மொபைலும் காதும் சூடாகிற வரைக்கும் பேச்சை நிறுத்த மாட்டார். அதனால நூறு நாள் அங்க போயிட்டு வரட்டும்.”

டேனி
“நடிகர் சதீஷை அனுப்பணும். ஏன்னா கடந்த மூணு சீசன்லயுமே போட்டி யாளர்கள் உள்ளே இருந்தப்ப, வெளியில இருந்து அவங்களைச் சகட்டுமேனிக்குக் கலாய்ச்சார்னு கேள்விப் பட்டேன். உள்ளே இருந்த கஷ்ட நஷ்டங்களில் ஷோவுல இருந்தவங் களுக்குத்தான் தெரியும். வெளியில இருந்து வாய் புளிச்ச தோ மாங்கா புளிச்சதோனு பேசியிருக்கார்ல, ஒருதடவை உள்ளே போயிட்டு வரட்டும், தெரியும்.