Published:Updated:

Jailer Exclusive: ரஜினியின் பேரனாக நடிப்பது இவரா?

ஜெயிலர்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அது குறித்து ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் இதோ...

Published:Updated:

Jailer Exclusive: ரஜினியின் பேரனாக நடிப்பது இவரா?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அது குறித்து ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் இதோ...

ஜெயிலர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் `ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. படத்தில் ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது படக்குழு.

ரித்விக்
ரித்விக்
Sudharsan Gandhi U

இதனைத் தொடர்ந்து, நெல்சன் படங்களில் இருக்கும் நடிகர்கள் இந்தப் படத்திலும் இருக்கிறார்கள். தவிர, அறந்தாங்கி நிஷா, 'பருத்திவீரன்' சரவணன் எனப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கன்னட நடிகர் சிவராஜ் குமார் இந்தப் படத்தில் ரஜினியோடு நடிப்பதை பற்றியும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். தமன்னாதான் நாயகி. டெக்னிக்கலாக இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், கலை இயக்குநர் டி.ஆர்.கே கிரண் என 'டாக்டர்' கூட்டணி இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது.

இதனிடையே சமீபமாக யூடியூப் உலகில் அனைவரையும் கவர்ந்த ரித்விக் இந்தப் படத்தில் நடிக்கிறார். அவருக்கு ரஜினியின் பேரன் கதாபாத்திரம் என்கிறார்கள். இதற்கு முன், நயன்தாராவுக்கு மகனாக 'O2' படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போ லேடி சூப்பர் ஸ்டாருக்கு மகன்; இப்போ சூப்பர் ஸ்டாருக்கு பேரன்!

வாழ்த்துகள் ரித்விக்!