நானே வருவேன் (தமிழ்)

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா நடிக்கும் 'நானே வருவேன்' திரைப்படம் இன்று செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் ஹாரர்/த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கிறது.
பொன்னியின் செல்வன் பாகம் - 1 (தமிழ்)

1950-களில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவல் 'பொன்னியின் செல்வன்'. இந்த நாவல் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' என்ற அதே பெயரில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் நாளை (செப்டம்பர் 30ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் எனப் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
KANTARA (Kannada)

இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகும் இப்படத்தில் சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார், வினய் பிடப்பா, பிரமோத் ஷெட்டி, உக்ரம் ரவி, பிரகாஷ் துமிநாட் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். நாட்டுப்புறக் கலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நாளை (செப்டம்பர் 30ம் தேதி) வெளியாகிறது.
Vikram Vedha (Hindi)

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 2017-ல் தமிழில் வெளிவந்த படம், 'விக்ரம் வேதா'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி காம்போவில் நாளை (செப்டம்பர் 30ம் தேதி) வெளியாகிறது. தமிழில் எடுத்த புஷ்கர் - காயத்ரியே இந்தியிலும் இப்படத்தை இயக்கியிருக்கின்றனர்.
Don't Worry Darling (English)

இயக்குநர் ஒலிவியா வைல்ட் இயக்கத்தில் ஹாலிவுட் நடிகர்களான புளோரன்ஸ் பக், ஹாரி ஸ்டைல்ஸ், கிறிஸ் பைன் ஆகியோர் நடிப்பில் நாளை (செப்டம்பர் 30ம் தேதி) வெளியாகும் படம் Don't Worry Darling. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகியிருக்கிறது.
இந்த வாரம் OTT-யில் வெளியாகும் படைப்புகள்
Blonde (Netflix - English)

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நேற்று (செப்டம்பர் 28) வெளியாகியிருக்கிறது 'Blonde'. புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய மர்லின் மன்றோவின் வாழ்க்கையை புனைவு கலந்து ஒரு சைக்கலாஜிக்கல் வாழ்க்கை சரிதையாகச் சொல்கிறது இந்தப் படம். 2 மணிநேரம் 46 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் மர்லின் மன்றோவின் இயற்பெயரான நார்மா ஜீன் பாத்திரத்தில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான அனா டி ஆர்ம்ஸ் நடித்திருக்கிறார். ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகளுக்காகக் கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்தப் படம்.
Mr. Malcolm's List (Amazon Prime - English)

எம்மா ஹோலி ஜோன்ஸ் இயக்கத்தில் பீரியட் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படம் 'Amazon Prime' தளத்தில் நேற்று (செப்டம்பர் 28) வெளியாகியிருக்கிறது.
Plan A Plan B (Netflix - Hindi)

நடிகை தமன்னா, ரித்தேஷ் தேஷ்முக், குஷா கபிலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'Plan A Plan B' என்ற படம் 'Netflix' தளத்தில் நாளை (செப்டம்பர் 30) வெளியாகவிருக்கிறது.
My Best Friend's Exorcism (Amazon Prime - English)

இரண்டு நண்பர்கள் தங்கள் உடலினுள் இருக்கும் விநோதமான பேயுடன் போராடுவதுதான் இப்படத்தின் கதைக்களம். ஹாரர் காமெடி ஜானரின் உருவாகியிருக்கும் இப்படம் 'Amazon Prime' தளத்தில் நாளை (செப்டம்பர் 30) வெளியாகிறது.
Hocus Pocus 2 (Disney+ Hotstar - English)

ஃபேன்டஸி படமான இது 'Disney+ Hotstar' தளத்தில் நாளை (செப்டம்பர் 30) வெளியாகிறது.
Wood and Water (MUBI - German)

வயது முதிர்வில் ஓய்வுபெற்ற வயதான ஒருவர் தனது இறுதி காலத்தை எப்படித் தனக்குப் பிடித்தபடி வாழ்கிறார் என்பதுதான் படத்தின் கதைக்களம். இயக்குநர் ஜோனாஸ் பைக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் 'MUBI' ஓ.டி.டி தளத்தில் நாளை (செப்டம்பர் 30) வெளியாகவிருக்கிறது.
Vortex (MUBI - French)

இயக்குநர் காஸ்பர் நோயே இயக்கத்தில் உருவாகியுள்ள பிரெஞ்ச் மொழிப் படமான 'Vortex', MUBI ஓ.டி.டி தளத்தில் நாளை (செப்டம்பர் 30) வெளியாகவிருக்கிறது.