நடிகை, தொகுப்பாளினி நிஷா மற்றும் `பிக் பாஸ்' கணேஷ் வெங்கட்ராம் இணையருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இன்று காலை 7.29 மணிக்கு தங்களுக்குப் பெண்குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும், சேயும் நலமுடன் உள்ளதாகவும் கணேஷ் வெங்கட்ராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இப்போது `பிக் பாஸ்' 3 ஆரம்பிக்கப்பட்டு, விறு விறுப்பாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கணேஷ் வெங்கட்ராம் `பிக்பாஸ் சீசன் 1'ல் போட்டியாளராக இருந்தார்.

அப்போது ஒரு பேட்டியில் அவரைப் பற்றி நிஷாவிடம், ``உங்கள் கணவரை பலரும் ஜெனியூன்... (நேர்மையானவர், மதிப்பளிப்பவர்) எனப் பாராட்டுகிறார்களே...'' என்றதற்கு, ``ஒரு மனைவியாக எனக்கு சந்தோஷமே. கணவர் பாராட்டு வாங்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.'' எனப் பெருமையுடன் சொல்லியிருந்தார். இருவருமே காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
கணேஷ் வெங்கட்ராம் `பிக் பாஸ்' முடிந்து வெளியில் வந்த பிறகு வெளிநாட்டிற்குச் சென்று வந்தார்கள் இருவரும். `தலையணைப்பூக்கள்' சீரியலுக்குப் பிறகு நிஷா ஜெயா டி.வியில் `ஸ்டார் சிங்கர்ஸ்' என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். தாய்மை அடைந்த பிறகு சில காலம் தொடர்ந்தவர் அதன் பிறகு அதிலிருந்து விலகினார்.

பிறகு, வளைகாப்பும் நடந்து முடிந்தது. இந்நிலையில்தான் இன்று காலை அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. `பிரிக்க முடியாத பந்தம் இது' என நெகிழ்ந்து பதிவிட்டுள்ள கணேஷ் அதில் நார்மல் டெலிவரி நடந்திருக்கிறது எனவும், நிஷாவின் பிறந்த நாளுக்கு அடுத்த நாளே மகள் பிறந்திருக்கிறாள் எனவும் பதிவிட்டுள்ளார்.
வாழ்த்துகள் நிஷா - கணேஷ்!