Published:Updated:

Goundamani Exclusive: காமெடி கிங்கின் 964 வது படம்; ஓகே சொன்ன சிவகார்த்திகேயன்; பரபர அப்டேட்!

Goundamani | கவுண்டமணி

`பழனிசாமி வாத்தியார்' படத்தின் கதை கவுண்டமணி சாரை ரொம்பவே கவர்ந்து விட்டது.

Published:Updated:

Goundamani Exclusive: காமெடி கிங்கின் 964 வது படம்; ஓகே சொன்ன சிவகார்த்திகேயன்; பரபர அப்டேட்!

`பழனிசாமி வாத்தியார்' படத்தின் கதை கவுண்டமணி சாரை ரொம்பவே கவர்ந்து விட்டது.

Goundamani | கவுண்டமணி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை சக்ரவர்த்தியாக பரிணமிப்பவர் கவுண்டமணி. நடிக்க ஆரம்பித்து இதுவரை 950 படங்களைத் தாண்டிவிட்டார்.

இப்போது கதைநாயகனாக நடிக்கும் `பழனிசாமி வாத்தியார்' படம் குறித்து தயாரிப்பாளரும், கவுண்டமணியின் நெருங்கிய நண்பருமான மதுரை செல்வத்திடம், படத்தின் அடுத்த நகர்வுகளைக் கேட்டேன்.

பாடல் காட்சியின் போது..
பாடல் காட்சியின் போது..

``கவுண்டமணி சாரைத் தேடி நிறைய கதைகள் வந்துகொண்டுதான் இருந்தது. ஆனால், கதை பிடிக்காமல் போனதால், எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இந்த நேரத்தில் தான் `பழனிசாமி வாத்தியார்' கதையைக் கேட்டதும் உடனே நடிக்க சம்மதித்தார்.

கவுண்டமணியின் ஜோடியாக சஞ்சனா சிங் நடிக்கிறார். யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி, சித்ரா லட்சுமணன், ரைடர் ரவி, டி.சிவா, ஆர்.கே.சுரேஷ், ஜே.எஸ்.கே. சதீஷ் என 11 தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஒயிட் ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவகார்த்திகேயனும் நடிக்க சம்மதித்து விட்டார். படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் `கே' இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

கவுண்டமணி, தயாரிப்பாளர் மதுரை செல்வம், நடிகர் ரைடர் ரவி
கவுண்டமணி, தயாரிப்பாளர் மதுரை செல்வம், நடிகர் ரைடர் ரவி

இந்த படத்தின் கதை கவுண்டமணி சாரை மிகவும் கவர்ந்து விட்டது. படத்தில் அவர் கழுதை மேய்ப்பவராக வருகிறார். 35 கழுதைகளை படத்தில் பயன்படுத்த உள்ளோம். எங்கள் நிறுவனம் உருவாக்கிய கதையை செல்வ அன்பரசன் என்பவர் இயக்குவதாக இருந்தது. இப்போது அவர் இயக்கவில்லை. அவருக்கு பதிலாக பெரிய இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். இதுகுறித்த அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. '' என்கிறார் மதுரை செல்வம்.