Published:Updated:

Vikram படத்தில் இடம்பெற்ற `சக்கு சக்கு வத்திக்குச்சி' பாடல்; ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்த ரகசியம்!

ஹாரிஸ் ஜெயராஜ், கமல்

விக்ரம் படத்தில் இடம்பெற்ற சக்கு சக்கு வச்சிக்குச்சி சட்டுனுதான் பத்திக்கிச்சு பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில் இப்பாடல் குறித்து ட்வீட் செய்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் `விக்ரம்'. இப்படம் கடந்த 3-ம் தேதி வெளியானது முதல் இப்படம் குறித்த பல்வேறு விஷயங்கள் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. இப்படத்தின் பல காட்சிகளில் பழைய ரெட்ரோ பாடல்கள் இடம் பெற்றியிருக்கும். அந்த வகையில் இப்படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றிலும், ஜெயில் காட்சியிலும் இடம்பெற்ற 'சக்குச் சக்கு வத்திக்குச்சி சட்டுனுதான் பத்திக்கிச்சு' எனும் பாடல் சமீப நாட்களாக சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இப்பாடல் 1995-ம் ஆண்டு வெளியான `அசுரன்' எனும் படத்தில் இடம்பெற்றப் பாடலாகும். பிரபல பாடலாசிரியராக பிறைசூடன் வரிகளில் ஆதித்தன் இசையமைத்திருந்த பாடல்.

விக்ரம் படத்தில் உள்ள சர்ப்ரைஸ் போல இப்பாடலில் உள்ள ஒரு சர்ப்ரைஸ் என்னவென்றால் இப்பாடலை புரோகிராம் செய்தது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இது குறித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்ட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், "திரு.ஆதித்தன் இசையமைத்து, நான் ப்ரோக்ராம் செய்த இந்த பெப்பி விண்டேஜ் பாடல் வைரலாகி வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாடல் VGP ஸ்டுடியோவில் 1995-ல் பதிவு செய்யப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism