பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஹெல்த் ஸ்பெஷல்: நலம் வாழ...

அர்ச்சனா, நிகழ்ச்சித் தொகுப்பாளர்
பிரீமியம் ஸ்டோரி
News
அர்ச்சனா, நிகழ்ச்சித் தொகுப்பாளர்

இந்த செலிப்ரிட்டிகளிடம், அவர்களின் ஹெல்த் அண்ட் ஃபிட்னெஸ் பழக்கவழக்கங்கள் பற்றிக் கேட்டோம்.

அருண் விஜய், நடிகர்

உயரம், எடை? (விரும்பினால் வயதையும் சொல்லலாம்!)

உயரம் 5.11. எடை அப்பப்போ மாறும் என்றாலும், 75 கிலோவுக்குக் கீழ போகமாட்டேன். வயசு எவ்ளோ இருக்கும்னு நினைக்கிறீங்க?!

ஃபாலோ செய்யும் டயட் மற்றும் உணவுப் பழக்கங்கள்?

கார்போஹைட்ரேட் குறைவாவும், புரொட்டீன், நார்ச்சத்து அதிகமாவும் எடுத்துக்குவேன்.

அருண் விஜய், நடிகர்
அருண் விஜய், நடிகர்

சமீபத்துல தெரிஞ்சுக்கிட்ட மருத்துவ விழிப்புணர்வுத் தகவல்?

வெந்நீர்ல கொஞ்சம் மஞ்சள்தூளைக் கலந்து குடிச்சா நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்னு தெரிஞ்சுக்கிட்டு, தினமும் குடிச்சிட்டு வர்றேன்.

நீங்க சூப்பர் ஃபுட்னு நினைக்கிறது?

எல்லா சத்துகளும் இருக்கிற சரிவிகித உணவு. அதுபோல, என்னைப் பொறுத்தவரை சவுத் இண்டியன் உணவு முறைதான் பெஸ்ட்.

ஃபிட்னெஸ்ஸுக்கு?

ரெகுலர் ஜிம் வொர்க் அவுட், வாக்கிங், ஜாகிங் எல்லாமே!

உங்க ஆரோக்கியத்துக்கு நீங்களே எத்தனை மார்க் கொடுத்துப்பீங்க?

90/100

அர்ச்சனா, நிகழ்ச்சித் தொகுப்பாளர்

உயரம், எடை? (விரும்பினால் வயதையும் சொல்லலாம்!)

ஒரு பெண் கலைஞர்கிட்ட இதையெல்லாம் கேட்கக்கூடாதுங்க.

ஃபாலோ செய்யும் டயட் மற்றும் உணவுப்பழக்கங்கள்?

அப்படியெல்லாம் எதுவும் இல்ல. பிடிச்சதைச் சாப்பிடுவேன். அதுதானே சந்தோஷம்!

சமீபத்துல தெரிஞ்சுக்கிட்ட மருத்துவ விழிப்புணர்வுத் தகவல்?

35 வயசுக்கு அப்புறம் ஒவ்வொரு பெண்ணும் கேன்சர் ஸ்கிரீனிங் பரிசோதனை செஞ்சுக்கணும். உடல்நலத்துக்கு சமமான முக்கியத்துவத்தை மனநலனுக்கும் கொடுக்கணும்.

அர்ச்சனா, நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அர்ச்சனா, நிகழ்ச்சித் தொகுப்பாளர்

நீங்க சூப்பர் ஃபுட்னு நினைக்கிறது?

நிலவேம்புக் கஷாயம். வாரத்துக்கு 3 முறை குடிச்சிடுவேன். அதனாலதான் கடந்த ஒன்றரை வருஷமா காய்ச்சல்னு ஹாஸ்பிட்டலுக்குப் போகாம இருக்கேன்.

ஃபிட்னெஸ்ஸுக்கு?

முன்னர் ஜிம்முக்குப் போயிட்டிருந்தேன். இப்போ வேலைகள் இருக்கிறதால போகமுடியலை.

உங்க ஆரோக்கியத்துக்கு நீங்களே எத்தனை மார்க் கொடுத்துப்பீங்க?

ஃபிஸிக்கல் ஹெல்த்துக்கு 80/100, மென்டல் ஹெல்த்துக்கு 80/100.

ரவி, ஏடிஜிபி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு

உயரம், எடை..? (விரும்பினால் வயதையும் சொல்லலாம்!)

169 செ.மீ. 71 கிலோ. 20 வருஷமா இதே எடைதான். அப்பப்போ அதிகபட்சமா 76 கிலோவரை போகும். ஷட்டில் டோர்னமென்ட் விளையாடும்போது மட்டும் 69 கிலோவுக்குக் குறைச்சிடுவேன். வயசு, 57.

ஃபாலோ செய்யும் டயட் மற்றும் உணவுப் பழக்கங்கள்..?

கார்போஹைட்ரேட் குறைவாவும் புரொட்டீன் அதிகமாவும் சாப்பிடுவேன்.

ரவி, ஏடிஜிபி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு
ரவி, ஏடிஜிபி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு

சமீபத்துல தெரிஞ்சுக்கிட்ட மருத்துவ விழிப்புஉணர்வுத் தகவல்?

தேங்காய் எண்ணெய் தர்ற ஆரோக்கிய பலன்கள் நிறைய.

நீங்க சூப்பர்ஃபுட்னு நினைக்கிறது..?

உணவு வகைகளில் சிறந்ததான, மத்திய தரைக்கடல் உணவுகளான தமிழ்நாடு உணவுகள்.

ஃபிட்னெஸ்ஸுக்கு..?

தினம் காலை எழுந்ததும் ஐந்து நிமிஷம் மூச்சுப் பயிற்சி, 35 நிமிஷம் வாக்கிங்.

உங்க ஆரோக்கியத்துக்கு உங்களுக்கு நீங்களே எவ்வளவு மார்க் கொடுத்துப்பீங்க..?

90/100

நகுல், நடிகர்

உயரம், எடை? (விரும்பினால் வயதையும் சொல்லலாம்!)

180 செ.மீ, 75 கிலோ. அடுத்தது, சாய்ஸ்ல விட்டுடலாம்.

ஃபாலோ செய்யும் டயட் மற்றும் உணவுப்பழக்கங்கள்?

டயட்னு எதுவுமில்ல. எப்பவுமே அளவா சாப்பிடணும்னு கொள்கை வெச்சிருக்கேன்.

நகுல், நடிகர்
நகுல், நடிகர்

சமீபத்துல தெரிஞ்சுக்கிட்ட மருத்துவ விழிப்புணர்வுத் தகவல்?

வெள்ளைச்சர்க்கரை உடலுக்கு நிறைய கேடுகளைக் கொடுக்கக்கூடியது. பல நோய்களுக்கும் அதுவே வழிவகுக்குது.

நீங்க சூப்பர்ஃபுட்னு நினைக்கிறது?

பாகற்காய், மஞ்சள். ரெண்டும் என்னோட ஃபேவரைட்.

ஃபிட்னெஸ்ஸுக்கு?

எங்கேயும், எதற்கும் உட்காராம நடந்துக்கிட்டே இருப்பேன். அடிக்கடி சைக்கிளிங் போவேன்.

உங்க ஆரோக்கியத்துக்கு நீங்களே எத்தனை மார்க் கொடுத்துப்பீங்க?

100/100

சுஜா வருணி, நடிகை

உயரம், எடை? (விரும்பினால் வயதையும் சொல்லலாம்!)

உயரம் 5.6. குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் எடை 70 கிலோ ஆகியிருக்கு. வயசு 31.

ஃபாலோ செய்யும் டயட் மற்றும் உணவுப் பழக்கங்கள்?

வீட்டுச் சாப்பாடு சாப்பிடணும், அவ்வளவுதான்.

சமீபத்துல தெரிஞ்சுக்கிட்ட மருத்துவ விழிப்புணர்வுத் தகவல்?

Eat well, burn well. சாப்பிடுற சாப்பாட்டுக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்துட்டா ஆரோக்கியமா இருக்கலாம்.

சுஜா வருணி, நடிகை
சுஜா வருணி, நடிகை

நீங்க சூப்பர்ஃபுட்னு நினைக்கிறது?

இதுக்கும் அதே பதில்தாங்க. வீட்டுச் சாப்பாடு எல்லாமே சூப்பர்ஃபுட்ஸ்தான்.

ஃபிட்னெஸ்ஸுக்கு?

சொன்னா நம்புவீங்களான்னு தெரியாது. குனிஞ்சு, நிமிர்ந்து துணி துவைக்கிறது, பாத்திரம் துலக்கிறதுன்னு வீட்டு வேலைகள் எல்லாத்தையும் நானேதான் செய்வேன்.

உங்க ஆரோக்கியத்துக்கு நீங்களே எத்தனை மார்க் கொடுத்துப்பீங்க?

90/100