Published:Updated:

90'ஸ் கிட்டின் தனித்துவம், 2K கிட்ஸ் படைபலம்! - HBD `ஹிப்ஹாப் தமிழா' ஆதி

ஹிப்ஹாப் தமிழா ஆதி

இன்றைய தேதியில் பல தனியிசைக் கலைஞர்களுக்கும் இளைஞர்களுக்கும் முன் மாதிரியாக இருப்பவர் `ஹிப்ஹாப் தமிழா' ஆதி. அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம்.

Published:Updated:

90'ஸ் கிட்டின் தனித்துவம், 2K கிட்ஸ் படைபலம்! - HBD `ஹிப்ஹாப் தமிழா' ஆதி

இன்றைய தேதியில் பல தனியிசைக் கலைஞர்களுக்கும் இளைஞர்களுக்கும் முன் மாதிரியாக இருப்பவர் `ஹிப்ஹாப் தமிழா' ஆதி. அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி

`ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள்' என்ற பழமொழியை மாற்றி `ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆணும் இருப்பான்' என்ற நம்பிக்கையில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கியவர் ஆதித்யா ராமசந்திரன் வெங்கடபதி என்கிற `ஹிப்ஹாப் தமிழா' ஆதி. இன்றைய தேதியில் பல தனியிசைக் கலைஞர்களுக்கும் இளைஞர்களுக்கும் முன் மாதிரியாக இருப்பவர். அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம்.

`ஹிப்ஹாப்' எனும் கலாசாரம் ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. பார்ட்டிகளில் பாடப்பட்டு வந்த ஹிப்ஹாப், போராட்டங்களில் குரல் கொடுக்க உதவும் கருவியாகவும் விளங்கியது. அதன் பின்னர் வெளிநாடுகளில் பல்வேறு கலைஞர்கள் தங்களது குழுவோடு இணைந்து ஹிப்ஹாப் கலாசாரத்தை வளர்த்தெடுத்தனர். தமிழில் முதன்முறையாக `ஹிப்ஹாப்'பை அறிமுகப்படுத்தியவர் யோகி பியும், அவரது குழுவினர்களும்தான். இளையராஜாவின் `மடை திறந்து' பாடலை அப்படியே ஹிப்ஹாப் ஸ்டைலுக்கு மாற்றி 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டானர் யோகி பி.

HipHop Tamizha Aadhi
HipHop Tamizha Aadhi

இவர்களது வரிசையில் வந்த ஹிப்ஹாப்பர்தான் ஆதி. கோயம்பத்தூரைச் சேர்ந்த இவர், `நான் மியூஸிக் பண்ணப் போறேன் டாடி' என்று சொல்லிவிட்டு சென்னைக்குக் கிளம்பி வந்தார். தன்னை நிரூபிக்க வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் போராடிக்கொண்டிருந்த இவருக்கு, ரேடியோ மிர்ச்சி மூலம் ஒரு வாய்ப்பினைக் கொடுத்தவர் மா.கா.ப. அங்கு அவர் பாடிய `க்ளப்புல மப்புல' பாடல்தான் இவருடைய விசிட்டிங் கார்டாக அமைந்தது. இப்போது உள்ள சூழலில் இந்தப் பாடல் வெளியாகியிருந்தாலும்கூட அது வைரல் ஆகியிருக்கும். ஆனால், கடுமையான விமர்சனங்களின் மத்தியில் உலா வந்திருக்கும். பெண்களை இழிவுபடுத்தும் விதமாக வரிகள் அமைந்திருக்கிறது எனப் பல்வேறு சர்ச்சைகளுக்கு அப்போதே ஆளானார். இருப்பினும், அப்பாடலானது மில்லியன் கணக்கில் வியூஸ் போக, யூ-டியூபிலும் அப்போது கொடிகட்டிப் பறக்க, இண்டிபெண்டண்ட் இசையமைப்பாளராக யூ-டியூபில் தோன்ற ஆரம்பித்தார், ஆதி. அந்த வரிசையில் வெளிவந்த டாப் ஹிட் பாடல்தான் `இறைவா'வும். இதுவரை 16 மில்லியன் வியூஸ்களை அள்ளியிருக்கிறது.

அதே சமயம், 'ஹிப்ஹாப் தமிழா' என்ற பெயர் ஆதியினுடையது மட்டுமல்ல. அது ஒரு பேண்டின் பெயர். அதில் ஆதிக்கு பக்கபலமாக இருப்பவர் ஜீவா. 2005-ம் ஆண்டுதான் ஆதிக்கும் ஜீவாவுக்கும் இடையே நட்பு உண்டானது. இருவரையுமே இசையென்ற ஒன்றுதான் இணைத்தது. 5 வருடங்கள் என்னவெல்லாம் செய்யப்போகிறோம் என்பதைத் திட்டமிட்ட இந்த நட்புக் கூட்டணி, 2010-ம் ஆண்டு தங்களது பேண்டின் பெயரை `ஹிப்ஹாப் தமிழா' என்று பெயரிட்டது. தனித்துவடன் உருவான இப்பெயரின் வாயிலாகத்தான் தற்போது இவ்விருவருமே பயணித்துக்கொண்டிருக்கின்றனர். ஆதி திரைக்கு முன்பும், ஜீவா திறைக்குப் பின்னும். லைம் லைட்டுக்கு அதிகம் வர விரும்பாத ஜீவா, அனைத்துப் பணிகளையும் பின்னாலிருந்தே பார்த்து வருகிறார். ஆதியிடம் ஜீவாவைப் பற்றிக் கேட்டால், `அவருக்கு ப்ரைவஸி ரொம்ப முக்கியமா இருக்கிறதால திரையில எங்கும் வராமல் இருக்கிறார்' எனச் சொன்னார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி
ஹிப்ஹாப் தமிழா ஆதி

குறைந்த வருடத்தில் வேறு ஓர் உயரத்தை அடைந்த சொற்பக் கலைஞர்களில் ஆதி மிக மிக முக்கியமானவர். நண்பன் தட்டிக் கொடுத்து உதவியதையடுத்து, இவரது வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்குத் தூக்கிவிட்டவர் இவர் பாசத்தோடு `அண்ணன்' என்று அழைக்கும் சுந்தர்.சி. தனியிசைக் கலைஞராக இருந்த இவருக்கு, `ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளர் எனும் பதவி உயர்வு கொடுத்தார். அதன் பிறகு பல்வேறு படங்களுக்கு இசையமைத்தார், பாடவும் செய்தார்.

இவர் இசையில் வெளிவரும் ஏதோ ஒரு பாடல் கட்டாயம் ஹிட்டடித்துவிடும், டிரெண்டிங்கிலும் இடம்பெற்றுவிடும். இவர் பாடல்களைக் கேட்கும்போது இனம்புரியா ஒரு எனர்ஜி வந்துவிடும். `கோமாளி'யின் `பைசா நோட்டு', `நட்பே துணை'யின் `வேங்கமவன்', `கேரளா சாங்' போன்ற பாடல்களைத் தொடர்ந்து `மொரட்டு சிங்கிள்', `நான் கொஞ்சம் கறுப்புதான்', `பழகிக்கலாம்' போன்று பல பாடல்கள் எனர்ஜி ரகம்தான். இந்த லிஸ்டில் `நான் சிரித்தால்' `ப்ரேக்அப் சாங்'கும் தற்போது இணைந்திருக்கிறது. மொழிபுரியா குழந்தைகள்கூட இவரது இசையைக் கேட்டதும் துள்ளிக்குதித்து மூவ்மென்ட்ஸ் போடுகின்றனர்.

இதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தாலும் தன்னுடைய ஸ்டைல் ஆஃப் பாடல்களை இவர் இன்றுவரையிலும் விடவில்லை. எந்த மீடியத்தில் எல்லாம் பங்களிக்க முடியுமோ அனைத்திலும் தன்னுடைய பங்களிப்பைக் கொடுத்து வருகிறார். இவருக்கு மிகப் பெரும் அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்த பாடல் `வாடி புள்ள வாடி' எனும் தனியிசைப் பாடல்தான். தன்னுடைய சொந்தக் கதையையே பாடலாக்கினார். அதற்குப் பின் அதைப் படமாகவும் எடுத்தார்.

ஆதி, ஜீவா மட்டும் ஆரம்பித்த இவர்களது நட்பு வட்டாரத்தில் தற்போது எக்கச்சக்க இளைஞர்கள் உள்ளனர். எப்போதும் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ஆதி, அதிலிருந்துதான் தன்னுடைய வட்டத்திற்குள் சேர ஆட்களையும் தேடுகிறார். தான் வளர்ந்துவிட்டோமே என்றில்லாமல் மற்ற இளைஞர்கள் வளரவும் உதவும் மனப்பான்மைகொண்டவர் ஆதி. இப்படித்தான் `ப்ளாக் ஷீப்' விக்னேஷ்காந்த், `டெம்பிள் மங்கீஸ்' ஷாரா, `எரும சாணி' விஜய் என யூ-டியூபைச் சேர்ந்த பல பிரபலங்களை தன் படங்களில் நடிக்க வைத்து நடிகராக்கினார், அவர்களுக்கு நண்பருமானார். அவர்களும் தொடர்ந்து இவருடன் பயணித்தும் வருகின்றனர்.

நடிகர்கள் பாடுவது, இயக்குநர்கள் நடிப்பது, காமெடியன் ஹீரோவாவதும் கோலிவுட்டில் அவ்வப்போது அரங்கேறும் மாற்றங்கள்தாம். சிலர் வெற்றிபெறுவார்கள், சிலர் தோல்வியில் மடிவார்கள். ஆனால், மாற்றம்தானே மாறாமல் இருப்பது. அந்த வகையில் இசையமைப்பாளர்கள் நடிகராவது ஒரு சீசனில் நடந்து வந்தது. விஜய் ஆன்டனி, ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியும் ஆன் ஸ்க்ரீனில் `மீசையை முறுக்கி' வந்தார். படமும் வெற்றிபெற்றது. எல்லோருக்கும் படம் பிடித்திருந்தாலும் அதன் வெற்றியில் முக்கியப் பங்கு 2k கிட்ஸுக்குத்தான் உள்ளது. அதன் பல்ஸை உணர்ந்த ஆதி, `நட்பே துணை'யோடும், `நான் சிரித்தால்' படத்தோடும் வந்தார். முதல் படத்திற்குக் கிடைத்த அதே வரவேற்பு இவ்விரண்டுக்கும் கிடைத்தது.

கோலிவுட்டில் இசையமைப்பாளரைத் தொடர்ந்து நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் ஆதி. இவையனைத்தையும் கண் மூடி கண் திறப்பதற்குள் நிகழ்த்தி முடித்தார். போக, தமிழ் மீதிருக்கும் ஆர்வத்தால் `தமிழி' என்ற டாக்குமென்ட்ரியையும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு சமயத்தில் இவரது `டக்கரு டக்கரு' பாடலும் செம வைரலானது. இப்படித் தற்காலச் சூழலின் பல்ஸ் தெரிந்து துறு துறு இளைஞர்தான் ஹிப்ஹாப் ஆதி. இவர் 90'ஸ் கிட் ஆக இருந்தாலும் இவரது மொத்த டார்கெட்டும் 2k கிட்ஸ்தான். பாடல்களிலும் சரி, படைப்புகளிலும் சரி.

ஹிப்ஹாப் தமிழா ஆதி
ஹிப்ஹாப் தமிழா ஆதி

இசையில் புதிய முயற்சி, இண்டிபெண்டண்ட் இசை, ராப், யூ-டியூப் ஆல்பம், வெவ்வேறு படங்கள் என வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் இருக்கிறார். அது வெற்றியும்பெறுகிறது. அந்த வாழ்த்துகளோடு ஆதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும் சொல்லிக்கொள்ளலாம்!