சினிமா
Published:Updated:

“2K கிட்ஸுக்கு என்னைப் பிடிக்கிறது நல்ல விஷயம்!"

சிவகுமாரின் சபதம் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகுமாரின் சபதம் படத்தில்...

நான் சினிமாவுக்குள்ள வரும்போது யாரும் கிடையாது. நான் அடிபட்டு தப்புப் பண்ணிக் கத்துக்கிட்டு உள்ளே வந்தேன். மியூசிக் பண்ணணும்னு நினைச்சேன், பண்ணிட்டேன்.

ஹிப்ஹாப் தமிழா - தனியிசைக்கலைஞராகப் பயணம் தொடங்கி திரைப்பட இசையமைப்பாளராகி, இப்போது `சிவகுமாரின் சபதம்' படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, இசை, நடிப்பு எனப் பல தளங்களில் கால் பதித்திருக்கிறார்.

`` `சிவகாமியின் சபதம்' தெரியும். `சிவகுமாரின் சபதம்' படத்துல என்ன சொல்லியிருக்கீங்க?’’

“காஞ்சிபுரத்துல ஜாலியா சுத்திக்கிட்டிருக்கிற சிவகுமார்ங்கிற பையன் என்ன சபதம் எடுத்தான். அது அவனுடைய வாழ்க்கையில எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துச்சு. அவன் எடுத்த சபதம் நிறைவேறுச்சா இல்லையாங்கிறதுதான் கதை. போன லாக்டெளனுக்கு முன்னாடி சொந்தக்காரங்க கல்யாணத்துக்காகப் புடவை எடுக்கப் போனாங்க. நானும் அவங்களோட டிரைவரா கார் ஓட்டிட்டுப் போனேன். புடவை எடுக்கிற இடத்துல நமக்கு என்ன வேலை? அதனால, நான் அந்தக் கடைக்காரரோட பேசிக்கிட் டிருந்தேன். அவர் சொன்ன விஷயங்கள்தான் இந்தப் படம் ஆரம்பிக்கக் காரணமா இருந்தது. இது காஞ்சிபுரம், நெசவுத்தொழில் பத்தின படம். காஞ்சிபுரத்தைச் சுத்தி 50 கிராமங்கள் நெசவுத் தொழிலை நம்பி இருந்திருக்கு. இப்போ ரொம்பக் குறைவானவங்கதான் இந்தத் தொழில் பண்ணிட்டிருக்காங்க. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் தேடித்தேடி தெரிஞ்சுக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படி நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயத்தை எல்லோருக்கும் காட்டணும்னு நினைச்சுதான் ‘டக்கரு டக்கரு’ பாடல், ‘தீ வீரன்’ டாக்குமென்ட்ரி எல்லாம் பண்ணினேன். அந்த மாதிரிதான் இதுவும். இந்தப் படத்துல எல்லாருமே புதுமுகங்கள்தான்.”

“2K கிட்ஸுக்கு என்னைப் பிடிக்கிறது நல்ல விஷயம்!"
“2K கிட்ஸுக்கு என்னைப் பிடிக்கிறது நல்ல விஷயம்!"

``சபதம் எடுக்கும் சிவகுமார் கேரக்டர் பத்திச் சொல்லுங்க?’’

``காஞ்சிபுரத்தில் வித்தியாசமான பசங்க குரூப் இருக்கு. யார் ஊருக்குப் புதுசா சுத்திப் பார்க்க வந்தாலும் உங்களுக்கு என்ன வேணும், எங்க போகணும்னு கேட்டு, கூட்டிட்டுப் போய் விடுறாங்க. அப்படி நாங்க போனபோது ஒரு பையன் செம ஆக்டிவா வர்றவங்ககிட்ட கலகலன்னு பேசிக்கிட்டு இருந்தான். அவனுக்குத் தெரியாத இடங்களே இல்லை. அங்கிருந்துதான் என் கேரக்டர் தயாராச்சு. சீவாத தலை முடி, பூப்போட்ட சட்டை, புல்லாங்குழல் பேன்ட்னு நானும் அவங்களை மாதிரியே மாறிட்டேன்.”

``இயக்குநரா எல்லா விஷயத்தையும் கவனிச்சுப் பண்றதே பெரிய சவால். ஆனா, கதை, திரைக்கதை, வசனம், இசை, நடிப்பு, தயாரிப்புன்னு எல்லாமே பண்ணியிருக்கிறது எப்படி இருந்தது?’’

``நான் சினிமாவுக்குள்ள வரும்போது யாரும் கிடையாது. நான் அடிபட்டு தப்புப் பண்ணிக் கத்துக்கிட்டு உள்ளே வந்தேன். மியூசிக் பண்ணணும்னு நினைச்சேன், பண்ணிட்டேன். டைரக்‌ஷன் பண்ணணும்னு நினைச்சேன். நம்மளை நம்பி யாரும் வரமாட்டாங்கன்னு நானே நடிச்சேன். இப்போ சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து படத்தைத் தயாரிக்கவும் செஞ்சுட்டேன். ரொம்ப சந்தோஷம். இருக்கிறது ஒரு வாழ்க்கை. அதுல எல்லாம் கத்துக்கிட்டுப் பண்ணணும், அவ்ளோதான். சினிமாவுக்குள்ள வந்ததே 2015லதான். வந்ததே லேட்னு ஃபீல் பண்றேன்.”

“2K கிட்ஸுக்கு என்னைப் பிடிக்கிறது நல்ல விஷயம்!"
“2K கிட்ஸுக்கு என்னைப் பிடிக்கிறது நல்ல விஷயம்!"

``தனியிசைக் கலைஞர்களுக்கான வாய்ப்புகள் இப்போ நிறையவே இருக்கு. அவங்க சந்திக்கிற சவால்கள் என்னென்ன?’’

“நாங்க காலேஜ் விழாக்கள்ல மேடையில பர்ஃபாம் பண்ணி முடிச்சுட்டு, யூடியூப்னு ஒரு தளமிருக்கு. அதுல எங்களுடைய பாடல்கள் இருக்குன்னு மார்க்கெட்டிங் பண்ணிக்கிட்டிருந்தோம். இன்னிக்கு நிலைமை மாறிடுச்சு. நான் ஆரம்பக்காலத்துல என்னுடைய மிக்ஸ் டேப்களை சி.டி போட்டு விற்பேன். அப்படி விற்றால்தான் காசு. ஒரு கலைஞன் பாட்டு மட்டும் போடாமல் பிஸினஸ் ரீதியாவும் யோசிச்சு, அது மூலமா இயங்கி, ஷோ நடத்திக் காசு சேர்த்து ஆல்பம் பண்ணி மியூசிக் போட்டுன்னு பெரிய ப்ராசஸ். இந்தப் பரபரப்பான மனநிலை இப்போ இருக்கிற கலைஞர்களுக்குக் குறைவா இருக்குன்னு நினைக்கிறேன். நானும் நிறைய தனியிசைக் கலைஞர்களைச் சந்திக்கிறேன். Underground Tribes-னு ஒரு குழு உருவாக்கி அதுல நிறைய தனியிசைக் கலைஞர்களை வெச்சு பாடல்கள் உருவாக்கிட்டிருக்கோம். அதுல நிறைய பேர் பாப்புலராகிட்டாங்க. இன்னிக்கு எல்லோரும் இன்டர்நெட்னு விர்ச்சுவல் உலகத்துக்குள்ள இருக்கிறதனால அவங்களுக்கு கிரவுண்ட் ரியாலிட்டி என்னன்னு தெரியாமல்போயிடுதுன்னு நினைக்கிறேன். சிலர் ஜெயிக்கணும் ஜெயிக்கணும்னு நினைக்கிறாங்க. சிலர் ஒரு வைரல் ஹிட் கொடுத்துட்டாங்கன்னா, ‘நான் யார்னு தெரியலையா?’ங்கிற மாதிரி இருக்காங்க. விர்ச்சுவல் உலகத்துக்கும் யதார்த்த உலகத்துக்குமான பாலத்துல ஒரு கலைஞன் கவனமாப் பயணிக்கணும்.''

“2K கிட்ஸுக்கு என்னைப் பிடிக்கிறது நல்ல விஷயம்!"
“2K கிட்ஸுக்கு என்னைப் பிடிக்கிறது நல்ல விஷயம்!"

``அடுத்து என்னென்ன புராஜெக்ட்?’’

`` `தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக் `துருவா' படத்துக்கு சுரேந்தர் ரெட்டியுடன் வொர்க் பண்ணிருந்தேன். இப்போ அவர் இயக்கிக்கிட்டிருக்கிற `ஏஜென்ட்' படத்துக்கு இசையமைச்சுக்கிட்டிருக்கேன். நான் நிறைய தெலுங்குப் படங்களை வேண்டாம்னு விட்டுட்டேன். அதுல பெரிய ஹீரோக்களுடைய படங்களும் இருக்கு. இங்க மியூசிக், நடிப்புன்னு இருந்ததனால எனக்கு எப்படி மேனேஜ் பண்ணி டேட்ஸ் கொடுத்து வேலை செய்யணும்னு தெரியலை. இப்போ அதெல்லாம் கத்துக்கிட்டேன்.''

“2K கிட்ஸுக்கு என்னைப் பிடிக்கிறது நல்ல விஷயம்!"
“2K கிட்ஸுக்கு என்னைப் பிடிக்கிறது நல்ல விஷயம்!"

``2K கிட்ஸுக்கான ஹீரோ, அவங்களுக்கான மியூசிக் டைரக்டர்னு உங்க அடையாளம் உருவாகிடுச்சே?’’

``நல்ல விஷயம்தானே! இந்தக் குழந்தைகள்தான் நாளைக்கு வளர்வாங்க. அப்போ நமக்கு இன்னும் பத்து பதினைந்து வருஷம் வேலிடிட்டி இருக்குன்னு அர்த்தம். என்னைப் பொறுத்தவரை, நாலு படம் பிளாப் ஆகிடுச்சுனா, யாரும் நம்மளைப் பார்க்கமாட்டாங்க. அப்போ இந்த 90ஸ், 2கே லேபிள் பத்தி யாரும் பேசப்போறதில்லை. நாம ஓடிக்கிட்டே இருக்கவேண்டியதுதான்.''

``நடிகர் விவேக், இயக்குநர் கே.வி.ஆனந்த்னு உங்களுக்கு நெருக்கமான திரைப் பிரபலங்கள் இப்போ இல்லை. அவங்களுடைய இழப்பு எந்த அளவுக்கு பாதிச்சது?’’

``விவேக் சாரெல்லாம் ரொம்ப ஆரோக்கியமான நபர். சந்தோஷமா பாசிட்டிவிட்டியைக் கொடுத்துட்டு இருந்த நபர். ஆனந்த் சார் ரொம்ப ஸ்வீட் பர்சனாலிட்டி. இந்த மாதிரி இழப்புகளைப் பார்க்கப் பார்க்க நாம எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கோம்னு புரிஞ்சது. எல்லோரும் கொஞ்ச நாள் இருக்கப்போறோம். சந்தோஷமா ஜாலியா எல்லோரையும் சந்தோஷப்படுத்திட்டு இருக்கலாம். கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் பத்தித் தேவையில்லாம குழப்பிக்கறத விட்டுட்டு, நடக்கிறதை சந்தோஷமா அனுபவிக்கணும்.''