Published:Updated:

2021 ஆஸ்கர் விருதுகள்... இந்தியாவின் சினிமாவாக `ஜல்லிக்கட்டு' தேர்வானது எப்படி?

ஜல்லிக்கட்டு (மலையாளம்)

பூமலை என்ற மலைப்பிரதேச கிராமத்தில் வர்கீ என்பவரின் பீஃப் இறைச்சி பெரும் பிரபலமாகிறது. நாவிற்கு விருந்தாய் வர்கீ வெட்டும் மாட்டிறைச்சிக்கு எக்கச்சக்க டிமாண்ட்.

Published:Updated:

2021 ஆஸ்கர் விருதுகள்... இந்தியாவின் சினிமாவாக `ஜல்லிக்கட்டு' தேர்வானது எப்படி?

பூமலை என்ற மலைப்பிரதேச கிராமத்தில் வர்கீ என்பவரின் பீஃப் இறைச்சி பெரும் பிரபலமாகிறது. நாவிற்கு விருந்தாய் வர்கீ வெட்டும் மாட்டிறைச்சிக்கு எக்கச்சக்க டிமாண்ட்.

ஜல்லிக்கட்டு (மலையாளம்)

கடந்த ஆண்டு லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கி மலையாளத்தில் வெளியான 'ஜல்லிக்கட்டு' படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ என்ட்ரியாக ஆஸ்கர் விருதில் அயல் சினிமா பிரிவில் போட்டியிட பரிந்ததுரைக்கப்பட்டிருக்கிறது. 'ஈ மா யூ', 'அங்கமாளி டைரிஸ்' உள்ளிட்ட மிக முக்கியமானப் படங்களை இயக்கிய லிஜோ ஜோஸின் 'ஜல்லிக்கட்டு' படமும் கடந்த ஆண்டு சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எஸ். ஷரிஷ் எழுதிய 'மாவோயிஸ்ட்' சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் 'ஜல்லிக்கட்டு'.

பூமலை என்ற மலைப்பிரதேச கிராமத்தில் வர்கீ என்பவரின் பீஃப் இறைச்சி பெரும் பிரபலமாகிறது. நாவிற்கு விருந்தாய் வர்கீ வெட்டும் மாட்டிறைச்சிக்கு எக்கச்சக்க டிமாண்ட். அலையெனத் திரண்டு அதை வாங்கிச்சென்று உண்கின்றனர், மக்கள். மாட்டின் மூக்கனாங்கயிறு, மனிதனின் கையில் இருக்கும் வரைதான் அவன் அதனின் ராஜா. அந்த மூக்கனாங்கயிறு அறுபட்டு, மாடு ஆர்ப்பரித்து ஓடினால் என்னவாகும்? `சாதாரண எருமைதானே... ஊர் மக்கள் ஒன்றுதிரண்டால் பிடித்துவிடலாம்தானே' என்று படத்தின் ஆரம்பத்தில் நினைத்தவர்களுக்கு அதற்கான விடையை நெற்றிப்பொட்டில் அடித்து சொல்லும் படமே, `ஜல்லிக்கட்டு'.

ஆஸ்கருக்கான இந்தியப்பட தேர்வுக்குழு
ஆஸ்கருக்கான இந்தியப்பட தேர்வுக்குழு

2021 ஆஸ்கர் இந்தியப் பட பரிந்துரைக்கான நடுவர் குழுவில் தமிழ்நாட்டிலிருந்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவும், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் இடம்பிடித்திருந்தார்கள்.

"ஆஸ்கர் பரிந்துரைக்காக கொடுக்கப்பட்டிருந்த 27 படங்களையும் பார்த்தோம். இதில் மலையாளப் படமான 'ஜல்லிக்கட்டு' படத்துக்கும், மராத்தியில் வெளியான 'தி டிசைப்பிள்' படத்துக்கும் இறுதிப்போட்டி நடந்தது. இதில், நான் உள்பட பெரும்பாலானோர் 'ஜல்லிக்கட்டு' படத்துக்கு வாக்களிக்க 'ஜல்லிக்கட்டு' இந்தியாவின் பரிந்துரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது"' என்றார் தாணு.

'ஜல்லிக்கட்டு' படத்தை தியேட்டரில் மிஸ் செய்தவர்கள் அமேஸான் ப்ரைமில் பார்க்கலாம்.