Published:Updated:

" `அப்ப நீ ஓனர் இல்லையா' டீக்கடை சீன் அரைமணி நேரத்துல முடிஞ்சிருச்சு!" - `பருத்தி வீரன்' ஆறுமுகம்

மதுர மக்கள் | ஆறுமுகம்

மதுர மக்கள்: "இதே நரசிங்கம் ரோட்டுலதான் என்னோட டீக்கடை இருந்துச்சு. கல்லாவுல நான்தான் உட்கார்ந்திருந்தேன். திடீர்னு சினிமா ஷூட்டிங் வண்டி, கடை முன்னால வந்து நின்னுச்சு. டைரக்டர் இறங்கி வந்தாரு. கடைய சுத்திப்பார்த்தாரு."

Published:Updated:

" `அப்ப நீ ஓனர் இல்லையா' டீக்கடை சீன் அரைமணி நேரத்துல முடிஞ்சிருச்சு!" - `பருத்தி வீரன்' ஆறுமுகம்

மதுர மக்கள்: "இதே நரசிங்கம் ரோட்டுலதான் என்னோட டீக்கடை இருந்துச்சு. கல்லாவுல நான்தான் உட்கார்ந்திருந்தேன். திடீர்னு சினிமா ஷூட்டிங் வண்டி, கடை முன்னால வந்து நின்னுச்சு. டைரக்டர் இறங்கி வந்தாரு. கடைய சுத்திப்பார்த்தாரு."

மதுர மக்கள் | ஆறுமுகம்
"1969-லயே எனக்கும் சினிமாவுக்கும் ஒரு தொடர்பு இருந்துச்சு தம்பி. பத்து வயசுலயே சினிமா தியேட்டர்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். போஸ்டர் ஒட்டுறது, கவுன்ட்டர்ல டிக்கெட் கொடுக்குறதுன்னு எல்லா வேலையும் அத்துப்படி! அப்பெல்லாம் நடிகர் ராமராஜனோட அண்ணனும் என்கூட சேர்ந்துதான் போஸ்டர் ஒட்ட வருவாரு. அப்படியே காலம் இங்கயும் அங்கயும் இழுத்துட்டு போக டீக்கடை வைச்சேன். இதே ஒத்தக்கடை நரசிங்கத்துலதான். அதுதான் டைரக்டர் அமீர் உருவத்துல திரும்பவும் சினிமாவுக்குள்ளயே இழுத்துவிட்டுருச்சு. அமீர்தான் என்னைய இந்த ஜனங்களுக்கு தெரிஞ்ச முகமா மாத்திவிட்டது. காலத்துக்கும் டைரக்டருக்கு நன்றி."
`பருத்தி வீரன்' ஆறுமுகம்
`பருத்தி வீரன்' ஆறுமுகம்
`பருத்தி வீரன்' ஆறுமுகம்
வெள்ளந்தித்தனம் மாறாமல் பேசுகிறார் ஆறுமுகம். பெயரைவிட 'பருத்தி வீரன்' டக்ளஸ் ஓனர் என்பதுதான் ஊருக்குள் அவருக்கான அடையாளம். படம் வெளிவந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த கிடா மீசை மட்டும் மாறாவே இல்லை!

எப்படி கிடைச்சது 'பருத்தி வீரன்' வாய்ப்பு?

"இதே நரசிங்கம் ரோட்டுலதான் என்னோட டீக்கடை இருந்துச்சு. கல்லாவுல நான்தான் உட்கார்ந்திருந்தேன். திடீர்னு சினிமா ஷூட்டிங் வண்டி, கடை முன்னால வந்து நின்னுச்சு. டைரக்டர் இறங்கி வந்தாரு. கடையை சுத்திப்பார்த்தாரு. என்னைய பார்த்து அந்த டேபிள்ல உட்கார்ந்து எழுதிட்டு இருங்கன்னு சொன்னாரு. கூட இருந்த அசிஸ்டென்ட் டைரக்டருங்கதான் எப்படி உட்காரணும்னு சொல்லிக்குடுத்தாங்க. அப்பறம் நடிகர் பொன்வண்ணனும், கார்த்தியும் வந்தாங்க. அப்போ கார்த்திக்கு அதுதான் முதல் படம்! அவர்தான் ஹீரோன்னு எனக்குத் தெரியாது. இன்னும் சொல்லணும்னா அவரோட பேருமே தெரியாது. நடிகர் பொன்வண்ணனை மட்டும் தெரியும். அவுங்க சொல்றதை செஞ்சேன். எல்லாமே அரை மணிநேரத்துக்குள்ளதான்... உடனே டைரக்டர் ஓகேன்னு சொல்லிட்டாரு. மீதி எல்லாமே தியேட்டர்ல நீங்க பார்த்ததுதானே!"

`பருத்தி வீரன்' படத்தில் ஆறுமுகம்
`பருத்தி வீரன்' படத்தில் ஆறுமுகம்

தியேட்டர்ல படம் பார்த்த அனுபவம் எப்படி இருந்துச்சு?

"சின்ன வயசுல இருந்தே தியேட்டர்ல வேலை பார்த்துருக்கேன். ஆனாலும் நம்ம மூஞ்சிய தியேட்டர்ல முதல் தடவ பார்த்தப்போ அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு. நாமெல்லாம் புதுமுகம்... ஷூட்டிங் எடுத்துட்டு போயிட்டாங்க சரி... ஆனாலும் தியேட்டர்ல நாம நடிச்செதெல்லாம் இருக்குமான்னுலாம் சந்தேகத்தோடதான் மதுரை மீனாட்சி தியேட்டர்ல படத்தைப் பார்த்தேன். அந்த டீக்கடை சீனைப் பார்த்துட்டு சனம் கிடந்து சிரி சிரின்னு சிரிச்சுச்சு. நம்ம ஊருக்குள்ள எல்லாரும் ரொம்பவே சந்தோசப்பட்டாங்க."

`பருத்தி வீரன்' படத்தில் ஆறுமுகம்
`பருத்தி வீரன்' படத்தில் ஆறுமுகம்

பருத்தி வீரனுக்கு அப்பறம் என்ன ஆச்சு?

"அதுக்குப்பிறகு தொடர்ச்சியா நிறைய படங்கள் பண்ணுனேன். அதுல குறிப்பிட்டு சொல்லணும்னா 'ரஜினி முருகன்' படத்தோட பஞ்சாயத்து சீன்ல நடிச்சேன். 'கொடி வீரன்' படத்துக்கும் போயிருந்தேன். ரொம்ப நாள் ஷூட்டிங்ல இருந்தேன். ஆனா படம் பார்க்குறப்போ என்னோட சீனே இல்ல. இதெல்லாமே சினிமாவுல சகஜம்தான். இப்போ கொரோனா வந்துருச்சு. அப்படியே எல்லாம் நின்னு போச்சு. அது போக சீரியல்ல நடிக்க கூப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. பார்ப்போம்!"