பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

Kajal Aggarwal
பிரீமியம் ஸ்டோரி
News
Kajal Aggarwal

`கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, `வான்’ எனத் தமிழில் சில படங்களைக் கையில் வைத்திருக்கும் துல்கர் சல்மான், நடன இயக்குநர் பிருந்தாவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க விருக்கிறார்.

`மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய்யின் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நிலையில், படத்தை இயக்க ஏ.ஆர்.முருகதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்துவந்தது.

விஜய்
விஜய்

அதேசமயம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் `நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தை இயக்கிய பாண்டிராஜிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். `கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்குப் பிறகு விஜய்யிடம் கதை சொல்வதற்கான வாய்ப்பு பாண்டிராஜுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், அது நழுவிப்போக, மீண்டும் அந்த வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. வெறித்தன வெயிட்டிங்!

நிர்பயா வழக்குக் குற்றவாளிகள் 2012-ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக திகார் சிறையில் உள்ளனர். சிறையில் வேலை பார்த்த வகையில் மொத்தமாக ரூ.1,37,000 சம்பளம் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக அக்ஷய் 69,000 ரூபாய் சம்பாதித்துள்ளார். வினய் 39,000 ரூபாயும் பவன் 29,000 ரூபாயும் சம்பாதித்துள்ளனர். மற்றொரு குற்றவாளியான முகேஷ் எந்த வேலையும் பார்க்கவில்லை. இவர்களைத் தூக்கிலிட மீரட் சிறையிலிருந்து பவான் ஜல்லார்ட் என்ற ‘ஹேங்மேன்’ திகார் வந்துள்ளார். இவருக்கு நபர் ஒருவருக்கு 15,000  ரூபாய் வீதம் நான்கு பேரைத் தூக்கிலிட ரூ. 60,000 சம்பளமாக வழங்கப்படும். ‘இந்தச் சம்பளம் தன் மகள் திருமணந்தை நடத்த உதவியாக இருக்கும்’ என்று பவான் ஜல்லார்ட் நம்புகிறார்.

ந்திய வங்கிகளை மட்டுமல்ல, கத்தார் தேசிய வங்கியின் கிளையான ஆன்ஷ்பாகர் அண்ட் கோ வங்கியையும் விஜய் மல்லையா விட்டுவைக்கவில்லை.இந்த வங்கியிடமிருந்தும் 30 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்கிய மல்லையா, திருப்பிச் செலுத்தவில்லை.  இந்தக் கடனுக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான தீவில் உள்ள மல்லையாவின் பிரமாண்டமான பங்களாவைக் கையகப்படுத்த அந்த வங்கி முடிவு செய்துள்ளது. சுமார் 1.3 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டத்துடன் கூடிய பங்களாவில் 17 படுக்கையறைகள் உள்ளன. ஹெலிபேட், தியேட்டர், நீச்சல்குளம் போன்ற வசதிகளும் உள்ளன. ஊரு விட்டு ஊரு வந்து...

`கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, `வான்’ எனத் தமிழில் சில படங்களைக் கையில் வைத்திருக்கும் துல்கர் சல்மான், நடன இயக்குநர் பிருந்தாவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க விருக்கிறார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

முழுக்க முழுக்க ரொமான்டிக் என்டர்டெயினராக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், துல்கருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். வான் வருவாள்!

விவாகரத்துக்குப் பிறகு மன அழுத்தத்தில் சிக்கி, குடிப்பழக்கத்தில் விழுந்து பிறகு அதிலிருந்தெல்லாம் போராடி மீண்டதைத் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

 விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

அவருடைய சுய போராட்டக் கதை பல்வேறு தரப்புகளில் இருந்தும் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்திருக்கிறது. அடுத்து `எஃப்ஐஆர்’ என்கிற படத்தில் நடித்துவரும் விஷ்ணுவிஷால் தன்னுடைய மோசமான நாள்களையும் அந்த நேரத்தில் தன் உடல் எப்படி இருந்தது, அதிலிருந்து மீள உடற்பயிற்சி எப்படி உதவியது என்பதையும் விரிவாக எழுதியிருக்கிறார். உடற்பயிற்சி நல்லது!

செலிபிரிட்டிகளுக்கு இன்ஸ்டாவில் ரசிகர்கள் பக்கம் இருக்கும், அவர்களுடைய குழந்தைகளுக்கும் ரசிகர்கள் பக்கம் இருக்கும். செலிபிரிட்டியின் குழந்தையைப் பார்த்துக்கொள்கிற ஒரு ஆயாம்மாவுக்கும் 

இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பக்கம் இருக்கிறது தெரியுமா? அவர் பெயர் சாவித்ரி. கரீனா கபூர் - சயீஃப் அலிகான் தம்பதியின் குழந்தை தைமூர் கானைப் பார்த்துக்கொள்கிற கேர் டேக்கர் இவர். இதற்காக சாவித்ரிக்கு மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் தரப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ‘இது உண்மையா’ என்ற கேள்விக்கு, ‘என் குழந்தையின் பாதுகாப்புக்கு விலைமதிப்பே கிடையாது’ என்றிருக்கிறார் கரீனா. அன்புள்ள அம்மா!

ள்ளநோட்டுகளை ஒழிப்பதற்காகத்தான் டீமானிடைசேஷன் செய்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் என்சிஆர்பியின் சமீபத்திய அறிக்கையின்படி தற்போது புழக்கத்தில் இருக்கிற கள்ளநோட்டுகளில் 56 சதவிகித நோட்டுகள் 2000 ரூபாய் தாள்கள்தானாம். சென்ற ஆண்டில் மட்டும் இந்தியாவில் 46 கோடி அளவுக்கு அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். எல்லாமே பொய்யா மித்ரான்?

தீபிகா படுகோன் ஜேஎன்யூ போராட்டங்களில் கலந்துகொண்டது வைரலானதும், ஊடகம் ஒன்று கங்கனா ரனாவத்திடம் நீங்களும் கலந்துகொள்வீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு கங்கனா, ``நான் இப்படி நாட்டைத் துண்டாட நினைக்கும் துக்கடா குழுக்களோடு எப்போதும் இணையமாட்டேன். நாட்டின் ராணுவ வீரன் இறந்துபோகும்போது கொண்டாடுகிறவர்களோடு ஒருநாளும் கைகோக்க மாட்டேன்’’ என்று கோபமாகச் சொல்லியிருக்கிறார். அவரவருக்கு அவரவர் அரசியல்.

னி வரும் காலம் Artificial Intelligence-களின் காலமாகத்தான் இருக்கப்போகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனம். இந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களை எப்போது வெளியிடலாம் என AI தான் இனித் தீர்மானிக்கப் போகிறதாம். இந்த AI-யை உருவாக்குவதற்கென ‘சினிலைடிக்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். “படம் எவ்வளவு வசூலை ஈட்டும் எனவும் கணித்துவிடும் இந்த AI” எனக் கூறியிருக்கிறது AI-யைத் தயாரிக்கும் நிறுவனம். ‘இது முட்டாள்தனமான முடிவு’ என இதற்கு எதிர்ப்புக் குரல்களும் எழாமல் இல்லை. இந்த AI-ன் எதிர்காலத்தைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நெசமாத்தான் சொல்லுமா..!