பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

பிரியா பவானி ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியா பவானி ஷங்கர்

`கமல் 60’ நிகழ்ச்சிக்காகவும் நெடுநாள்களாக தள்ளிப் போட்டிருந்த அறுவை சிகிச்சைக்காகவும் `இந்தியன் - 2’

புத்தாண்டு மிகச் சிறப்பாக விடிந்திருக்கிறது பூஜா ஹெக்டேவுக்கு! அல்லு அர்ஜுன் ஜோடியாக த்ரிவிக்ரம் இயக்கத்தில் அவர் நடித்த `அல வைகுந்தபுரம்லு' படம் சூப்பர்டூப்பர் ஹிட். கையோடு அடுத்ததாக பிரபாஸோடு ஒரு படம் கமிட்டாகியிருக்கிறார்.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

அவரின் பட வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள் இப்போது பூஜாவின் மனிதத்தைக் கொண்டாடத் தொடங்கியிருக் கிறார்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கு அவர் செய்த உதவி வைரலாக நன்றிகளும் வாழ்த்துகளுமாக இருக்கிறது அவர் டைம்லைன்! சூப்பரு!

90-களில் இந்திய ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட மனிஷா கொய்ராலாவும் மாதுரி தீட்ஷித்தும், சில தினங்களுக்கு முன் நடந்த ‘உமங்’ கலாசார விழாவில் தங்கள் நட்பு பற்றிப் பகிர்ந்துகொண்டனர். வருடந்தோறும் மும்பை காவல்துறையின் சேவையைப் பாராட்டி பாலிவுட் நட்சத்திரங்கள் நடத்தும் இந்த விழாவில், ‘அழகான மனிஷாவைச் சந்தித்தது அன்பான தருணம். நாங்கள் இருவரும் 2001-ல் சேர்ந்து நடித்த ‘லஜ்ஜா’ பட நாள்களை நினைத்தால் ஏக்கமாக இருக்கிறது’ என்று உருகினார் மாதுரி. உடனே மனிஷா அந்த நினைவுகளில் கண்ணீர்மல்க, விழாவில் கலந்துகொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் நெகிழ்ந்துபோய் நின்றார்கள். சிநேகிதியே!

ம் அன்றாட வாழ்வில் ஒன்றாக மாறிவிட்டது ஜிபிஎஸ் தொழில்நுட்பம். அந்தத் தொழில் நுட்பத்தை இந்தியாவிலேயே உருவாக்கியிருக் கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். NAVIC எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் தொழில்நுட்பம் விரைவில் நம் செல்போன்களில் இடம்பெறவுள்ளது. அதற்கென குவால்காம் நிறுவனத்தோடு இணைந்து சிப்செட்களையும் தயாரிக்கவுள்ளது இஸ்ரோ. புதிய இந்தியா!

ஜினிகாந்த் நடித்த `மாப்பிள்ளை’ படத்தை ரீமேக் செய்ததைத் தொடர்ந்து, மற்றுமொரு ரஜினி படத்தின் ரீமேக்கிற்குத் தயாராகி வருகிறார், தனுஷ். பல மேடைகளில் ரஜினியின் `நெற்றிக்கண்’ படத்தை ரீமேக் செய்ய வேண்டும் எனச் சொல்லியிருந்த தனுஷ், தற்போது அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் யார் என்பது இதுவரை முடிவாகாத நிலையில், படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கவிருப்பதாகவும், `நெற்றிக்கண்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் நடித்திருந்த கதாபாத்திரத்தில், கீர்த்தி சுரேஷே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. வெறித்தனம்!

பாலிவுட் கிங் ஷாருக்கான், சமீபத்தில் நடந்த வடஇந்திய ரியாலிட்டி ஷோ ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதில், தன் முதல் மாதச் சம்பளம் ஐம்பது ரூபாயில், தாஜ்மஹாலைச் சுற்றிப்பார்க்கச் சென்ற சுவாரஸ்ய நிமிடங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் ஷாருக், ‘ரயில் டிக்கெட்டிற்காக வைத்திருந்த பணம்போக மீதமிருந்த பணத்தில், ஈ விழுந்திருந்ததையும் பொருட்படுத் தாமல் ஒரு ‘பிங்க் லஸ்ஸி’ வாங்கிக் குடித்தேன். பிறகு வீடு செல்லும்வரை வாந்தி எடுத்துக்கொண்டே சென்றேன்’ என்றிருக்கிறார். இன்ஸ்பையரிங் கான்!

பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்துக்கான பரப்புரைகளில் தீவிரமாக இயங்கியதற்காக, பாலிவுட் ஜோடி ஷில்பா செட்டி - ராஜ் குண்ட்ரா தம்பதிக்கு `சாம்பியன் ஆஃப் சேஞ்ச் 2019’ விருதை வழங்கியுள்ளது ஒரு தன்னார்வ நிறுவனம். விருதை வழங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் காலில் விழுந்து தம்பதி இருவரும் ஆசி பெற்றுள்ளனர். ‘முன்பைவிட தீவிரமாக ஸ்வச் திட்டத்தில் இயங்குவேன் என ட்வீட்டியிருக்கிறார் ஷில்பா! ஸ்வச் ஷில்பா!

சூர்யாவின் 38வது படமான `சூரரைப் போற்று’ ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. வெற்றிமாறன் - சூர்யா இணையும் படம் சூர்யாவின் 40வது படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 39வது படத்தை இயக்கவிருந்த சிவா, தற்போது ரஜினி படத்தில் பிஸியாக இருப்பதால், ஹரி இயக்கத்தில் நடிப்பதற்கு சூர்யா தயாராகிவிட்டார். கதை விவாதம் முடிந்து ஸ்கிரிப்ட்டை ஃபைனல் செய்திருக்கும் ஹரி, விரைவில் அறிவிப்புடன் படப்பிடிப்புக்குக் கிளம்பவிருக்கிறார்.தியேட்டர் அலறுமே!

ஏஆர்சிடிசி-க்கு எதிராகப் போராடி தங்களது உரிமைகளை மீட்டிருக்கிறார்கள் கேரள சேட்டன்கள்! சென்றமாதம் ரயில்வே துறை ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்களில் வழங்கப்படும் உணவுப்பட்டியலில் இருந்து கேரளாவின் பாரம்பர்ய உணவுகளான புட்டுகடலை, நெய்யப்பம், பழம்பொறி, உன்னியப்பம் முதலான உணவுகளை நீக்கி அதற்கு பதிலாக வட இந்திய உணவுகள் மட்டுமே இனி கிடைக்கும் என அறிவித்திருந்தது. இதனால் கொதித்துப்போன கேரளத்தினர் ஆன்லைனில் இதற்கு எதிராகத் தொடர்ந்து எழுதியும் போராடியும் வந்தனர். எர்ணாகுளம் எம்பி ஹிபி ஈடன் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ்கோயலுக்குக் கடிதம் எழுதிக் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்த எதிர்ப்புகளால் இப்போது மீண்டும் உணவுப்பட்டியலில் கேரள உணவுகளைச் சேர்த்திருக்கிறது இந்திய ரயில்வே. கேரளா ராக்ஸ்!

மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது சூடான். உணவுப்பொருள்களின் விலைவாசி உயர்வும் அன்னியச்செலவாணியின் சரிவும் அந்நாட்டையே வறுமைக்குள் தள்ளியிருக்கிறது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள கார்டோம் நகரின் அல்குரேஷி விலங்குகள் காப்பகத்தில் வாழும் ஐந்து சிங்கங்களின் படங்கள் உலகம் முழுக்க வைரலானது. போதிய உணவு கிடைக்காமல் உடல் மெலிந்து காணப்பட்ட அந்தச் சிங்கங்களைக் காக்கக்கோரி நெட்டிசன்கள் கூக்குரல் எழுப்பி வருகின்றனர். பசித்த சிங்கம்!

`கமல் 60’ நிகழ்ச்சிக்காகவும் நெடுநாள்களாக தள்ளிப் போட்டிருந்த அறுவை சிகிச்சைக்காகவும் `இந்தியன் - 2’ படப்பிடிப்பில் சிறிது காலம் கலந்துகொள்ளாமல் இருந்த கமல், பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து மீண்டும் ஷூட்டிங் புறப்படுகிறார். இந்த இடைவெளியில் படத்தின் ஒரு கெட்டப்பிற்காக உடம்பையும் குறைத்திருக்கிறார்.

பிரியா பவானி ஷங்கர்
பிரியா பவானி ஷங்கர்

கமல், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் சில காட்சிகளின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் சென்னையில் நடக்கவிருக்கிறது. சீக்கிரம் கண்ணுல காட்டுங்க!